ஜோதிடம்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

அக்டோபர் 9 முதல் 22 வரை

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன்


மேஷம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஃப்ரிட்ஜ், டி.வி, வாகனம் ஆகியவற்றைப் புதிதாக வாங்குவீர்கள். உறவினர், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு கள் மறையும். தெளிவாக முடிவெடுப்பீர்கள்.

கணவன்-மனைவி இருவரும்  ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். பிள்ளைகளின் வருங் காலம் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். 16-ம் தேதி வரை சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால் மதிப்பு உயரும். சிலர், உங்கள் உதவியை நாடுவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தாயாரின் உடல்நலம் சீராகும். ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 10 - ம் வீட்டில் அமர்ந்துள்ளதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். 

வியாபாரத்தில், நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில், உங்களை நம்பி  மிக முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப் படும். கலைஞர்களுக்கு, எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும்.

புதிய பாதையில் பயணிக்கும் தருணம் இது.

ராசிபலன்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

குரு பகவான் வலுவாக இருப்பதால், பிள்ளை களால் பெருமை அடைவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். சவாலான விஷயங் களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கடன் கட்டுக்குள் வரும்.

புதனும் சுக்கிரனும் 6-ம் வீட்டில் நிற்பதால் தொண்டைவலி, சளித் தொந்தரவு, ரத்த அழுத்தம், வாகனச் செலவுகள் வரக்கூடும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் பகை, நண்பர்களுடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால், வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

16-ம் தேதி வரை 5-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். ஆனால், 17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால், திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசு வகையில் அனுகூலம் கிடைக்கும்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூல் ஆகும். பங்குதாரர்கள் உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பார் கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரவாக இருப்பார். கலைஞர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

மனம் தளராமல் போராடவேண்டிய வேளை இது.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன்மிதுனம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வரவேண்டிய பணம் வந்துசேரும். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். தடைப்பட்ட சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீட்டில் கல்யாணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தரும்.

புதன் சாதகமாகப் பயணிப்பதால், பிரச்னைகளைச் சாதுர்யமாகச்  சமாளிப்பீர்கள். 16-ம் தேதி வரை 4- ம் வீட்டில் சூரியன் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு.

17-ம் தேதி முதல் 5-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், முன்கோபம் வாக்குவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் இருக்கும். அவர்களின் உடல்நலனில் கவனம் தேவை.

செவ்வாயும் கேதுவும் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால், கணவன் - மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாள்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத் தில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும்.

பொறுமையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது.

ராசிபலன்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கடகம்

சுக்கிரன் வலுவாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். பெற்றோரை அனுசரித்துச் செல்லவும்.

புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால், எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்வீர்கள். வீட்டை விரிவு படுத்திக் கட்டுவீர்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக செய்துமுடிப்பீர்கள்.நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும்.

எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். செவ்வாயும் கேதுவும் 7-ம் வீட்டில் நிற்பதால் தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

வியாபாரத்தில், பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கை யாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில், பணிகளை தாமதமின்றி முடிப்பீர்கள். உயரதிகாரி பாராட்டும்படியாக நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் வேளை இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன்சிம்மம்

ராசிக்கு 3-ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. பழைய கடன்களைப் பைசல் செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கணவன், மனைவிக்குள் மனம்விட்டுப் பேசி முடிவெடுப்பீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்த உதவி செய்வீர்கள்.

17-ம் தேதி முதல், சூரியன் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால், திடீர் யோகம் உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். செவ்வாயும், கேதுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்குப் புதிய அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரியைப் பற்றிச் சக ஊழியர் களிடம் விமர்சனம் செய்யவேண்டாம். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

சகிப்புத்தன்மையால் சாதிக்கும் தருணம் இது.

ராசிபலன்

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

கன்னி

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தன்னம்பிக்கை துளிர்விடும். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக அமையும். வீட்டுக்குத் தேவையான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குவீர்கள். தொல்லை தந்து வந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால், தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். செவ்வாயும் கேதுவும் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், பழைய சிக்கலைத் தீர்க்க வழி பிறக்கும். புதிய அணுகுமுறையால் சொத்துப் பிரச்னைகள் தீரும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். 

சூரியனின் சஞ்சாரம் சரியில்லை. முன்கோபத்தைத் தவிர்க்கவும். வெளியிடங்களில் பேசும்போது, நிதானம் தேவை. வியாபாரத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக நம்பிக்கையான நபர்களிடம் ஆலோசனை செய்வீர்கள். வேலையாள்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைஞர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

துடிப்புடன் செயல்படும் நேரம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன்துலாம்

சுக்கிரன் ராசியிலேயே நிற்பதால், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.  சுபகாரிய நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். கணவன், மனைவிக்குள் மனம்விட்டுப் பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

புதனும் ராசிக்குள் அமர்ந்துள்ள தால், பணவரவு உண்டு. கடனைப் பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். செவ்வாயும் கேதுவும் 4-ம் வீட்டில் நிற்பதால், தைரியமாக எதையும் செய்து முடிப்பீர்கள். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். குடும்பத் தினருடன் ஆலோசித்துப் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர் கள். சூரியன் 17 - ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால், பேச்சில் கவனம் தேவை; வீண் வாக்குவாதங் களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில், குறை கூறியவர்களும் உங்களின் அருமையைப் புரிந்துகொள்வார்கள். கலைத்துறையினர், புதிய சிந்தனை களால் சிறப்படைவார்கள்.

