Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

அக்டோபர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

ராசி பலன்கள்

அக்டோபர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம்  செயலில் வேகம் கூடும். இங்கிதமாகப் பேசி எதையும் சாதிப்பீர்கள். பிரபலங்கள்

ராசி பலன்கள்

நண்பர்களாவார்கள். கணவருடன் இருந்த பனிப்போர் விலகும். பிள்ளை களின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவுவார்கள். உடல்நலனில் அக்கறை தேவை. பணம் பல வழிகளில் வந்தாலும் செலவுகளும் அதற்கேற்ப இருக்கும்.

வியாபாரத்தில் புதிதாகச் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும்.

எதிர்மறை எண்ணங்களை விரட்டுவது நல்லது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிஷபம் தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். பணப்பற்றாக்குறையைச் சாமர்த்தியமாகச்

ராசி பலன்கள்

சமாளிப்பீர்கள். உறவினர்கள் உங்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப் பார்கள். கணவருடன் வாக்குவாதத் தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். வீட்டு விஷயங் களை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபத்துக்கு எந்தவிதக் குறையும் இருக்காது.

உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக்காட்டும் தவறுகளை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

பலம், பலவீனத்தை உணரும் வேளையிது.

மிதுனம்  சமூகத்தில் செல்வாக்கு உயரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப

ராசி பலன்கள்

நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக நடந்துகொள்வார்கள்.  

வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றிவிட்டு, புதியவர்களை நியமிப்பீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நிலுவைத் தொகை கைக்கு வரும்.

 நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் தருணமிது.

கடகம்  கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக்காட்டுவீர்கள். தோற்றப்

ராசி பலன்கள்

பொலிவு கூடும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவரின் ஆதரவு உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்குத் திட்டமிடுவீர்கள். சகோதரர் வகையில் அலைச்சலும் செலவுகளும் இருக்கும்.

வியாபாரத்தில் புதிய முயற்சியில் செயல்படுவீர்கள்.

உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக நெருக்கடிகள் விலகும்.

 சமூகத்தில் அந்தஸ்து உயரும் நேரமிது.

சிம்மம்  நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவன் மனைவி

ராசி பலன்கள்

அந்நியோன்யம் பெருகும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வராமல் பார்த்துக்கொள்ளவும்.

வியாபாரத்தில் இதுவரை இருந்த தேக்கநிலை மாறும். வரவு உயரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களைச் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

 எதையும் சாதித்துக் காட்டும் தருணமிது.

கன்னி சவால்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உயர்பதவியில்

ராசி பலன்கள்

இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பழைய மனையை விற்பீர்கள். கணவர் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகளின் அடிமனத்திலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகளால் லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவார்கள்.

வெற்றிகள் உங்களைத் தேடிவரும் வேளையிது.

துலாம்  பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவர் நீங்கள்

ராசி பலன்கள்

சொல்வதைச் செய்வார். பிள்ளைகள் உங்கள் மனம்கோணாமல் நடந்துகொள்வார்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அரசாங்க காரியங்கள் தாமதமாக முடியும்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். லாபம் பெருகும்.

உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார்.

ஆளுமைத்திறன் அதிகரிக்கும் நேரமிது.

விருச்சிகம்  அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். கைம்மாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து

ராசி பலன்கள்

முடிப்பீர்கள். கணவர் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். உறவினர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். பணப்பற்றாக்குறை அவ்வப்போது வரும். சிக்கனமாக இருப்பது நல்லது.

வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு நல்ல லாபம் பார்ப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம்.

எதிலும் வெற்றிபெறும் வேளையிது.

தனுசு  எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும்.

ராசி பலன்கள்

பணவரவு அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப புதிய வீடு அமையும். கணவர் உங்களின் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும்.

வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.

 நினைத்தது நிறைவேறும் நேரமிது.

மகரம்  இங்கீதமாகப் பேசி எந்தக் காரியத்தையும் சாதிப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த  வேலைகள்

ராசி பலன்கள்

நல்லவிதமாக முடியும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கணவரிடம் கலந்தாலோசித்துச் செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். சொந்த பந்தங்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும்.

உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப் பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

சகிப்புத் தன்மையால் முன்னேறும் வேளையிது.

கும்பம் உங்களைத் தாழ்த்திப் பேசியவர்களே உங்களை மதிப்பார்கள். வீட்டை விரிவுபடுத்திக்

ராசி பலன்கள்

கட்டுவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். வீட்டு வேலைகளைக் கணவர் பகிர்ந்துகொள்வார். உடல்நலம் சீராகும். புது வாகனம் வாங்குவீர்கள். கடனாகக் கேட்ட பணம் கிடைக்கும். சகோதரர்கள் வகையில் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டி வரும். 

வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

தடைகள் நீங்கும் தருணமிது.

ராசி பலன்கள்

மீனம் உங்களை வீழ்த்துவதற்காக விரிக்கப்பட்டிருந்த சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்து வெற்றிபெறுவீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும், எதிர்பாராத வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்தை விற்று, புது வீடு கட்டுவீர்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

வியாபாரத்தில் லாபம் சற்றுக் குறைவாகவே இருந் தாலும் கையில் வைத்திருப்பதை விற்றுத் தீர்ப்பீர்கள்.

ராசி பலன்கள்உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை உயரதிகாரி பாராட்டுவார்.

மதிப்பும் மரியாதையும் உயரும் வேளையிது.

- ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்