Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

அக்டோபர் 23 - ம் தேதி முதல் நவம்பர் 5 - ம் தேதி வரை

ராசிபலன்

அக்டோபர் 23 - ம் தேதி முதல் நவம்பர் 5 - ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வந்துசேரும். குடும்பத்தில், முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். ஆபரணங்கள் சேரும். உங்களில் சிலருக்கு, திருமணம் கைகூடுவதில் தடைகள் நீங்கும்.

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 7-ம் வீட்டில் அமர்வதால், பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். புதன் சாதகமாக இருக்கிறார். சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ராசிநாதன் செவ்வாய் வலுவான வீடுகளில் செல்வதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முன்பணம் கொடுத்திருந்த சொத்துக்கு மீதிப் பணத்தையும் கொடுத்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதரர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில்  மதிப்பு கூடும். கலைத்துறையினருக்கு, புகழும் பாராட்டும் அதிகரிக்கும்.

நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் தருணம் இது.

ராசிபலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருவும் புதனும் சாதகமாக இருப்பதால் நட்பு வட்டம் விரியும். சொந்தபந்தங்கள் தேடி வருவர். அரசாங்கக் காரியங்கள் விரைந்து முடியும். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மகளுக்கு, நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு, அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

ராசிநாதன் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் வந்து போகும். வீட்டில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. 27-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் வீட்டில் வந்து அமர்வதால், தந்தையின் ஆரோக்கியம் சீராகும். வீடு, மனை வாங்குவீர்கள். சிலருக்குப் புதிய வேலை அமையும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில், முன்னெச்சரிக்கையுடன் முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில்  உயரதிகாரிகள் சுட்டிக்காட்டும் தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். கலைத்துறையினர்  சம்பள விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

அலைச்சல்கள்  இருந்தாலும் ஆதாயம் பெறும் நேரம் இது.

ராசிபலன்

ங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் சுக்கிரன் தொடர்வதால், தன்னம்பிக்கை துளிர்விடும். முடங்கிக்கிடந்த பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் திருப்தி தரும். விலையுயர்ந்த மின்னணு, மின்சாரச் சாதனங்களை வாங்குவீர்கள்.  வாகனப் பயணத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

27-ம் தேதி முதல் செவ்வாய் கேதுவை விட்டு விலகி, 9-ம் வீட்டில் நுழைவதால், அதுமுதல் ஆரோக்கியம் சீராகும்; மனஉளைச்சல், பிரச்னைகள் நீங்கும். சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்களை அனுசரித்துப்போங்கள். விரயச் செலவுகள் வர வாய்ப்புள்ளதால், கவனமாக செலவு செய்யவும். வியாபாரத்தில், சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில், உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும். கலைத்துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டிய வேளை இது.

ராசிபலன்

சூரியன் சாதகமாக இருப்பதால், பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். உங்களில் சிலர், அதிகாரம் மிக்க பதவியில் அமர வாய்ப்புண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள்.

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். தாய்வழியில் அனுகூலம் உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும். பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். ஆனால் 27-ம் தேதி முதல், செவ்வாய் 8-ம் வீட்டில் மறைவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில், சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். சக ஊழியர்களுடன் விவாதம் வந்துபோகும். கலைத்துறையினர் வேற்றுமொழிப் பட வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

எதிர்பாராத வெற்றிகள் சூழும் காலம் இது.

ராசிபலன்

சூரியன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு,  புதிய இடத்தில் வேலை அமையும்.

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் துணிச்சலாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். 27-ம் தேதி முதல் செவ்வாய் 7-ம் வீட்டில் நுழைந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில், தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாள்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில், அதிகாரிகளுடன் அளவுடன் பழகுங்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். கலைத் துறையினரே, உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

புதிய பாதையில் சென்று சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நண்பர்கள் உங்களின் தேவையறிந்து உதவுவார்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

சூரியன் 2-ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் ஓரளவு டென்ஷன் குறையும். ஆனால் பேச்சால் பிரச்னை வரும். கவனமாக இருப்பது நல்லது. 27-ம் தேதி முதல் செவ்வாய் சாதகமாவதால், தன்னிச்சையாக சில பெரிய காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வது, விற்பது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் சாதகமாகும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். புதிய முதலீடுகளால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

புகழும் கௌரவமும் கூடும் தருணம் இது.

ராசிபலன்

புதனும் ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாகத் திகழ்வதால், தோற்றப்பொலிவு கூடும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். மனக்கசப்பால் உங்களிடமிருந்து விலகியிருந்த உறவினர்கள், இனி தேடி வந்து பேசுவார்கள். அக்கம்பக்கத்தாரின் ஆதரவு பெருகும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகன வசதிகள் பெருகும். நவீனரக ஆடியோ, வீடியோ சாதனங்களை வாங்குவீர்கள்.

