Published:Updated:

7-ம் வீட்டில் குருபகவான்... ரிஷப ராசிக்காரர்களுக்கு இது முன்னேற்றமான ஆண்டு!

7-ம் வீட்டில் குருபகவான்... ரிஷப ராசிக்காரர்களுக்கு இது முன்னேற்றமான ஆண்டு!
7-ம் வீட்டில் குருபகவான்... ரிஷப ராசிக்காரர்களுக்கு இது முன்னேற்றமான ஆண்டு!

2018-ம் ஆண்டு மிகவும் சிக்கலான ஆண்டாகவும் சின்னச் சின்ன பிரச்னைகளைத் தந்த ஆண்டாகவும் அமைந்திருந்தது. ஆனால், 2019-ம் ஆண்டு உங்களுக்குப் பெருமை சேர்க்கும் ஓர் ஆண்டாக அமையவிருக்கிறது. 

ரிஷப ராசிக்காரர்களான நீங்கள் சுக்கிர பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இதனால் உங்களுக்கு இயற்கையிலேயே கற்பனை சக்தியும், இயற்கையை, மலைகளை, அருவியை ரசிக்கும் மனோபாவமும் இருக்கும். கதைகள், கவிதைகள் மீது ஓர் ஈர்ப்புசக்தி எப்போதும் உங்களுக்கு இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் வித்தியாசமான அணுகுமுறையால் மாறுபடுத்திக்காட்ட விரும்புவீர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதைப்போல் புதுமையாய் எதையும் செய்ய ஆசைப்படுவீர்கள்.

2018-ம் ஆண்டு மிகவும் சிக்கலான ஆண்டாகவும் சின்னச் சின்ன பிரச்னைகளைத் தந்த ஆண்டாகவும் அமைந்திருந்தது. ஆனால், 2019 -ம் ஆண்டு உங்களுக்குப் பெருமை சேர்க்கும் ஓர் ஆண்டாக அமையவிருக்கிறது. 

சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் நழுவ விடாமல் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அதற்குக் காரணம் ஆண்டு முழுவதுமே குரு பகவான் உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களின் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான். 

இதுநாள் வரை சின்னச் சின்ன உடல் உபாதைகளால் அவஸ்தைப்பட்டு வந்த உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். கடந்த ஆண்டு உங்களின் ராசிநாதன் சுக்கிரன் வக்கிரமாக இருந்து காரியத்தடைகள் பலவற்றை ஏற்படுத்தி வந்தார். ஆனால், இனி அவர் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி எதிலும் வெற்றி வாய்ப்பைத் தேடித் தருவார். மனத்தில் உற்சாகம் பிறந்து எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

சொந்தவீடு வாங்காமல் இருந்தவர்களுக்கு இந்த ஆண்டு சொந்த வீடு வாங்கும் அமைப்பு உருவாகும். குருபகவான் உங்களின் ராசியைப் பார்ப்பதால், குடும்பத்தில் வருமானம் பெருகும். வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். நீண்டநாள்களாகத் திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும்.  

13.02.2019 தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ம் வீட்டில் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். பணப்பற்றாக்குறை அவ்வப்போது வந்து போகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.

கண்பார்வைக் கோளாறு வர வாய்ப்பு உள்ளதால் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதலாக கவனம் செலுத்துங்கள். உணவு வகைகளில் கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு இயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் நல்லது. சகோதரர்களிடையே இருந்த கோபதாபங்கள் தீர்ந்து மீண்டும் ஒற்றுமையாக வலம் வருவார்கள். கணவன் மனைவி உறவும் மேம்பட்டு இருக்கும். 

வியாபாரத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு லாபத்தை அள்ளித்தரும் ஆண்டாக அமையும். ஏற்றுமதி இறக்குமதித் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகமாகும். தற்போது இருக்கும் கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வீர்கள். ஆண்டு முழுவதுமே லாபம் பெரிய அளவில் கிடைக்கும். அஷ்டமச்சனி நடப்பதால் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். புதியவர்களை நிறுவனத்தில் சேர்ப்பதாக இருந்தால், அவரின் பின்புலம் அறிந்துகொண்டு அதன்பின்னர் பணியில் சேர்ப்பது நல்லது. பங்குதாரர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் அன்பும் ஆதரவும் இருக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் பேசும்போது எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். 

பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையும். இல்லத்தரசிகள் கணவரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. 

மாணவ மாணவிகள் தொடக்கத்திலிருந்தே பாடத்தில் கவனம் செலுத்திப் படித்தால்தான் நல்ல மதிப்பெண் பெற முடியும். அஷ்டமச்சனி நடப்பதால் படிப்பில் வழக்கத்தைவிடக் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகசூல் நன்றாக இருக்கும். ஆனால், இரண்டாமிடத்தில் ராகு இருப்பதால் பயிர்களில் பூச்சித்தொல்லைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

பரிகாரம்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசுப்ரமணியசுவாமியை கார்த்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாழ்வு சிறக்கும். 

அடுத்த கட்டுரைக்கு