தொடர்கள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்



மேஷம்


சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். அரசு வகையில் லாபம் கிடைக்கும். தொட்ட காரியம் துலங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனடியாக முடியும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். வெளியூர்ப் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

ஆகஸ்ட் 30 - ம் தேதி வரை சுக்கிரன் 6 - ம் வீட்டில் மறைவதால், கணவன்- மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதன் பிறகு 7 - ம் வீட்டில் ஆட்சி பெற்று, குருவுடன் சேர்ந்து அமர்வதால், கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் வரும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கான பங்கைக் கேட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் தேவையற்ற வீண்வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

சகிப்புத்தன்மையால் சங்கடங்கள் தீரும் தருணம் இது.

ராசிபலன்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

புதனும், சூரியனும் வலுவாக நிற்பதால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பி-கள் உதவிக்கு வருவார்கள். வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பான வேலைகள் சாதகமாகும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகள் உங்களின்  மன ஓட்டத்துக்கு ஏற்ப நடந்துகொள்வார்கள்.

அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் விரைவில் முடியும். சிலருக்கு வீடு மாறவேண்டிய அவசியம் ஏற்படக்கூடும். திடீர் யோகம் உண்டாகும். பல வழிகளில் பணம் வந்து சேரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். ஆகஸ்ட் 31 - ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6 - ம் வீட்டில் குருவுடன் சேர்ந்து மறைவதால் தொண்டைப் புகைச்சல், சளி, காய்ச்சல், சிறுசிறு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள்; போட்டிகளைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

விடாமுயற்சியால் இலக்கை எட்டும் வேளை இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்



மிதுனம்


சூரியனும் புதனும் 3 -ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வங்கிக் கடன் கிடைக்கும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று இப்போது நிறைவேறும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும்.

ஆகஸ்ட் 31 - ம் தேதி முதல் பூர்வபுண்ணியாதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று, குருவுடன் சேர்ந்து அமர்வதால் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக முடியும். குழந்தை பாக்கியம்  சிலருக்குக் கிடைக்கும். வியாபாரத்தில், அடிக்கடி விடுப்பில் சென்று தொல்லை கொடுத்து வந்த  பணியாளர்கள் இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில், உங்களை எப்போதும் எதிரியாக நினைத்த சக ஊழியர்கள், இனி வலிய வந்து நட்போடு பேசுவார்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

சாமர்த்தியத்தால் சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

கடகம்

தன ஸ்தானாதிபதி சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால் தொட்டது துலங்கும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமைவதில் இருந்த தடைகள் நீங்கும். வீடு மாறுவது, கட்டுவது சிறப்பாக முடியும். பேச்சிலே தெளிவு பிறக்கும். கண், பல் மற்றும் முதுகுவலி வந்து போகும்.

2 - ம் வீட்டில் புதனும் அமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உடலில் இருந்த களைப்பு நீங்கும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.  உங்கள் வீட்டுச் சமையலறையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில், வேலையாள்களை விட்டுப்பிடித்து அனுசரித்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கலைத்துறையினருக்குத் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிபெறும் காலம் இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்



சிம்மம்

புதன் சாதகமாக இருப்பதால், சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் உங்களின் தியாகத்தைப் புரிந்து கொள்வார்கள். ராசிநாதன் சூரியன் ராசிக்குள் ஆட்சி பெற்றிருப்பதால், எதிலும் வெற்றி கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை முழுமையாக வெளிப்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.  முகப்பொலிவும் இளமையும் கூடும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வது மட்டுமின்றி, குருவுடன் சேர்ந்து அமர்வதால் வீட்டுக்குத் தேவையான பொருள்கள், ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கித் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் நீங்கும்; கணவன் - மனைவிக்கிடையே இருந்த கசப்பு உணர்வுகள் விலகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளும் உயர்பதவியும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வேற்றுமொழிப்பட வாய்ப்புகள் கிடைக்கும்.

உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும் தருணம் இது.

ராசிபலன்

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

கன்னி

உங்கள் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வி.ஐ.பி-கள் நண்பர்களாவார்கள். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள்.

சூரியன் ராசிக்கு 12 - ம் வீட்டில் நிற்பதால், தந்தை வழியில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். 30 - ம்  தேதி வரை சுக்கிரன் ராசிக்குள் நிற்பதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். ஆகஸ்ட் 31 - ம் தேதி முதல் தனாதிபதி சுக்கிரன், குருவுடன் சேர்ந்து 2 - ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களால் லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில், விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினர், படைப்புகள் பற்றி மற்றவர்களிடம் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டாம்.

புதிய திட்டங்கள் யாவும் நிறைவேறும் வேளை இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன்



துலாம்

சூரியனும் புதனும் லாப வீட்டில் நிற்பதால், அரசாங்க அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி, யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும்.

