Published:Updated:

அதிர்ஷ்ட நாள்கள்!

அதிர்ஷ்ட நாள்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அதிர்ஷ்ட நாள்கள்!

அதிர்ஷ்ட நாள்கள்!

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விசேஷமானதாகும். சுப காரியங்களில் ஈடுபடலாம். ருத்திரனை வழிபடுவது நல்லது. மாணிக்க கல் அணியலாம்.  1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டம் தருபவை. கிழக்கு திசையில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரஞ்ச் நிறம் ராசியானது.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு திங்கள் கிழமை விசேஷம்; முக்கியமான காரியங்களில் ஈடுபடலாம். கௌரியை வழிபடலாம். வெண் முத்து அணியலாம். 1, 3, 9 ஆகிய எண்களால் அதிர்ஷ்டம் உண்டு. வடமேற்கிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எண் 7 அதிர்ஷ்டம் தரும். வெள்ளை நிறம் ராசியானது.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு வியாழக்கிழமை விசேஷம். ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடவும்.  கனகபுஷ்பராகம் அணிவதன் மூலம் அதிர்ஷ்டம் கூடும். 2, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. வடகிழக்கு திசையில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். மஞ்சள் நிறம் ராசியானது.

அதிர்ஷ்ட நாள்கள்!

4,  13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதன், வெள்ளிக் கிழமைகள் விசேஷமானவை. குறிப்பிட்ட கிழமைகளில் முக்கிய பணிகளில் ஈடுபடலாம். கோமேதகம் அணியலாம். 1, 5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. துர்கையை வழிபடவும். தென்மேற்கு திசையிலிருந்து நலம் உண்டாகும். கறுப்பு நிறம் ராசியானது.

5, 14,  23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதன் கிழமை சிறப்பானது. அந்தக் கிழமையில் முக்கிய பணிகளில் ஈடுபடலாம். 5, 6 எண்கள் அதிர்ஷ்டமானவை. மரகதக்கல் அணிவது நல்லது. மகாவிஷ்ணுவை வழிபடுவதால் நன்மை பெருகும். வட திசையிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். பச்சை நிறம் ராசியானது.

6,  15,  24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பானது. அன்று முக்கியமான காரியங்களில் ஈடுபடலாம். வைரக்கல் அணிவது நல்லது. 5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. மகாலட்சுமி வழிபாடு சாலச்சிறந்தது. தென்கிழக்கு யோகமானது. இளநீலமும், வெண்மை நிறமும் ராசியானவை.

7,  16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு திங்கள்கிழமை சிறப்பானது; அன்று முக்கிய பணிகளில் ஈடுபடலாம். வைடூரியம் அணியலாம். வடமேற்கு திசை சிறப்பு தரும். 5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. கணபதியை வழிபடுவதால் நலம் கூடும். மெரூன் நிறம் ராசியானது.

8,   17,  26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதன், வெள்ளி, சனிக்கிழமைகள் சிறப்பானவை. நீலக்கல் நல்லது. மேற்கி லிருந்து நலம் உண்டாகும். 5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகியோரை வழிபடலாம். கறுப்பு, கருநீல நிறம் ராசியானவை.

9,  18,  27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், வியாழக்கிழமைகள் விசேஷமானவை. செம்பவளம் அணியலாம். தென் திசையிலிருந்து நலம் உண்டாகும். 1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. முருகனை வழிபடவும். சிவப்பு நிறம் ராசியானது.

- ரமணா, சென்னை-4.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz