Published:Updated:

குரு தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்! #Astrology

குரு தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்! #Astrology

நவகிரகங்களில் பூரண சுப கிரகம் என்று போற்றப்படுபவர் குரு பகவான். உயர்கல்வி, மழலை பாக்கியம் அனைத்துக்கும் காரகத்துவம் வகிப்பவர்.

குரு தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்! #Astrology

நவகிரகங்களில் பூரண சுப கிரகம் என்று போற்றப்படுபவர் குரு பகவான். உயர்கல்வி, மழலை பாக்கியம் அனைத்துக்கும் காரகத்துவம் வகிப்பவர்.

Published:Updated:
குரு தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்! #Astrology

வகிரகங்களில் பூரண சுப கிரகம் என்று போற்றப்படுபவர் குரு பகவான். உயர்கல்வி, மழலை பாக்கியம் அனைத்துக்கும் காரகத்துவம் வகிப்பவர். இவர் இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடம் அதிக நன்மைகளைத் தரும். ஒருவருடைய ஜாதகத்தில் இவர் வலிமை பெற்றவராக இருக்கும்போது, அவருக்கு சகல நன்மைகளும் நடைபெறும்.  இவர் ஜாதகத்தில் இருக்கும் ஸ்தானத்தைப் பொறுத்து அவருக்கு ஏற்படக்கூடிய நன்மைகளையும், குரு வலுக்குன்றியோ அல்லது தோஷம் பெற்றிருந்தாலோ இருந்தால் செய்யவேண்டிய பரிகாரங்கள் குறித்தும் விளக்குகிறார் ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி.

''ஜாதகத்தில் இவர் வலிமை பெற்றிருந்தால், ஒரு மனிதனை மிகப் பெரிய கோடீசுவரனாக்குவார். ஒருவருடைய ஜாதகத்தில் இவர் நல்ல அமைப்பில் அமர்ந்து குருவின் தசையும் நடக்குமானால்  அவர் அளவுக்கு அதிகமான பணத்தை சம்பாதிப்பார். 
ஜோதிடத்தில் சுப கிரகங்களின் வரிசையில்  குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.அவர்களில் நற்பலன்களைத் தருவதில் முதன்மையானவர்.

தன காரகன், புத்திர காரகன் என்று அழைக்கப்படும் இவரே ஒரு மனிதன் சம்பாதிக்கும் பணத்துக்கும், அவனுடைய குழந்தைகளின் நலனுக்கும் காரணமான கிரகம். ஒரு மனிதன் பிறந்ததன் அடிப்படை நோக்கமான வம்ச விருத்திக்கு ஆதாரமான கிரகம். இந்த ஓர் அமைப்பால்தான் அவர் அனைத்து நிலைகளிலும் முதல்வராக வைத்துப் பார்க்கப்படுகிறார்.

பணத்துக்கு அதிபதி குருவே... ஒருவர் மிகப் பெரிய பணக்காரர் ஆவது குருவின் அருளால் மட்டுமே நடக்கிறது. ஜாதகத்தில் அதிகமான வலிமை பெற்ற குரு, ஒரு மனிதனை மிகப் பெரிய கோடீசுவரனாக்குவார். ஒருவருடைய ஜாதகத்தில் இவர் மிக நல்ல அமைப்பில் அமர்ந்து இவரின் தசையும் நடக்குமானால், அவர் அளவுக்கு அதிகமான பணத்தைச் சம்பாதிப்பார். 

ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவிழந்து காணப்பட்டாலும், குரு மட்டும் வலுவிழக்கக் கூடாது என்பது ஒரு மறைமுக விதி. முக்கியமாக எந்த ஒரு யோக ஜாதகத்திலும் லக்னத்தையோ, ராசியையோ, குறைந்த பட்சம் லக்னாதிபதியையோ குரு பார்த்தே தீருவார். அல்லது வலுப்பெற்று இருப்பார்.

செல்வந்தர் யோகம் தரும் அமைப்பில் இருக்கும் குரு, கீழ்க்காணும்  வழிகளில் நன்மைகளைச் செய்வார்.
நல்ல நெறி, நன்னடத்தை, கருணை உள்ளம், ஆன்மிக ஈடுபாடு, தூய சிந்தனை, குழந்தைகள், செல்வம், யானை, பருத்த உடல், அன்பு,  மஞ்சள், உயிர், எதிர்பார்ப்பில்லா ஆன்மிகம், வங்கி, நீதித்துறை, ஆராய்ச்சி, நிதி அமைப்புகள், பணம் புரளும் இடங்கள், கோயில்கள், அமைச்சர், ஆலோசகர், ஆன்மிக நாட்டம், யோகா, இனிப்புச் சுவை, அரண்மனை,  நகைத்தொழில், நேர்மையான விவாதம், ஆழமான அறிவு, அதிர்ஷ்டம், கோடிக்கணக்கில் பணம், சிவத் தொண்டு, அர்ச்சகர், பூசாரி, குணமுள்ள வாழ்க்கைத் துணை, பொன் நிறம், தங்கம், அருள்வாக்கு, சாஸ்திரம், சுகபோகம், அதிர்ஷ்டம், மளிகைக் கடை, நவதானியம், கடலை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்  ஆகியவற்றை அருளக்கூடியவர் வலிமை பெற்ற குருபகவான். 

குரு பகவான் ஜாதகத்தில் வலிமை இழந்து இருந்தாலோ மேற்கண்ட விஷயங்களில் தலைகீழ் நிலைமைகளை  உருவாக்குவார். ஜாதகத்தில், குரு நீசமாகவோ, பகை பெற்றோ இருந்தால், அத்தகைய ஜாதகர்கள் பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. 
அதற்குரிய பரிகாரங்கள்...!

நவகிரகத் தலங்களில் குருவுக்கு முதன்மையான தலமாகத் திகழும் கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடிக்குச் சென்று குருவருள் பெறுவது மிகவும் நல்லது. 

சென்னையில் இருப்பவர்கள், சேக்கிழார் பெருமானால் ஆயிரம் வருடங்களுக்கு முன் போரூரில் எழுப்பப்பட்ட அருள்மிகு ராமநாதீஸ்வரப் பெருமான் திருக்கோயிலுக்கு வியாழன் தோறும் சென்று வழிபடுவது மேன்மை தரும். இத் திருத்தலத்தை 'வட ஆலங்குடி' என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். 

தென் மாவட்டத்தில் உள்ளவர்கள் எம்பெருமான் செந்திலாண்டவனின் அருள்தலமான திருச்செந்தூரில் வழிபடலாம். சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயம், தென்குடித்திட்டை போன்ற தலங்களும் குருவின் அருள் தரும்  கோயில்கள்தான்.      

ஜாதகத்தில் இவர் வலிமையிழந்திருக்கும் நிலையில், வியாழக்கிழமைகளில் அவருக்கு உரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் லட்டுகளை வாங்கி, தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதும், மங்கலகரமான மஞ்சள் நிறப் பொருள்களைப் பிறருக்கு தானம் கொடுப்பதும் சிறந்த பரிகாரங்களாகும்.