
செப்டம்பர் 11 முதல் 24-ம் தேதி வரை
அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்
சுக்கிரனும் குருவும் உங்களின் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்கியம், தைரியம் கூடும். பணப் பற்றாக்குறையைச் சாமர்த்தி யமாகச் சமாளிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். நல்ல செய்திகள் வந்துசேரும்.
பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 16-ம் தேதி வரை ஆட்சி பெற்று நிற்பதால், பிரச்னைகளை எதிர் கொள்ளும் தைரியம் பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் விலகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள். 17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால், திடீர் திருப்பம் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டு.
14-ம் தேதி வரை புதன் 5-ம் வீட்டில் தொடர்வதால், பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவர். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால், சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். கலைத்துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும்.
கடின உழைப்பால் இலக்கை எட்டும் நேரம் இது.

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்
ரிஷபம்
புதனும், சூரியனும் வலு அடைந் திருப்பதால், அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டட வரைபடமும் அப்ரூவலாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
6-ம் வீட்டில் சுக்கிரனும், குருவும் மறைந்திருப்பதால் கணவன், மனைவிக்குள் பனிப்போர் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். அஷ்டமத்துச் சனியும் தொடர்வதால், எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத் துறையினர் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.
நிதானம் தேவைப்படும் காலம் இது.
மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

மிதுனம்
சுக்கிரனும், குருவும் 5-ம் வீட்டில் நிற்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழுதான வாகனத்தைத் தந்து புதிய வாகனம் வாங்குவீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள், ரத்தினங்கள் சேரும்.
ராசி நாதன் புதன் சூரியனுடன் நின்று சாதகமான வீடுகளில் பயணம் செய்வதால், தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். வீடு வாங்குவதும் கட்டுவதும் சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு. செவ்வாயும், கேதுவும் 8-ம் வீட்டில் மறைந் திருப்பதால் டென்ஷன், பண நஷ்டம் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.
வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துகொள்வார். கலைத்துறையினர் புதுமையான படைப்புகளால் கவனம் ஈர்ப்பீர்கள்.
சமயோசித புத்தியால் சாதிக்கும் தருணம் இது.

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்
கடகம்
சூரியன் சாதகமாக இருப்ப தால் வழக்கில் திருப்பம் ஏற்படும். வங்கிக்கடன் உடனடியாக கிடைக் கும். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். புதன் வலுவாக இருப்பதால், சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
சுக்கிரன் 4-ம் வீட்டில் அமர்ந் திருப்பதால் தைரியம் கூடும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேற்றுமொழியினரால் உதவிகள் உண்டு. வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். செவ்வாயும் கேதுவும் சேர்ந்து 7-ம் வீட்டில் நிற்பதால், எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். ஆனால் அதில் வில்லங்கம் வராமல் பார்த் துக்கொள்வது நல்லது. சகோதர வகையில் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்க்கவும்.
வியாபாரத்தில், மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். பாக்கி களை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில், எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்தவேண்டாம். கலைத் துறை யினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.
விட்டதை எல்லாம் பிடிக்கும் வேளை இது.
மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் 16-ம் தேதி வரை ஆட்சி பெற்று நிற்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகப் பேசி காரியங்களைக் கச்சிதமாக முடிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவர். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
17 - ம் தேதி முதல் சூரியன் 2-ல் அமர்வதால், வெளியூர் பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. புதன் சாதக மாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதை கிடைக்கும். நண்பர்கள், உறவினர் கள் தேடி வந்து பேசுவார்கள். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள்.
3-ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால், முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத் தில் லாபத்தைப் பெருக்க, புது விளம்பர யுக்திகளைக் கையாளு வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி கள் புதிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைப்பார்கள். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
விவாதம், போட்டிகளில் வெற்றி பெறும் நேரம் இது.

உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்
கன்னி
சுக்கிரனும், குருவும் சாதக மான வீடுகளில் செல்வதால், புதிய டிசைனில் நகை வாங்குவீர் கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும்.
புதன் 12-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமை, மனக்குழப்பம், உறவினர்கள், நண்பர்களுடன் வாக்குவாதம் வந்து போகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 15-ம் தேதி முதல் புதன் ஆட்சி பெற்று அமர்வதால், உறவினர்கள் தங்களின் தவற்றை உணர்வார் கள். அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். 16-ம் தேதி வரை சூரியன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால், இரவில் தூக்கமின்மை வந்து விலகும். 17-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் முன்கோபம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத் தில், திறமைகளை வெளிப் படுத்த வாய்ப்புகள் வரும்.
கலைஞர்கள், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
அதிரடி செயல்பாடுகளால் முன்னேறும் தருணம் இது.
சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

துலாம்
ராசிக்குள் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், வேலை களை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன், மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள்.
உங்கள் பாக்கியாதிபதி புதன் வலுவான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய எண்ணங்கள் உதயமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பால்ய கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர் கள். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. 16-ம் தேதி வரை சூரியன் லாப வீட்டில் நிற்பதால், அரசாங்கத் தால் அனுகூலம் உண்டு.
17-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால் அலைச்சல், திடீர்ப் பயணம், முன்கோபம் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில், மேலதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும்.
புகழும் பாராட்டும் அதிகரிக்கும் நேரம் இது.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை
விருச்சிகம்
உங்கள் ஜீவனாதிபதி சூரியன் வலுவாக இருப்பதால் தைரியம் பிறக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். உறவினர்கள் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நீங்கள் எதிர்பார்த்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.
புதன் சாதகமாக இருப்பதால் தூரத்துச் சொந்தங்களைச் சந்திப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். குரு 12-ல் மறைந்திருப்ப தால், எவருக்கும் வாக்குறுதி கொடுக்கவேண்டாம்.
சுக்கிரன் 12-ம் வீட்டில் நிற்ப தால், தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்க பணம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில், தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் மதிப்பும் செல்வாக்கும் கூடும்; பதவி உயரும். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவார்கள்.
எதிர்மறை எண்ணங்கள் விலகும் வேளை இது.
மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

தனுசு
புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய முயற்சிகள் நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மார்க்கெட்டில் இழந்ததைப் பிடிப்பீர்கள். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பீர்கள்.
யோகாதிபதி சூரியன் சாதக மான வீடுகளில் செல்வதால், உங்களின் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. பண வரவு அதிகரிக்கும். தந்தையின் உடல்நலன் சீராகும். சுக்கிரனும், குருவும் 11-ம் வீட்டில் நிற்பதால், பணவரவு திருப்தி தரும்.
ஜன்மச் சனி நடைபெறுவதால், உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விட்டதைப் பிடிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். கலைத் துறையினர், மற்றவர்களிடம் கவனமாகப் பேசவும்.
மதிப்பும் செல்வாக்கும் உயரும் தருணம் இது.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்
மகரம்
புதன் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால், எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. மகளுக்குத் திருமணம் கூடி வரும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு வருவார்கள்.
சூரியன் வலுவாக இருப்பதால் ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். அரசாங்க விஷயங்கள் தடையின்றி நிறைவேறும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகம் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பேச்சில் உங்களின் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்கள் உங்கள் ஆலோ சனையை ஏற்பார்கள். தங்க நகைகள் வாங்குவீர்கள்.
குருபகவான் 10-ம் வீட்டில் நிற்பதால், வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாள்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பு வேண்டாம். உத்தியோகத்தில் உங்களின் போராட்டங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கலைத்துறையினர், தங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.
காரியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது.
அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

கும்பம்
சுக்கிரன், குருவும் 9-ம் வீட்டில் நிற்பதால், வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். டி.வி., வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள்.
வி.ஐ.பி-களால் ஆதாயம் உண்டு. அரசாங்கக் காரியங்கள் சுலபமாக முடியும். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். புது வேலை அமையும். சிலர் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போவார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள்.
வியாபாரத்தில், சில தந்திரங் களைக் கற்றுக்கொள்வீர்கள். புதிய பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில், புது அதிகாரி யால் சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். கலைத் துறையினர், தங்களின் மேம்பட்ட திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவார்கள்.
ரகசியம் காக்கவேண்டிய நேரம் இது.

பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மீனம்
சுக்கிரன் சாதகமான நட்சத் திரங்களில் செல்வதால், கடன் பிரச்னைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சூரியன் 16-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால் சவா லான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள்.
17-ம் தேதி முதல் சூரியன் 7-ம் வீட்டில் நுழைவதால், வீட்டில் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குரு 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் இனந்தெரியாத கவலைகளும் வீண்செலவுகளும் அதிகரிக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.
உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கலைத்துறையினரின் நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும்.
அடிப்படை வசதிகள் பூர்த்தியாகும் காலம் இது.
- 'ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்