Published:Updated:

அனைவருக்கும் ஏற்ற நிலம்...

அனைவருக்கும் ஏற்ற நிலம்...
பிரீமியம் ஸ்டோரி
News
அனைவருக்கும் ஏற்ற நிலம்...

அனைவருக்கும் ஏற்ற நிலம்...

வீடு அமையவிருக்கும் இடத்தில் 6 அங்குல அளவு ஆழம் மண்ணை அப்புறப்படுத்திவிட்டு, வேறு மண்ணைப் பரப்பி, குறிப்பிட்ட இடத்தில் நவதானியத் தாவரங்களை வளர்க்கவேண்டும். அவை வளர்ந்ததும் 7 நாட்கள் தொடர்ந்து பசுவும் கன்றுமாக சேர்த்து மேயவிட வேண்டும். இதன் மூலம் மனையின் குறைகள் நீங்கும்.

அதேபோல் அனைவருக்கும் ஏற்புடையதான ஒரு மனை, கீழ்க் காணும் அம்சங்களுடன் அமைந்திருக்கவேண்டும்.

அனைவருக்கும் ஏற்ற நிலம்...

நிறம்: மஞ்சள், சிவப்பு, வெளுப்பு, கறுப்பு.

மணம்: தாமரைப்பூ, தானியம், பசு ஆகியவற்றின் மணத்துக்கு ஒப்பான வாசனை.

சுவை: கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, உப்பு, இனிப்பு.

வடிவம்: தெற்கு, மேற்குப் பகுதிகள் உயரமாகவும், கிழக்கு மற்றும் வடக்கு தாழ்வாகவும் அமைந்து, அங்கு நீரூற்றும் அமைவது சிறப்பு. திசை கோணலாக இல்லாமலும், நீள்சதுரமாகவும்,

சம அளவு உடையதாகவும் உள்ள நிலம் அனைவருக்கும் ஏற்றதாகும். மேலும், சிறுமணல் நிறைந்ததும், மரங்களின் வேர்கள், பாழ்கிணறுகள், கூழாங்கற்கள், சாம்பல், உமி போன்றவை இல்லாததும், அனைத்து வகை விதைகளும் முளைக்கக்கூடியதுமான பூமி சகலருக்கும் நன்மை பயப்பதாகும்.

- கே.குமரன், மதுரை-2

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz