Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

நவம்பர் 6 - ம் தேதி முதல் 19 - ம் தேதி வரை

ராசிபலன்

நவம்பர் 6 - ம் தேதி முதல் 19 - ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

சுக்கிரன் 7 - ம் வீட்டில் தொடர்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். திருமணம், சீமந்தம் ஆகிய சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மின் சாதன பொருட்களை வாங்குவீர்கள். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை முடிப்பதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். 15 - ம் தேதி வரை சூரியன் 7 - ம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகளின் ஆசைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மகனுக்குத் தள்ளிப் போய்க் கொண்டிருந்த திருமணம் கூடி வரும்.

சாதகமான வீடுகளில் புதன் செல்வதால் பணப்புழக்கம் ஓரளவு இருக்கும். பழைய நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். செவ்வாய் 11 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சகஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

பிரச்சினைகளைத்  தீர்த்து வைத்து, தலைநிமிரும் வேளை இது .

ராசிபலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

15 - ம் தேதி வரை சூரியன் 6 - ம் வீட்டில் நிற்பதால் வழக்கில் வெற்றி, அரசால் அனுகூலம் உண்டு. ஆனால், ராசிநாதன் சுக்கிரன் 6 - ம் வீட்டில் தொடர்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளுடன் வீண்வாக்குவாதங்கள் செய்யவேண்டாம்.  ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். செவ்வாய் 10 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வேலைகள் நல்லவிதமாக முடியும். புதிய  பதவி பொறுப்புகள் தேடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த இழுபறி நிலை மாறும்.

குரு பகவான் சாதகமாக இருப்பதால், அனைத்துப் பிரச்சினைகளையும்  வெல்லும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபார ரீதியாக அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவீர்கள். பணியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். கலைத்துறையினர் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

யதார்த்தமான அணுகுமுறையால் எதையும் சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்

சுக்கிரன் 5 - ம் வீட்டில் தொடர்வதால் குழந்தையில்லாத தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். காரியத்தில் வெற்றி உண்டு. குடும்பத்தில் நிலவி வந்த சண்டைச் சச்சரவுகள் மாறும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கோயில் விழாக்களில் கலந்துகொள்வீர்கள். உறவினர்களால் ஆதாயமுண்டு. சூரியன் சரியில்லாத இடத்தில் சஞ்சரிப்பதால், தூக்கமின்மை ஒரு சிலருக்கு ஏற்படும்.

13 - ம் தேதி முதல் தடைப்பட்ட வேலைகள் விரைந்துமுடியும். பால்ய சினேகிதர்கள்  உங்களைச் சந்திப்பார்கள். செவ்வாய் 9 - ம் வீட்டில் நீடிப்பதால் ஆரோக்கியம் சீராகும். வீடு, மனை வாங்குவது சாதகமாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். விற்பனை பெருகும். வேலைப்பளு அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது கவனமாகப் பேசவும். கலைஞர்கள் பரபரப்புடனும் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.

எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் வேளை இது .

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. தாயாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மூத்த சகோதரர் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். சூரியன் பலமாக இருப்பதால், புத்துணர்ச்சியுடன் எந்தச் செயலிலும் ஈடுபடுவீர்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. அரசுப் பதவியிலிருப்பவர்கள், கல்வியாளர்களைச் சந்திப்பீர்கள். செவ்வாய் 8 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புத்தி சாதுரியத்துடன் செயல்படுவீர்கள். குலதெய்வ கோயிலுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். கடனாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பிக் கொடுப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனையை மேலதிகாரி ஏற்றுக்கொள்வார். கலைத்துறையினருக்குச் சம்பள பாக்கி கைக்கு வரும்.

தடைகளைத் தாண்டி முன்னேற்றம் காணும் நேரம் இது.

ராசிபலன்

ங்களின் ராசிக்கு 3 - ம் வீட்டில்  சுக்கிரன் தொடர்வதால், புதுத் திட்டங்களுக்கு வழிவகுப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடுகள் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பொங்கும். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். ராசிநாதன் சூரியன் பலமாக இருப்பதால், நின்றுபோன வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வரவேண்டிய பணம் வந்து சேரும்.

அரசு காரியங்களில் அனுகூலமான நிலைமை காணப்படும். செவ்வாய் ஓரளவு சாதகமாக இருப்பதால், போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆலோசனையை நாடுவீர்கள். சகஊழியர்களால் உங்களுக்கு மன உளைச்சல் வரக்கூடும். கலைஞர்கள் பழைய நிறுவனத்தை நாடிச் சென்று வாய்ப்பைப் பெறுவார்கள்.

துவளாத மனதுடன் போராடி தொடர் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன்

ங்களின் ராசிக்கு 2 -ம் வீட்டில் சுக்கிரன் வலுவாக இருப்பதால், கனிவான பேச்சாலேயே தடைப்பட்ட காரியங்களைக் கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள். நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்விக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமணம், எதிர்காலம் பற்றிய கவலைகள் விலகும். ஆனால், 2 - ம் வீட்டில் சூரியனும் நிற்பதால், தூக்கமின்மை வரக்கூடும். தியானப்பயிற்சி செய்யவும். 