சுற்றத்தைப் புரிந்துகொள்ளும் நேரம் இது.

ராசிபலன்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்


புதன் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால், புத்திசாலித்தனம் வெளிப்படும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். புது வேலை கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க தருணத்தில் கிடைக் கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வரவேண்டிய பணம் கைக்கு வரும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்றுவருவீர்கள்.

16-ம் தேதி வரை சூரியன் 11-ல் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. 17-ம் தேதி முதல் சூரியன் 12-ம் வீட்டில் மறைவதால் அலைச்சல், திடீர்ப் பயணங்கள் உண்டு. செவ்வாயும் கேதுவும் வலுவாக இருப்பதால் சாதிக்கும் எண்ணம் பிறக்கும். பல வழிகளில் பணம் வரும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.

வியாபாரத்தில், புதிய யுக்தி களால் வெற்றி காண்பீர்கள்.உத்தியோகத்தில், தேங்கிக் கிடக்கும் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.

மனநிம்மதியால் மகிழும்  காலம் இது.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன்தனுசு

புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். உடன்பிறந்தவர்களின் சுயநலத்தை நினைத்து வருந்துவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டில் இருப்பவர்களும் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.

செவ்வாயும் கேதுவும் 2-ம் வீட்டில் நிற்பதால், சாதுர்யமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு உண்டு; எதிர்பாராத செலவுகளும் உண்டு.

வியாபாரத்தில், போட்டிகளை எளிதில் சமாளிப்பீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில், உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படும். உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

சாமர்த்திய செயல்களால் சாதிக்கும் தருணம் இது.

ராசிபலன்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் பயணிப்பதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம், உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

17-ம் தேதி முதல் சூரியன் 10-ம் வீட்டில் நுழைவதால், புதுப் பதவி கிடைக்கும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். தாய்வழி உறவுகளிடம் மனக்கசப்புகள் நீங்கும்.

ராசிக்குள் செவ்வாயும் கேதுவும் நிற்பதால் தைரியம் கூடும். சகோதரர்களால் பயனடைவீர்கள். அவ்வப்போது முன்கோபம், டென்ஷன் வந்துபோகும்.  வழக்குகள் சாதகமாகும்.

வியாபாரத்தில், தேங்கிக்கிடக்கும் பழைய சரக்குகளைச் சாமர்த்திய மாக விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாள் களிடம் கண்டிப்பு வேண்டாம். உத்தியோகத்தில், தேங்கிக் கிடக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும். உங்கள் திறமைகளுக்கு உரிய பரிசும் பாராட்டும் கிடைக்கும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப் படுவார்கள். 

மனதில் புத்துணர்ச்சி பெருகும் காலம் இது.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

ராசிபலன்கும்பம்

சுக்கிரன் வலுவாக அமர்ந்திருப் பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். முகப்பொலிவு கூடும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

வாழ்க்கைத்துணையின் உடல் நலம் சீராகும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் பயணிப்பதால், பிரபலங்களின் நட்பு  கிடைக்கும். அவர்கள் வீட்டில் நடைபெறும் சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். நெடுநாளாகப் போக நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

17-ம் தேதி முதல் சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தை யுடன் கருத்துமோதல்கள் வர வாய்ப்புள்ளது. செவ்வாயும் கேதுவும் 12-ல் நிற்பதால் திடீர்ப் பயணங்கள், வீண் செலவுகள் வந்துபோகும்.வியாபாரத் தில் லாபம் பெருகும். சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். எவரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். கலைஞர்களுக்கு வருமானம் குறைவுதான். எனினும், எதிர்காலத்துக்கான நல்லதொரு அடித்தளம் அமையும்.

கிடைத்ததை வைத்து சுகமடையும் நேரம் இது.

ராசிபலன்

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

புதன் சாதகமாக இருப்பதால், சமயோசித அறிவால் சாதிப்பீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்துபோகும்.

சுக்கிரன் 8 - ம் வீட்டில் இருப்ப தால், கையில் பணம் தேவையான அளவு இருக்கும். ஆனால் சூரியன் சாதகமாக இல்லாததால், அரசாங்கக் காரியங்கள் தாமதமாகவே முடியும்.  சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள்.

செவ்வாயும் கேதுவும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், ஆளுமைத்திறன் அதிகரிக்கும். ஒரு சொத்தை விற்று விட்டு புதிதாக சொத்து வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

வியாபாரத்தில் போட்டிகள் உண்டு.உத்தியோகத்தில் உயரதிகாரியுடன் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். கலைஞர்கள் சிந்தித்துச் செயல்படவும்.

சிரமங்களைத் தாண்டி முன்னேறும் நேரம் இது.

- ‘ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்