Published:Updated:

தலைவனாக்கும் மிருகசீரிடம்!

தலைவனாக்கும் மிருகசீரிடம்!
பிரீமியம் ஸ்டோரி
தலைவனாக்கும் மிருகசீரிடம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

தலைவனாக்கும் மிருகசீரிடம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

Published:Updated:
தலைவனாக்கும் மிருகசீரிடம்!
பிரீமியம் ஸ்டோரி
தலைவனாக்கும் மிருகசீரிடம்!
தலைவனாக்கும் மிருகசீரிடம்!

மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் கல்யாண கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும், 3 மற்றும் 4-ம் பாதங்கள் சுய முயற்சி கிரகமான புதனின் ராசியான மிதுனத்திலும் அடங்கும்.

ரத்த பந்தங்களுக்குரிய கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மொழி, இனப் பற்று அதிகம் உடையவர்கள். கடல் கடந்து சென்றாலும் பிறந்த ஊரை அதிகம் நேசிப்பவர்கள். நட்சத்திர மாலை எனும் நூல், ‘திருந்திய நடக்க வல்லன்; தேசம் போய்த் திரிய வல்லன்; அருந்தவத்தோர்க்கு நல்லன்; ஆயுதம் பிடிக்க வல்லன்...’ என்று கூறுகிறது. அதாவது, இந்த நட்சத்திரக்காரர்கள், தன்னைத்தானே வழிநடத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டவராகவும் பயணப் பிரியராகவும் இருப்பார்கள் என்கிறது.

பிருஹத் ஜாதகம், ‘இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொஞ்சம் சபல புத்தி உடையவர்களாக இருப்பார்கள்’ என்கிறது.

இந்த நட்சத்திரம் அங்காரக சாரம் பெற்ற நட்சத்திரம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் பொதுவான குணங்கள் சில இருக்கின்றன. அசாத்தியத் துணிவு உள்ளவர்களாக, எதற்கும் பயப்படாதவர்களாக, திடமான நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். விரிந்த நெற்றியும் பரந்த தோள்களும் இருக்கும். இவர்கள் கற்பனை வளம் மிகுந்தவர்களாகவும் கவிதை, கட்டுரைகள் எழுதுபவர்களாகவும் இருப்பார்கள். உயர்ந்த பண்பும் தாய், தந்தையிடம் அதிக பாசமும் இருக்கும். தவறைக் கண்டால் தயக்கமின்றித் தட்டிக் கேட்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். கல்வியைக் காட்டிலும் மற்றவற்றில் நாட்டம் அதிகமிருக்கும்.

தலைவனாக்கும் மிருகசீரிடம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறு வயதிலேயே ராகு தசை வருவதால்கல்வியில் தடைகள் உண்டாகும். உத்தியோகத்தில் நெறிமுறை தவறாதிருப்பார்கள். உரிய வயதிலேயே திருமணம் முடியும். கடின உழைப்பாளிகள். பேச்சாலும், செயலாலும் அனைவரையும் கவர்வார்கள். எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் அதிகம் இருக்கும். எனவே தலைமை தாங்கக்கூடிய தகுதி இவர்களுக்கு அதிகம். விட்டுக்கொடுக்கும் குணம் இல்லாததால், கணவன் - மனைவிக்கு இடையே ஒற்றுமை குறைவாக இருக்கும். இவர்களின் வாழ்க்கைத் துணைவர், வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.  அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். இவர்களுக்கு, அரசியலில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.  தங்களுடைய கருத்துகளை வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்துக்கொள்ளும் திறமைசாலிகள் இவர்கள்.

வாகனங்களை வேகமாக இயக்குவதில் அதிக விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வயிற்றுவலி, குடல் ஏற்றம் அல்லது இறக்கம், நீரிழிவு, வாதம் போன்ற நோய்கள் வந்து நீங்கும்; நீண்டகாலம் வாழ்வார்கள்.

முதல் பாதம் (செவ்வாய்+சுக்கிரன்+சூரியன்)

முதல் பாதத்துக்கு அதிபதி சூரியன். இதில் பிறந்தவர்கள் சவால்களில் வெற்றி பெறுவார்கள். உடன் பிறந்தவர்கள் மீது பாச மழை பொழிவார்கள். துணிச்சலுக்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர்பெற்றவர்கள். கல்வியில் ஆர்வம் இருக்கும். குடும்பச் சூழ்நிலையால் படிப்பில் தடை வந்து, நீங்கும். நினைத்த காரியத்தை முடிக்கும் போர் குணம் மிக்கவர்கள். எதிரிகளை ஜெயிக்கும் ஆற்றல் மிகுந்திருக்கும். எவரும் எதிர்பார்க்காத துறையில் திடீரென குதித்து வெற்றிக்கொடி நாட்டுவார்கள்.