புதன் வலுவான வீடுகளில் சஞ்சரிப்பதால், சாமர்த்தியமாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் தேடி வருவார்கள். செவ்வாய் பகவான் சாதகமான வீடுகளில் செல்வதால், பல காரியங்கள் சிறப்பாக முடியும். சில வாய்ப்புகள் கைநழுவிப்போகும் வாய்ப்புள்ளதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். சக ஊழியர்களின் அன்பைப் பெறுவீர்கள். கலைஞர்களுக்குப் புதுப்பட வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
 
உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் தருணம் இது.

ராசிபலன்

ங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கல்வியாளர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்திசெய்வீர்கள். பண வரவு அதிகரிப்பதால் சேமிக்கத் தொடங்குவீர்கள். ராசிக்குள் நிற்கும் சூரியன் நிற்பதால், உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். அவ்வப்போது வரும் முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால், வி.ஐ.பிகளின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும்.

மூத்த சகோதரர் உதவிக்கரமாக இருப்பார். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த இடங்களில் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பது தொடர்பாக ஆலோசனை செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு உண்டு. கலைத்துறையினரின் முழுமையான திறமைகள் வெளிப்படும்.

 தளராத மன உறுதியுடன் செயல்படும் வேளை இது .

ராசிபலன்

12 - ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால், சுபச்செலவுகள் வரும். வீட்டில் நடக்கும் விசேஷங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளைச் செய்து முடிப்பீர்கள். இஷ்டதெய்வ கோயிலுக்குச் சென்று வணங்கி வருவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். 12 - ம் வீட்டில் சூரியன் நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். செவ்வாய் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள்  தீரும்.

உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய புதிய எண்ணங்கள், திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியாளர்கள், தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைத் தேடுவதில் அலைச்சல் இருக்கும்.

கோபதாபங்களை ஒதுக்கி விட்டு, செயலில் இறங்கும் தருணம் இது.

ராசிபலன்

சுக்கிரனும், சூரியனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மன தைரியம் அதிகரிக்கும். ஓரளவு பணம் வரும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுங்கள். புதன் சாதகமாக இருப்பதால் அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவியுண்டு. மனநிம்மதிக்காகச் சமூக நலப்பணிகளில் ஈடுபடுவீர்கள்.

செவ்வாயும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மனைவி வழியில் உதவிகள் உண்டு. முன் பணம் தந்தும் முடிக்கப்படாமல் இருந்த சொத்து உங்கள் வசமாகும்.. சகோதரர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் நிறைவான வகையில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. கலைத்துறையினர் சிந்தித்துச் செயல்படுவார்கள்.

சிக்கனத்துடன் செயல்படவேண்டிய தருணம் இது.

ராசிபலன்

ங்களின் ராசிக்கு 10 - ம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் பிரபலங்களைச் சந்திப்பீர்கள். வழக்குகளில் சாதமான நிலை ஏற்படும். பெண்கள் மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுப்பார்கள். கனவுத்தொல்லை, கண் எரிச்சல் ஏற்பட்டு விலகும். சூரியன் 10 - ம் வீட்டில் பலம் பெற்றிருப்பதால் எதிர்பார்த்த வகைகளில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க காரியங்கள் வெற்றிபெறும். நின்றுபோன பல வேலைகள் முழுமைபெறும். பூர்வீகச் சொத்துகளை மாற்றி அமைப்பீர்கள். புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால், உங்களின் முயற்சிகளில் வெற்றியே கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெறுவீர். அயல்நாட்டுப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். செவ்வாய், சாதகமாக இருப்பதால், சகோதரர் கள் வகையில் இருந்து வந்த பிரச்சினைகள்  விலகும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களைக் கனிவாக நடத்துங்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

கடின உழைப்பால் ஏற்றம் பெறும் வேளை இது .

ராசிபலன்

சுக்கிரன் வலுவாக இருப்பதால், உங்களின் நிர்வாகத் திறமை கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திரும்பித் தருவீர்கள். 9 - ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தந்தையாரின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். உறவினர்களிடையே இருந்த  மனக்கசப்புகள் நீங்கும். வெளிமாநில புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

வேலையில்லாதவர்களுக்கு வேலைக் கிடைக்கும். செவ்வாயும் சாதகமாக இல்லாததால், புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். சகஊழியர்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. கலைத்துறையினர் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. 

தக்கசமயத்தில் திறமைகளை வெளிப்படுத்தும் நேரம் இது.

ராசிபலன்

ங்களின் ராசிக்குச் சுக்கிரனும், சூரியனும் 8 - ம் வீட்டில் நிற்பதால், திடீர் பணவரவு உண்டு. ஒரு சிலர்  வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். அரசாங்க காரியங்கள் தாமதமான பிறகு நல்லவிதமாக முடியும். புதன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்தபடி வேலைக் கிடைக்கும்.  நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.  சுபகாரிய நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

செவ்வாயும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவிவழி உறவினர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். பிள்ளைகளை நீங்கள் விரும்பிய வண்ணம் பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் சலுகைகள் பல கிடைக்கும். கலைத்துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

அலைச்சலுடன் ஆதாயம் பெறும் நேரம் இது.

‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism