Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்



மேஷம்

சூரியன் 6 - ம் வீட்டில் நுழைந் திருப்பதால், அரசு வகையில்  அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். புதிய இடத்தில் வேலை அமையும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 

அக்டோபர் 1-ம் தேதி வரை புதன் 6-ம் வீட்டில்  மறைந்திருப்ப தால் உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். வீண்செலவுகள் ஏற்படும்; எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது.

சுக்கிரனும் புதனும் 2-ம் தேதி முதல் 7-ம் வீட்டில் அமர்வதால் மனக்கசப்புகள் நீங்கும். இழுபறி யான வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். 4-ம் தேதி முதல் குரு பகவான் 8-ம் வீட்டில்  மறைவ தால், குடும்பத்தில் சிறு சிறு மனக் கசப்புகள் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளை உடைத்து முன்னேறுவீர்கள். லாபம் பெருகும். உத்தியோகத்தில், உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.

தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரம் இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ராசிபலன்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

சூரியன் 5-ம் வீட்டில்  நிற்பதால் அடிக்கடி முன்கோபம் வரும்; தினமும் தியானம் செய்யப் பழகுங்கள். அரசாங்க விஷயங்கள் தாமதமாகும்.வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.

1-ம் தேதி வரை புதன் 5-ம் வீட்டில் நிற்பதால், புதுப் புது சிந்தனைகள் தோன்றும். நீண்ட நாள்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கான பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

சுக்கிரனும் புதனும் 2 - ம் தேதி முதல் 6-ம் வீட்டில் மறைவதால் பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். குரு பகவான் 4-ம் தேதி முதல் 7-ல் அமர்வதால், குடும்பத்தில் அமைதி திரும்பும். தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும்.

வியாபாரத்தில், மறைமுகப் போட்டிகளை வென்று லாபத்தை அதிகரிக்கச் செய்வீர்கள். அஷ்டமச் சனி தொடர்வதால், வேலையாட்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்தியோகத்தில், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. கலைஞர் களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மனநிறைவுடன் மகிழ்ந்திடும் வேளை இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்



மிதுனம்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், கற்பனை வளம் பெருகும். முகத்தில் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உறவினர்களும் நண்பர்களும் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள்.
விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். சூரியன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்ப தால், தாய்வழியில் ஆதரவு பெருகும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். குறைந்த வட்டிக்கு வங்கிக்கடன் கிடைக்கும்.

7-ம் வீட்டில் சனி அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், கணவன், மனைவிக்குள் அனுசரித் துப் போவது நல்லது. 4-ம் தேதி முதல் குரு 6-ம் வீட்டில் மறைவதால் மறைமுக எதிர்ப்பு வந்துபோகும்.

வியாபாரத்தில் பாக்கிகளை அலைந்து திரிந்து வசூல் செய்ய்ய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். கலைஞர்கள் சிறுசிறு விமர்சனங் களைச் சந்திக்கவேண்டி வரும்.

சிந்தனைத் திறனால் சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கடகம்

சூரியன் 3 - ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தைரியம் கூடும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகளின் உதவி கிடைக் கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு.

சனி பகவான் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்ததால், சாமர்த்தியமாக எதையும் சமாளிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் நல்லது நடக்கும்.

4 - ம் தேதி முதல் குரு பகவான் 5-ம் வீட்டில் நுழைவதால் பதவி, புகழ் தேடி வரும். தாயாரின் உடல் நலம் சீராகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நகைகள் வாங்கு வீர்கள். தடைப்பட்டிருந்த வீட்டுப் பணி தொடங்கும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பணியிடத்தில், வேலை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

புதிய பாதையில் பயணிக்கும் தருணம் இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்



சிம்மம்

புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். சோர்வு நீங்கும்; உடல்நலம் சீராகும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

சனி பகவான் 5-ம் வீட்டில் இருப்பதால், வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு, நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும்; சீரும் சிறப்புமாகக் கல்யாணத்தை நடத்துவீர்கள்.

மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத் தில் உயர் கல்வி அமையும்.

தூரத்து சொந்தபந்தங்கள் உங்க ளைத் தேடி வருவார்கள். 4-ம் தேதி முதல் குருபகவான் 4-ம் வீட்டில்  அமர்வதால், உடல் நலனில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.

வியாபாரத்தில், பற்று-வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் இருந்த தேக்கநிலை மாறும். கலைஞர்கள் விருது மற்றும் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

 உள்ளத்தில் உற்சாகம் பிறக்கும் நேரம் இது.

ராசிபலன்

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

கன்னி

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள் வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால், வீடு கட்டவும் வாங்கவும் எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள்.

சூரியன் ராசியிலேயே நிற்பதால் கண் எரிச்சல், அடிவயிற்றில் வலி வர வாய்ப்புள்ளது.  உடல் நலனில் கவனம் தேவை. அரசு வகை காரியங்கள் தாமதமாகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.

சனி பகவான் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். 4-ம் தேதி முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால் வேலைப்பளு, வீண் செலவுகள் வந்துபோகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.

சுற்றியிருப்பவர்களின் மனதை அறியும் தருணம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன்



துலாம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாகச் செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறு வீர்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும்.

சூரியன் 12-ல் மறைந்து இருப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சனி பகவான் வலுவாகத் திகழ்வதால், எதையும் சாதிக்கும் வல்லமை கிடைக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கொஞ்சம் வளைந்து கொடுத்தால் வானம் போல் நிமிரலாம் என்பதை உணர்வீர்கள்.

2-ம் தேதி முதல் புதன் உங்கள் ராசியில் வந்து அமர்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளுடன்  இருந்த மனவருத்தம் நீங்கும். குரு பகவான் 4-ம் தேதி முதல் 2-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். செல்வாக்கு கூடும்.

வியாபாரத்தில், போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில், பணிகளை மேம்படுத்துவீர்கள். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் வேளை இது.

ராசிபலன்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்

சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகும். பாதச் சனி நடைபெற்றாலும், ஓரளவு பணவரவு உண்டு.

4-ம் தேதி முதல் குருபகவான் ராசிக்குள் நுழைவதால் வேலைப் பளு,  மனஉளைச்சல் வந்து நீங்கும். சுக்கிரனும், புதனும் சாதகமாக நிற்பதால் எதிலும் முன்னேற்றம் உண்டு. கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

இல்லத்தில் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். திருமணம் கூடி வரும். சிலர் வீடு மாறுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

வியாபாரத்தில் பற்று-வரவு உயரும். கடையை மாற்றுவது குறித்து நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களின் திறமைகள் முழுவதுமாக வெளிப்படும்.

எதிலும் ஏற்றம் நிறைந்த வேளை இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன்



தனுசு

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், வீட்டில் நல்லது நடக்கும். மகனுக்கு நல்ல வேலை அமையும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும்.

3 - ம் தேதி வரை லாப வீட்டில் குரு நிற்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆனால், 4-ம் தேதி முதல் குரு 12-ம் வீட்டில் மறைவதால் வீண்செலவு, திடீர்ப் பயணங்கள் வந்து போகும்.

சூரியன் 10 - ம் வீட்டில் வலுவாக நிற்பதால் பணவரவு உண்டு. தந்தை உங்களை ஆதரிப்பார். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

உங்கள் ராசிக்குள்ளேயே சனி பகவான் நிற்பதால்,  உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. வெளி உணவுகளைத் தவிர்க்கவும். சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்கவேண்டி வரும்.

வியாபாரத்தில், புதியவர்கள்  வாடிக்கையாளர்களாவார்கள். வேலையாள்களை அனுசரித் துப் போகவும். உத்தியோகத்தில், வேலைப்பளு அதிகரிக்கும். கலைஞர்கள் வீண் வாக்குவாதங் களில் ஈடுபட வேண்டாம்.

ஏமாற்றங்களிலிருந்து விடுபடும் வேளை இது.

ராசிபலன்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்பற்றாக்குறையிலிருந்து விடுபடுவீர்கள். பழைய கடன்கள் பைசலாகும். எடுத்தக் காரியம் வெற்றியடையும்.

ராசிக்கு 9 - ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தந்தையாரின் உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. அவருடன் சின்னச் சின்ன மோதல்கள் வரும். ஏழரைச்சனி தொடங்கியிருப்பதால் நீங்கள் முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும். ‘எடுத்தோம், கவிழ்தோம்’ என்று பேசுவதெல்லாம் இனி சரி வராது. சிலர் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

4-ம் தேதி முதல் குரு 11-ம் வீட்டில் நுழைவதால் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். விலகிச் சென்ற பழைய சொந்தங்கள் தேடி வருவர்.

வியாபார ரீதியாக அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைஞர்களுக்குச் சம்பளப் பாக்கி வந்து சேரும்.

எண்ணங்கள் பூர்த்தியாகும் நேரம் இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

ராசிபலன்



கும்பம்

புதன் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால், கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சிலர் புது வீட்டில் குடிபுகுவார்கள். குடும்பத்தில் கலகலப்பானச் சூழல் உருவாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.

8-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் சோர்வு, களைப்பு வரும் வாய்ப்புள்ளது. உறவினர்களிடம் வீண்வாக்குவாதங்களில் சிக்கிக் கொள்ளவேண்டாம். கோபத்தைக் குறைக்கப்பாருங்கள்.

சனி பகவான் லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மார்க்கெட் லாபம் தரும். 4-ம் தேதி முதல் குரு 10-ம் வீட்டில் அமர்வதால் அலைச்சல், பயம் வந்து நீங்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள்.

9-ம் வீட்டில் சுக்கிரன் இருப்ப தால், தன்னம்பிக்கை துளிர்விடும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

சோதனைகளைக் கடந்து முன்னேறும் தருணம் இது.

ராசிபலன்

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

சனி பகவான் 10 - ம் வீட்டில் நிற்பதால் சவாலாகத் தெரிந்த சில விஷயங்கள் இப்போது சாதாரணமாக முடிவடையும். உங்களின் அணுகு முறையை மாற்றுவீர்கள். கனிவாகப் பேசுவீர்கள்.

4 - ம் தேதி முதல் குரு பகவான் 9 - ம் வீட்டில் நுழைவதால், அதிரடி மாற்றம் உண்டாகும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மார்க்கெட்  மூலம் பணம் வரும்.

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் வேற்று மொழிக்காரர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எதையும் சமாளிக் கும் மனப்பக்குவம் பிறக்கும். நீண்டநாளாகத் தடைப்பட்டு வந்த காரியங்களை இப்போது முடிப்பீர்கள்.

சூரியன் 7-ம் வீட்டில் தொடர் வதால் வீண் சந்தேகம், குழப்பம், டென்ஷன் வந்துபோகும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில், உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத்துறை யினருக்குச் சம்பளப்பாக்கி கைக்கு வந்து சேரும்.

காத்திருந்து காரியம் சாதிக்க வேண்டிய நேரம் இது.

- 'ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்