ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

ராசிபலன்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்ஜனவரி 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை

வீடு, வாகன யோகம்!

ராசிபலன்
##~##

மேஷம்: நெஞ்சுறுதி கொண்டவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சவால்களை சமாளிப்பீர்கள். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும்.  7-ம் வீட்டில் சனியும், ராகு, கேதுவின் சஞ்சாரமும் சரியில்லாததால்... வீண் செலவு, வேலைச்சுமை இருக்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 10-ம் வீட்டில் நுழைவதால் புது வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பொருள் சேரும் காலம்!

ராசிபலன்

ரிஷபம்: இடைவிடாமல் உழைப்பவர்களே! சனி வலுவாக 6-ல் அமர்ந்திருப்பதால், போட்ட திட்டங்கள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். வீடு கட்ட, வாங்க எதிர்பார்த்த லோன் கிடைக்கும். புண்ணிய தலங்கள் செல்வீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 9-ல் நுழைவதால், டென்ஷன் வந்து நீங்கும். சர்ப்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் சரியில்லாததால்... நம்பிக்கையின்மை, ஏமாற்றம், மன இறுக்கம் ஏற்படலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும்.

தொட்ட காரியம் வெற்றியாகும்!

ராசிபலன்

மிதுனம்: சொன்ன சொல் தவறாதவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரை கவருவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். 5-ல் சனி இருப்பதால், அவ்வப்போது முன்கோபம், வீண் விரயம் ஏற்படும். 15-ம் தேதி முதல் சூரியன் 8-ல் மறைவதால் தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.    

இல்லம் சங்கீதம்!

ராசிபலன்

கடகம்: சிந்தனைவாதிகளே! சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். கணவர் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார்கள். அயல்நாட்டில்இருப்பவர்களால் உதவிகள் உண்டு. புதன் 6-ல் மறைந்திருப்பதால்... உடல் உபாதை, உறவினர்களால் சங்கடங்கள் வந்து விலகும். குரு 10-ல் தொடர்வதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

உங்கள் புகழ் உச்சத்தில்!

ராசிபலன்

சிம்மம்: தர்மத்தின் வழி நடப்பவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைவார். 10-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் அமர்வதால், சோர்வு நீங்கி உற்சாமடைவீர்கள். வாகனப் பழுது நீங்கும். 14-ம் தேதி வரை ராசிநாதன் சூரியன் 5-ல் நிற்பதால், பிள்ளைகளால் செலவுகள் இருக்கும். அரசு விவகாரங் களில் அலட்சியம் வேண்டாம். வியா பாரத்தில் புது சரக்குகளை கொள் முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார்.

                        மறப்போம்... மன்னிப்போம்!

ராசிபலன்

கன்னி: வாரி வழங்குபவர்களே! ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளின் திறமைகளை வளர்க்க பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். உங்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். 10-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவருடன் கருத்து மோதல் வரும். செவ்வாய் 12-ம் வீட்டிலும், பாதச் சனியும் இருப்பதால்... வீண் செலவு ஏற்படலாம். 4-ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள்.  

முன்ஜாக்கிரதை முக்கியம்!

ராசிபலன்

துலாம்: மனசாட்சிக்கு மதிப்பளிப்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால்... சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.  சனியின் போக்கும்... ராகு, கேதுவின் சஞ்சாரமும் சரியில்லாததால், முன் ஜாக்கிரதையுடன் செயல்படுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 5-ம் தேதி முதல் 7-ம் தேதி மாலை 3.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக் கும். வியாபாரத்தில், ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.      

                      தைரிய லட்சுமி துணை இருப்பாள்!

ராசிபலன்

விருச்சிகம்: மேன்மையானவர்களே! ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால், தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர் கள். நட்பு வட்டம் விரியும். அயல்நாட்டில்இருப்பவர்களால் அனுகூலம் உண்டு. சனியும், குருவும் சரியில்லாததால்... வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்து போகும். 7-ம் தேதி மாலை 3.30 மணி முதல் 9-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப் படுவீர்கள்.    

ஆசைகள் கைகூடும் நேரம்!

ராசிபலன்

தனுசு: தன்மானம் அதிகம் உள்ளவர்களே! குருபகவான் வலுவாக இருப்பதால், நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும். கணவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. சொந்த பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 10, 11 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. 14-ம் தேதி வரை ராசிக்குள் சூரியன் நிற்பதால்... மன உளைச்சல், உடல் உபாதை வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும்.  

 ரசனைக்கேற்ற வீடு!

ராசிபலன்

மகரம்: நேர்மையாளர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள்.  உறவினர், தோழிகளின் வீடு தேடி வருவார்கள். செவ்வாய் 8-ல் நிற்பதால், வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். உறவினர் வகையில் பிரச்னைகள் வரலாம். 12-ம் தேதி முதல் 14-ம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், நிதானித்து செயல்படப்பாருங்கள். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும்.        

சாமர்த்தியம் உங்கள் வசம்!

ராசிபலன்

கும்பம்: பொறுமையின் சிகரங்களே! ராசிநாதன் சனிபகவான் வலுவாக இருப்பதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குரு 3-ல் தொடர்வதால், புதிய முயற்சிகள் தாமதமாக முடியும். 14-ம் தேதி காலை 9 மணி முதல் 16-ம் தேதி நண்பகல் 12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், முன்கோபத்தை தவிருங்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால்... திடீர் பயணம், செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.              

 பணம், நகையை பத்திரப்படுத்துங்கள்!

ராசிபலன்

மீனம்: துணிச்சல் மிக்கவர்களே! சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால்... நினைத்தது நிறைவேறும். சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். மாமியார், நாத்தனாருக்கு உதவுவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் பணம், நகையை கவனமாக கையாளுங்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். 16-ம் தேதி நண்பகல் 12 மணி முதல் 17-ம் தேதி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால், முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள்.