மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை

மேஷம்

ராசி பலன்கள்

  பதவியிலிருப்பவர்கள் உதவுவார்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறி, சாதனை படைப்பார்கள். கணவர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். வழக்குகள் சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். கணவர்வழி உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரம் புதிய வாடிக்கையாளர்களின் வருகை யால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டியிருக்கும். அதற்கேற்ற பலன் கிடைக்கும்.

புதிய யோசனைகளால் சாதிப்பீர்கள்.

ரிஷபம்

ராசி பலன்கள்

போராட்டங்களைச் சமாளிக்கும் மனோபாவம் அதிகரிக்கும். தைரியமும் உற்சாகமும் பிறக்கும். கணவரும் உறவினர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். பணிகள் அனைத்தும் தடையின்றி முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளுங்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். 

வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்க வேண்டி வரும்.

உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும்.

 திடீர்ச் செலவுகளால் திணறுவீர்கள்.

  மிதுனம்

ராசி பலன்கள்

நீண்ட நாள்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். பூர்வீகச் சொத்துகளால் பலனடைவீர்கள். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மற்றவர்களின் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் உங்களின் கருத்தையோ, விமர்சனத்தையோ கூற வேண்டாம்.

வியாபாரத்தில் வரவு கணிசமாக உயரும்.

உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும்  சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள்.

திடீர்ப் பண வரவினால் மகிழ்ச்சி கூடும்.

கடகம்

ராசி பலன்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். கணவர் உங்களுடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவை யறிந்து செயல்படுவீர்கள்.

உத்தியோகத்தில் எந்த வேலையையும்  உயரதிகாரி களிடம் கலந்தாலோசித்துச் செய்வது நல்லது.

சமூகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்

ராசி பலன்கள் தொட்டது துலங்கும். கணவர் உங்களைப் பற்றிப் பெருமை யாகப் பேசுவார். பிள்ளைகளின் திறனை வளர்க்க உறுதுணையாக இருப்பீர்கள். புதிய நகைகள் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முன்னிலை வகிப்பீர்கள். கணவர் வழி உறவினர்கள் அன்பாகவும் உங்களுக்கு ஆதரவாகவும் பேசுவார்கள். 

வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன்மூலம் உங்கள் நிறுவனப் புகழ் கூடும்.

உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

இங்கிதமான பேச்சால் இலக்கை எட்டுவீர்கள்.

ராசி பலன்கள்

கன்னி

தோல்வி மனப்பான்மை நீங்கும். பண வரவு அதிகரிக்கும். உயர்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கான பங்கு கிடைக்கும். கணவரின் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திச் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்ப்பீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரி களுடன் பேசும்போது கவனம் தேவை.

எதையும் யோசித்துச் செய்வது நல்லது.

துலாம்

ராசி பலன்கள்

திடீர் யோகம் உண்டாகும். கணவர் உங்களின் அனைத்துப் பணிகளிலும்  உதவியாக இருப்பார். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.உறவினர்களின் அன்பான உபசரிப்பால் மனம் மகிழ்வீர்கள். பள்ளி, கல்லூரி தோழிகளைச் சந்திப்பீர்கள்.

வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். உங்கள் பிரச்னைகள் தீரும்.

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள்  உங்களைத் தேடி வரும். வருமானமும் பெருகும்.

 வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

ராசி பலன்கள்

விருச்சிகம்

இழுபறியாக இருந்துவந்த வேலைகள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைக் கொடுத்து முடிப்பீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கணவர் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார். பிள்ளைகள் முன்னேற அவர்களுக்கான வெற்றிப்படிகளை அமைத்துக்கொடுப்பீர்கள். சிலர் அயல்நாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

வியாபாரத்தில்
எதிர்பார்த்ததைவிட லாபம் கூடும். புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேருவார்கள்.

உத்தியோகத்தில் நிலுவைத் தொகை கைக்கு வரும். புதிதாகச் சில சலுகைகளைப் பெறுவீர்கள்.

திடீர்த் திருப்பங்கள் இன்ப அதிர்ச்சியைத் தரும்.

தனுசு

ராசி பலன்கள்

முடியாமலிருந்த காரியங்கள் முடியும். வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும்.  பூர்வீகச் சொத்தால் பலன் அடைவீர்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணித்து அதற்கேற்ப அவர்களை வழி நடத்துங்கள்.

வியாபாரத்தில் புதிய  முதலீடுகளால் வாடிக்கை யாளர்களின் வருகை அதிகரிக்கும். 

உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

ராசி பலன்கள்

மகரம்

குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாள்கள் பிரச்னை களுக்குத் தீர்வு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். கணவர் உயர்ந்த பதவி யில் அமருவார். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தில் பழைய பங்குதாரரை மாற்றிவிட்டு, புதிய பங்குதாரரைச் சேர்ப்பீர்கள்..

உத்தியோகத்தில் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

பக்குவமாகச் செயல்பட வேண்டிய நேரமிது.

கும்பம்

ராசி பலன்கள்

பிரச்னைகளை எளிதாகச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை வெளிப்படும். கல்வி யாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கணவர் உங்களைப் பாராட்டுவார். மகளின் திருமணத் தைச் சிறப்பாக நடத்துவீர்கள். பதவிகள் தேடி வரும். உறவினர்கள் உதவுவார்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கப் பணிகள் சற்றுத் தாமதமாகும். அலைச்சல் அதிகமாகும்.

வியாபாரத்தில் உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள், புதிய பொறுப்புகள் தேடி வரும்.

 செல்வாக்கும் சொல்வாக்கும் கூடும்.

ராசி பலன்கள்

மீனம்

திட்டமிட்ட காரியங்கள் நல்லவிதமாக முடியும். சிலருக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள், தோழிகள் நெருக்கமாவார்கள். உடல்நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அன்பால் மாற்றுங்கள். உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை.

வியாபாரத்தில் போட்டிகளை வென்று லாபம் சம்பாதிப்பீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துச் செல்லுங்கள்.

 வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

- ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்