Published:Updated:

விருச்சிக ராசிக்காரர்களே... உங்கள் நிர்வாகத் திறமை பளிச்சிடும் ஆண்டு இது! 2019 புத்தாண்டு பலன்கள்

விருச்சிக ராசிக்காரர்களே... உங்கள் நிர்வாகத் திறமை பளிச்சிடும் ஆண்டு இது! 2019 புத்தாண்டு பலன்கள்
News
விருச்சிக ராசிக்காரர்களே... உங்கள் நிர்வாகத் திறமை பளிச்சிடும் ஆண்டு இது! 2019 புத்தாண்டு பலன்கள்

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசிக்காரர்களான நீங்கள், இறைவனுடனே எதிர் வழக்காடிய நக்கீரனின் குணம் உடையவர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவீர்கள்.

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசிக்காரர்களான நீங்கள், இறைவனுடனே எதிர் வழக்காடிய நக்கீரனின் குணம் உடையவர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவீர்கள். இதனால், சில நண்பர்களைக்கூட இழந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்தப் புத்தாண்டு, `மிகப் பிரமாதமாக இருக்கும்' என்று சொல்லமுடியாது. `ஓரளவு பரவாயில்லை' என்கிற அளவில்தான் இருக்கும். 

தற்போது ஏழரைச்சனியில் பாதச்சனி நடப்பதால், உங்களின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. கால் வலி, கழுத்து வலி மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகள் வரும் வாய்ப்பிருப்பதால், பயணங்களின்போது கவனமாக இருக்கவும். குறிப்பாக இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 

வெளியூர் செல்வதாக இருந்தால், வீட்டிலிருந்தே உணவு வகைகளை எடுத்துச் சென்று சாப்பிடுவது நல்லது. பாரம்பர்யமிக்க நாட்டுக் காய்கள், இயற்கை உணவுகளை உண்பது நல்லது. உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது அவசியம். காரம் உப்பு வகைகளை முழுமையாகக் குறைத்துக்கொள்ளுங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜனவரி மாதம் வரை கேது ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார். பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கும் சனியுடன் வந்து சேர்கிறார். இதனால் கண்பார்வை குறித்த பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. 
13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு உங்கள் ராசிக்கு 8 - ம் வீட்டிலிருப்பதால், வீட்டைப் பாதுகாப்பதில் கவனமாக இருங்கள். புதிய நபர்களிடம் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். 

குரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச் சுமை இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். 

பிள்ளைகளிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள். தனிப்பயிற்சி வகுப்புகளில் அவர்களைச் சேர்ப்பது நல்லது. கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிடுங்கள். 
28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசியை விட்டு விலகி 2 - ம் வீட்டில் இருக்கும்போது பணவரவு உண்டு. ஏற்கெனவே வாங்கிப்போட்ட இடத்தில் வீடு கட்டுவீர்கள். இதற்கான வங்கிக் கடனும் உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.

வியாபாரத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு சுமாராகத்தான் இருக்கும். அதனால், புதிய முதலீடுகளில் ஈடுபடவேண்டாம். பங்குதாரர்களிடமும் பணியாளர்களிடமும் பேசும்போது கோபத்தை வெளிப்படுத்தாமல் அனுசரித்துப் போவது நல்லது. வேலையாள்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடித்தான் வசூல் செய்யவேண்டி இருக்கும். 

உத்தியோகத்திலிருப்பவர்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். ஆனாலும் ஏழரைச் சனி தொடர்வதால் மறைமுகப் பிரச்னைகள் இருக்கவே செய்யும். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். 
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குக் காத்திருக்கும் பெண்களுக்குப் போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

திருமணமாகாத பெண்களுக்கு இந்த ஆண்டு நல்ல இடத்தில் திருமணம் கை கூடி வரும்.    

மாணவ மாணவிகள் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்திப் படிக்கவும். பாடங்களை ஒரு முறைக்கு இரு முறை  எழுதிப் பார்ப்பது கூடுதல் பலன்களைத் தரும். 

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு சுமாராகத்தான் இருக்கும். அதனால், குறுகிய காலப் பயிர்களான எண்ணெய் வித்துகளைப் பயிரிடுவது நல்லது. குறிப்பாக எள், வேர்க்கடலை போன்றவற்றைச் சாகுபடி செய்யலாம்.
இந்தப் புத்தாண்டில் உங்களின் திறமைகள் வெளிப்பட வேண்டுமானால், கூடுதல் கவனமும் நிதானமும் கடைப்பிடிக்கவேண்டியது அவசியமாகிறது.

பரிகாரம்: மதுரை மாவட்டம், பேரையூர் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீசுப்பிரமணியசுவாமியை சஷ்டி திதியில் சென்று வணங்குங்கள். சுபிட்சம் உண்டாகும்.