தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

செப்டம்பர் 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை

மேஷம்  எதையும் சாதிக்கக்கூடிய  துணிச்சல் வரும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். பணப்புழக்கம்

ராசி பலன்கள்

அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சகோதர வகையில் பிணக்குகள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் கையிலிருந்த பொருள்களை யெல்லாம் விற்பீர்கள். கணிசமாக லாபம் உயரும்.

உத்தியோகத்தில்
விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

நினைத்த காரியங்கள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம் செயலில் வேகம் கூடும். சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடப்பார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். மாமியார், மாமனாரின் அன்பு மழையில் நனைவீர்கள். கணவருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அவர் கோபப்படுவார். அனுசரித்துப் போவது நல்லது. பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

தடைகளை மீறி சாதிப்பீர்கள்.

மிதுனம்  சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தால்

ராசி பலன்கள்

வருமானம் கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் உங்களுக்கு முழு உரிமையைத் தருவார். பிள்ளைகளைப் புதிய பாதை யில் வழி நடத்துவீர்கள். நட்பு வட்டம் விரியும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். 

வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறிச் செல்வீர்கள்.

கனவுகள் யாவும் நனவாகும்.

ராசி பலன்கள்

கடகம்  கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவர் உங்களுடன் கலந்தா லோசித்து, சில முக்கிய முடிவுகள் எடுப்பார். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தில் நீங்கள் சொல்ல வருவதை நாசூக்காகவும் மென்மையாகவும் எடுத்துச் சொல்லுங்கள். எல்லாம் நல்லவிதமாக முடியும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளை அளவாகச் செய்வது நல்லது.

உத்தியோகத்தில் இடமாற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கும். 

எதிலும் வெற்றியடையும் வேளையிது.

 சிம்மம்  சவாலான விஷயங் களைக்கூட சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். வி.ஐ.பி-க்களின் நட்பு

ராசி பலன்கள்

கிடைக்கும். கணவன் மனைவி அந்நி யோன்யம் அதிகரிக்கும். பிறந்த வீட்டின் பெருமைகளைப் பேசி மகிழ்வீர்கள். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கு கிடைக்கும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். புதிதாக ஒரு கிளையைத் தொடங்குவீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் உங்களுக்குப் பெரிதும் உதவுவார்கள்.

பயணங்களால் பயனடைவீர்கள்.

ராசி பலன்கள்

கன்னி புதிய யோசனைகள் மனத்தில் பிறக்கும். பணப்பற்றாக்குறை அகலும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப் பீர்கள். கணவன் மனைவி அந்நி யோன்யம் பெருகும். பிள்ளைகளின் திறமைகள் வெளிப்படும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பதவிகள் தேடி வரும். நட்பு வட்டம் விரியும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகமாகும். பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

வியாபாரத்தில் புதிய  ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். 

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் எரிச்சல் படுத்துவார்கள். எதிலும் நிதானம் தேவை. 

விட்டுக்கொடுத்து வெற்றி பெறுவீர்கள்.

துலாம்  சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். திடீர்ப் பணவரவு உண்டு. கணவருக்கு ஆலோசனைகள்

ராசி பலன்கள்

வழங்குவீர்கள். சபை களில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர வேண்டாம். பிரார்த்தனை பலன் தரும்.

வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். லாபம் கூடும்.

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.

வெற்றிக்கனியைச் சுவைக்கும் வேளையிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்  தடைகள் விலகும். புத்திசாலித் தனம் வெளிப்படும். வி.ஐ.பி-க்களின் அறிமுகத்தால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் உங்களைப் புரிந்துகொண்டாலும், வெளிப்படையாகப் பாராட்ட மாட்டார். பிள்ளைகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிலும் அவசரப்பட வேண்டாம்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய முதலீடுகளைச் செய்ய சரியான நேரமிது.

உத்தியோகத்தில் அதிகாரிகளைக் கலந்தாலோசிக் காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம்.

போராடி வெற்றி பெறுவீர்கள்.

தனுசு  திட்டமிட்ட காரியங்கள் முடியும். பணவரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

ராசி பலன்கள்

அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. கணவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக நடந்துகொள்வார்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும். உறவினர்கள் உங்களின் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். 

வியாபாரத்தில் கடையைப் புதுப்பொலிவு அடையச் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள்.

ராசி பலன்கள்

மகரம்  எதிர்பார்த்த தொகை வந்து சேரும். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் பயத்தைப் போக்குவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். தோழிகளின் சந்திப்பால் புத்துணர்ச்சி அடைவீர்கள். சகோதர வகையில் சங்கடம், திடீர்ப் பயணம், வாகனப் பழுது வந்து செல்லும்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

உத்தியோகத்தில் இதுநாள்வரை இருந்த தொல்லைகள் நீங்கும்.

புதிய பாதையில் பயணிப்பீர்கள்.

கும்பம் புதிய திட்டங்கள் உதயமாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வங்கிக் கடன் கிடைத்து வீடு

ராசி பலன்கள்

கட்டத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள், தோழிகளிடம் இருந்த விரிசல்கள் விலகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவர் அவ்வப்போது உங்கள் மேல் எரிந்து விழுந்தாலும் அன்பு குறையாது. அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

வியாபாரத்தில் சில சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.

உத்தியோகத்தில் தேங்கிக் கிடக்கும் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது.

அலட்சியப் போக்கைத் தவிர்ப்பது நல்லது.

ராசி பலன்கள்

மீனம் கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். கணவருக்கு அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பிள்ளைகள் உங்கள் மனம்கோணாமல் நடந்து கொள்வர். சகோதரி உதவுவார். உறவினர்கள், தோழிகளுடன் பழகும்போது கவனமுடன் பேசுவது நல்லது. எந்த விஷயத்திலும் அத்துமீறி ஆஜராகாதீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலை யாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

புதிய மாற்றங்கள் நிகழும் நேரமிது.

- ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்