உத்தியோகத்தைவிட சொந்தத் தொழிலில் ஆர்வம் காட்டுவார்கள். இந்தப் பாதத்தில் பிறந்த பலரும் புகழ் பெற்ற வழக்கறிஞராகவும் அரசியல் தலைவராகவும் விளங்குவார்கள். மனைவி, பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் தருவார்கள். பேச்சு சாதுர்யமும் இவர்களுக்கு உண்டு, அதேநேரம் செயலிலும் வேகம் காட்டுவார்கள். லட்சியத்தை முடிக்கவேண்டிய பாதை கரடுமுரடாக இருந்தாலும் கவலைப்படாமல் பயணம் செய்வார்கள். பருமனான தேகத்தை உடையவர்களாகவும் கோபம் உடையவர்களாகவும் இருப்பார்கள். விருந்து, கேளிக்கை, சுற்றுலா ஆகியவற்றில் அதிகம் பங்கேற்பார்கள். 21 வயதிலிருந்தே தனக்கென ஒரு தனிப் பாதையைக் கண்டறிந்து வெற்றிக்கு வித்திடுவார்கள்.

பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள, சுவாமிமலைக்குச் சென்று தகப்பன் சுவாமியாம் ஸ்ரீமுருகப்பெருமானை வழிபட்டு வந்தால், வாழ்க்கைச் சிறக்கும்.

இரண்டாம் பாதம்
(செவ்வாய் + சுக்கிரன் + புதன்)

ரண்டாம் பாதத்தை புதன் ஆட்சி செய்கிறார். இதில் பிறந்தவர்களுக்கு எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாரையும் எதிர்பார்க்காமல் தன் திறமையை நம்பி வாழ்வார்கள். சகல துறைகள் குறித்த விஷய ஞானமும் இவர்களிடம் பரந்து விரிந்திருக்கும். சிறு வயதில் ஓவியம், கவிதை, ஓட்டப் பந்தயம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். சிலருக்கு இரண்டு மனைவிகள் வாய்ப்பார்கள். நாடி வருபவரின் உள்ளப் பாங்கை நன்கு அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்வார்கள்.

பிறருக்கு யோசனை வழங்கும் தகுதியும் இவர்களுக்கு இருக்கும். மாபெரும் வர்த்தக நிறுவனம், நிதி நிறுவனம் ஆகியவற்றின் ஆலோசகராகப் பணிபுரிவார்கள்.

சுய மரியாதையை எதிர்பார்க்கக் கூடியவர்கள்.  எப்போதும் உண்மை பேச வேண்டும் என்று நினைப்பவர்கள். கோயில் கட்டுதல், ஆதரவற்ற முதியோர் மற்றும் சிறார்களுக்கு உதவுதல் ஆகியவற்றை விருப்பமுடன் செய்வார்கள்.
24 வயது முதல் எதிலும் ஏற்றம் உண்டாகும்.

பரிகாரம்: சென்னை- பல்லாவரத்துக்கு அருகிலுள்ள திருநீர்மலை திருத்தலத்துக்குச் சென்று, அங்கே கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை வழிபட்டு வந்தால், தடைகள் நீங்கும்; எதிலும் வெற்றி உண்டாகும்.

மூன்றாம் பாதம்
(செவ்வாய் + புதன் + சுக்கிரன்)

மூ
ன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்கள் யார் மனதும் புண்படாதபடி பேசுவார்கள். வசீகரப் பார்வை இவர்களுக்கு உண்டு. எழுத்தில் ஆர்வம் இருக்கும். அன்புக்கு ஏங்குவார்கள். கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்களைப் பார்த்தாலும் துளிகூடப் பொறாமைப் படமாட்டார்கள். கனவில் மிதக்காமல் யதார்த்தமாக யோசிப்பார்கள். இவர்களில் பலர், விடுதியில் தங்கிப் படிக்க நேரிடும். பாட்டனார், பாட்டியுடன் வளர்பவர்களாகவும் இருப்பார்கள்.