30 - ம் தேதி வரை ராசிக்கு 12 - வீட்டில் சுக்கிரன் நிற்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராசிநாதன் சுக்கிரன் ஆகஸ்ட் 31 - ம் தேதி முதல் ஆட்சி பெற்று குருவுடன் சேர்ந்து அமர்வதால் அழகு, ஆரோக்கியம் கூடும். வாகனப் பழுது நீங்கும்.  வீண் செலவுகள் இனி குறையும். சுப நிகழ்ச்சிகளில்  கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில், எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

நல்லவர்களின் நட்பால் எதையும் சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்

சூரியன் ஆட்சிபெற்று பலமாக நிற்பதால், நிர்வாகத் திறமை கூடும். புது வேலை அமையும். தந்தைவழிச் சொத்துகள் வந்துசேரும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். பிள்ளைகளால் இருந்த பிரச்னைகள் நீங்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும்.

புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தடைப்பட்ட காரியங்கள் இனி நல்லவிதமாக முடியும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி வந்து சேரும். சொந்தங்கள் தேடி வந்து ஆதரிப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். அதனால் மனதில் நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரி உங்களிடம் சில நேரங்களில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் காலம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன்



தனுசு

புதனும், பாக்கியாதிபதியான சூரியனும் 9 - ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், சவாலான வேலைகளையும் உடனே செய்து முடிப்பீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடன் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வாய்ப்புகள் வரும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. அவரின் உடல் நலம் சீராகும்.

சுக்கிரனும் குருவும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. தடைப்பட்ட காரியங்களை அலைந்து திரிந்தாவது முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி பிறக்கும். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். 2-ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால், அடிக்கடி முன்கோபம் உண்டாகும். உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்.  வியாபாரத்தில் வேலையாள்கள் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். தலைமையால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்.

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் தருணம் இது.

ராசிபலன்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

சூரியனும் புதனும் சேர்ந்து 8 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறியும் வாய்ப்பு வரும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. திடீர்ப் பயணங்களால் ஆதாயமடைவீர்கள். புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வேலைச்சுமை இருந்தாலும் சமாளிப்பீர்கள். முகம் பொலிவு பெறும்; தெளிவு பிறக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர், புது வீட்டுக்குக் குடியேறுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யவேண்டாம். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். குரு 10 - ம் வீட்டில் நிற்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை உண்டு. கலைத்துறையினர் போட்டிகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

அமைதிகாத்து அதிகம் சாதிக்கவேண்டிய வேளை இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

ராசிபலன்



கும்பம்

சூரியன் வலுவாக இருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். மேல்நிலையில் இருக்கும்  அரசியல்வாதிகள் உதவுவார்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். அரசால் அனுகூலம் உண்டு. புதன் சாதகமாக அமர்ந்திருப்பதால் மனஇறுக்கம், கோபம், ஏமாற்றம் குறையும். உறவினர்களுடன் இருந்த உரசல் விலகும். வீண் விவாதங்களை நீங்களே தவிர்ப்பீர்கள்.

நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வழக்குகள் சாதகமாகத் திரும்பும். நண்பர்கள் அவர்களின் தவற்றை உணர்ந்து உங்களிடம் பேசுவார்கள். ஆகஸ்ட் 31 - ம் தேதி முதல் யோகாதிபதி சுக்கிரன் 9 - ம் வீட்டில் ஆட்சிபெற்று, குருவுடன் சேர்ந்து அமர்வதால் ஓரளவு பணப்புழக்கம் உண்டு. புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில், லாபம் சுமாராகத்தான் இருக்கும். வேலையாள்களால் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில், வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத் துறையினரே! உங்களை உதாசீனப்படுத்திய நிறுவனமே மீண்டும் உங்களை அழைத்து புதிய வாய்ப்புகளை வழங்கும்.

பேச்சு சாதுர்யத்தால் காரியங்களைச் சாதிக்கவேண்டிய நேரம் இது.

ராசிபலன்

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

சூரியன் 6 - ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் செல்வாக்கு, புகழ் கூடும். சுபநிகழ்ச்சி களில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். ஆனால், புதன் 6-ல் நிற்பதால், வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யவேண்டாம். நண்பர்கள், உறவினர்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும்.

ஆகஸ்ட் 31 - ம் தேதி முதல் சுக்கிரன் 8 - ம் வீட்டில் மறைவதால் ஓரளவு நிம்மதி பிறக்கும். வெளியூர்ப் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. வேலையில்லாதவர்களுக்குப் புது வேலை கிடைக்கும். குரு 8 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் எதிலும் பொறுமை காப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களை நம்பி, பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். வியாபாரம் விறுவிறுப்படையும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும் காலம் இது.

- 'ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்