ராசிக்குள் சூரியன் அமர்ந்திருப்பதால், உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். 27-ம் தேதி முதல் செவ்வாய் சாதகமாக இருப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். திடீர்ச் செலவுகளும் வந்துசேரும்; கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாள்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சம்பளம் உயரும். சாமர்த்தியமான அணுகுமுறையால், கடினமான வேலைகளையும் மிக எளிதாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களே! உங்களுக்குப் பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வரும்; அவற்றைப் பயன்படுத்தி வெற்றிபெறுவீர்கள்.

உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும் வேளை இது.

ராசிபலன்

புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உறவுகளில் உங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்களை அடையாளம் காண்பீர்கள். வீட்டுக் கடன் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

சூரியன் 12-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், திடீர்ப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தந்தையின் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. வீடு, மனை வாங்குவதற்கு முன்பாக தாய்ப் பத்திரத்தைச் சரிபார்ப்பது நல்லது. வியாபாரத்தில், போட்டிகளைத் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். பெரிய முதலீடுகள் செய்யவேண்டாம். உத்தியோகத்தில், சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினரே! கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நிதானமும் பொறுமையும் தேவைப்படும் நேரம் இது.

ராசிபலன்

ங்களின் பாக்கியாதிபதி சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்வதால், எதிரிகளும் நண்பர்களாவார்கள். பணவரவு அதிகரிக்கும். அரசாங்கத்தாலும் அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கணவன், மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சோர்வு நீங்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். மனைவி வழியில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். 27-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் வீட்டில் அமர்வதால், பணவரவு உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கட்டடம் கட்ட தொடங்குவீர்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்றுவிட்டு, புது வீடு வாங்குவீர்கள். சகோதரர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில், அதிரடியான திட்டங்களால் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். கலைத்துறையினர் புதுமையான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

வாழ்க்கை வசதிகள் பெருகும் தருணம் இது.

ராசிபலன்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் ரசனை மாறும். இதமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. வரவேண்டிய பூர்வீகச் சொத்து வந்து சேரும். வாகன வசதி பெருகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

சூரியன் 10-ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் புதுப் பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும்; அவர் வழியில் அனுகூலம் உண்டு. எதிலும் நிம்மதி உண்டாகும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். நிலம், சொத்துப் பிரச்னைகளில் விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். சகோதரர்களுடன் சச்சரவுகள் நீங்கும். வியாபாரத்தில், லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில், சக ஊழியர்களை அனுசரித்துப் போவது நல்லது. கலைத்துறையினரின் கற்பனைத்திறன் வளரும்.

உங்களின் நட்பு வட்டம் விரியும் வேளை இது.

ராசிபலன்

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், புதிய இடத்தில் வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்த அன்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஆபரணங்கள் சேரும்.

 சூரியன் 9 - ம் வீட்டில் நுழைந்திருப்பதால், தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்துப்போவது நல்லது. 27-ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் நுழைவதால், எல்லா விஷயங்களிலும் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். உங்களின் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப புதிய மாற்றங்களைச் செய்யுங்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. வீண் குழப்பம் விளைவித்தவர்கள் இனி அடங்கிப்போவார்கள். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்குப் பெரிய வாய்ப்புகள் தேடி வரும்; வருமானம் அதிகரிக்கும்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றும் நேரம் இது.

ராசிபலன்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் உங்களின் புகழ், கெரளவம் உயரும். திடீர் பணவரவு உண்டு. கூடுதலாகச் செலவு செய்து பூர்வீகச் சொத்தைச் சீரமைப்பீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் உங்களின் பரந்த மனசைப் புரிந்துகொள்வார்கள். அடகிலிருந்த பொருள்களை மீட்பீர்கள். நட்பு ஆதாயம் தரும்.

சூரியன் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஷேர் மார்க்கெட் லாபம் தரும். மனைவியின் உடல்நிலை ஓரளவு சீராகும். 27-ம் தேதி முதல் செவ்வாய் 12 -ம் வீட்டில் மறைவதால், சொத்து விவகாரத்தில் கவனம் தேவை. வீடு வாங்குமுன் மூலப் பத்திரத்தைச் சரிபார்க்கவும். வியாபாரத்தில், சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்யவேண்டும். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். கலைத்துறையினருக்குச் சம்பளப்பாக்கி வந்துசேரும்.

தடைகளைத் தாண்டி வெற்றி பெறும் வேளை இது.

 ‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்