சளித் தொந்தரவு, மூச்சுத் திணறல் அவ்வப்போது ஏற்படும். மற்றபடி ஆரோக்கியத்துக்குக் குறைச்சல் இருக்காது.  எப்போதும் உண்மையைப் பேசும் உத்தமர்கள். மனைவி, பிள்ளைகளை அதிகம் நேசிப்பவர்கள். சார்ந்திருக்கும் மதக் கோட்பாடுகளை தீவிரமாகப் பின்பற்றுவார்கள். பலர், யோகாசனம், பரதம் உள்ளிட்ட பாரம்பரியக் கலைகளைப் பயிற்றுவிக்கும் கலைக் கூடங்களை நடத்துவார்கள். பணத்துக்காகத் தங்களிடம் பழகுபவர்களை நினைத்து வருத்தப்படுவார்கள். 40 வயதிலிருந்து இவர்களது வாழ்க்கை பிரகாசிக்கும். முதுமையில் நிம்மதி பெருகும்.

பரிகாரம்: சென்னை - திருவல்லிக்கேணியில் அருளும் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை, புதன் கிழமைகளில் சென்று தரிசித்து வழிபட்டு வாருங்கள்; எதிர்காலம் சிறக்கும்.

நான்காம் பாதம்
(செவ்வாய் + புதன் + செவ்வாய்)


நான்காம் பாதத்துக்கு செவ்வாய் அதிபதி. இதில் பிறந்தவர்கள் சத்தியத்துக்காகப் போராடுவார்கள். நகைச்சுவையாகப் பேசுவார்கள். தளராத மனம் உடையவர்கள். தவறுகளைத் தட்டிக் கேட்பார்கள்.

இளமைப் பருவத்திலேயே பல இழப்புகளைச் சந்திப்பார்கள். எனினும், மனம் தளரமாட்டார்கள். உடன்பிறந்தவர்கள் இவர்களிடம் ஒட்டாமல் விலகிப்போவார்கள்.  மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே பள்ளிப் படிப்பை முடிப்பார்கள். சிலருக்கு, தொண்டு நிறுவனங்களின் உதவியோடு கல்லூரிப் படிப்பைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும்.

மனைவியிடம் பாசத்தை அதிகம் எதிர்பார்ப்பார்கள். பிள்ளைகளை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்ப்பார்கள். மருத்துவர், ஆசிரியர், சிறைத் துறை அதிகாரி, உளவுத் துறை அதிகாரி என்று பன்முகங்கள் உண்டு இவர்களுக்கு! ரியல் எஸ்டேட், கட்டடம் கட்டுவது, எலெக்ட்ரிக்கல் பொருள்கள் போன்றவற்றின் மூலம் சம்பாதிப்பார்கள். மனிதநேயம் இல்லாத கண்மூடித்தனமான நம்பிக்கைகளை வெறுப்பார்கள். இவர்களுக்கு 37 வயதிலிருந்து வாய்ப்புவசதிகள் கிட்டும்; 54 வயதிலிருந்து முழு நிம்மதி உண்டாகும். எந்தப் பதவி வகித்தாலும் அதன் மூலம் மேன்மை அடைவார்கள்.

பரிகாரம்: சென்னைக்கு அருகிலுள்ள மதுராந்தகத்தில் கோயில்கொண்டிருக்கும், ஸ்ரீஜனகவல்லி உடனுறை ஸ்ரீஏரிகாத்த ராமனை தரிசித்து, வணங்கி வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

தலைவனாக்கும் மிருகசீரிடம்!

மிருகசீரிட நட்சத்திரத்தில்...

வி
வாகம், உபநயனம், முடிசூட்டல், காது குத்துதல், தான்யம் வாங்குதல், ஆயுதப் பயிற்சி, வாஸ்து, குளம், கிணறு வெட்டுதல், சமுத்திர யாத்திரை செல்லல், ஆபரணம் புனைதல், விதை விதைத்தல், கல்வி கற்கத் தொடங்குதல், மாடு, வாகனம் வாங்குதல் ஆகிய  நற்செயல்களை இந்த நட்சத்திர நாளில்  தொடங்கினாலும் செய்தாலும் நன்மையும் வெற்றியும் உண்டாகும்.

பரிகார ஹோம மந்திரம்
ஸோமோ ராஜா ம்ருகசீர்ஷேண ஆகன்
சிவந் நக்ஷத்ரம் ப்ரியமஸ்ய தாம
ஆப்யாயமானோ பஹுதா ஜனேஷு ரேத:
ப்ரஜாம் யஜமானே ததாது
யத்தே நக்ஷத்ரம் ம்ருகசீர்ஷமஸ்தி
ப்ரியஹும் ராஜன் ப்ரியதமம் ப்ரியாணாம்
தஸ்மை தே ஸோம ஹவிஷா விதேம
சந்ந ஏதி த்விபதே சஞ் சதுஷ்பதே

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism