Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

நவம்பர் 27-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

மேஷம்

ங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கணவர் உங்களுக்கு சாதக மாகப் பேசுவார். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களுக்கு உதவுவீர்கள். அவ்வப்போது சேமிப்புகள் கரையும். வழக்குகளில் அவசரம் வேண்டாம்.

வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி, பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

பக்குவமான பேச்சால் எதையும் சாதிக்கும் நேரமிது.

ராசிபலன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரிஷபம் 

ண வரவு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். கணவரின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து ஆலோசனைசெய்வீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்ட வேண்டியிருக்கும்.

உத்தியோகத்தில்  புதிய தொழில்நுட்பப் பயிற்சிகளைக்  கற்றுக்கொள்வீர்கள்.

வேலையில் கவனமுடன் செயல்படவேண்டிய நேரமிது.

ராசிபலன்

மிதுனம் 

பே
ச்சில் கம்பீரம் பிறக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கணவர் உங்களின் புதிய முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். நவீன டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாமனார், மாமியார் அன்பாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் வரவு உயரும்.

உத்தியோகத்தில் நீங்கள் விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் உண்டு.

அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் நேரமிது.

ராசிபலன்

கடகம் 

தையும் இங்கிதமாகப் பேசி வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி, புதிய சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் உங்களை நம்பி முக்கியப் பொறுப்பு களை ஒப்படைப்பார். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். உறவினர் களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் கல்விச் செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வியாபாரத்தில் கையிலிருந்த பொருள்களை விற்றுத் தீர்ப்பீர்கள். லாபம் உயரும்.

உத்தியோகத்தில் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

அனுபவ அறிவால் வெற்றிபெறும் நேரமிது.

ராசிபலன்

சிம்மம் 

சோ
ர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வீடு, வாகனம் புதிதாக வாங்குவீர்கள். கணவரின் அன்பு பெருகும். வழக்கு சாதகமாகும். மாமனார், மாமியார் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். எதிர்பாராத பயணங்களும், செலவுகளும் வந்துபோகும்.

வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

தொடர்முயற்சியால் சாதிக்கவேண்டிய நேரமிது.


ராசிபலன்

கன்னி

லக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் உங்களைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள்; உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் அனுபவமுள்ள வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வும் சலுகையும் கிடைக்கும்.

சகிப்புத்தன்மையால் வெற்றிபெறும் நேரமிது.

ராசிபலன்

துலாம் 

ங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு கூடும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வேலைகளை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பிள்ளைகளின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். மச்சினர், மாமியார் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதரிக் காகப் பண உதவிகள் செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் தாமதமாக முடியும்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும்.

உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் பொன்னான நேரமிது.

ராசிபலன்

விருச்சிகம்

ரவேண்டிய பணம் கைக்கு வரும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். பிள்ளைகளின் திறனை வளர்க்கும் பயிற்சியில் சேர்ப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்தவர்களைச் சந்திப்பீர்கள். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்து, லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும், தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும் நேரமிது.

ராசிபலன்

தனுசு 

டுத்த காரியம் யாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். வீடு கட்டுவதற்கான முயற்சி வெற்றியடையும். வழக்கு சாதகமாகும். கணவரின் வருமானம் உயரும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மாமியார், நாத்தனார் உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகை களை அறிவிப்பீர்கள்.

 உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகள் பாராட்டுவார்கள்.

வளைந்துகொடுத்து காரியம் சாதிக்கும் நேரமிது.

ராசிபலன்

மகரம் 

ங்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக்கடன்  கிடைக்கும். கணவர் உங்களின் கடின உழைப்பைப் பாராட்டுவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். ஆனால், சில காரியங்களைப் போராடி முடிக்கவேண்டி வரும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள்.  சலுகைகள் அதிகரிக்கும்.

மனத்தில் உற்சாகமும் நம்பிக்கையும் பிறக்கும் நேரமிது.

ராசிபலன்

கும்பம் 

நி
ர்வாகத் திறன் கூடும். வாய்ப்புகளும் பொறுப்புகளும் தேடிவரும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். கணவரின் நிறை குறைகளை அவருக்கு உணர்த்துவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதத்தைச் சாதுர்யமாகச் சரிசெய்வீர்கள். மாமியார் உங்களுக்கு உதவுவார். மைத்துனருக்குத் திருமணம் நிச்சயமாகும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவீர்கள்

வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். பலரால் பாராட்டப்படுவீர்கள்.

சமயோசித புத்தியால் சாதிக்கும் நேரமிது.

ராசிபலன்

மீனம்

ருமானம் உயரும். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளை வளர்த்தெடுப்பீர்கள். வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பிவந்து பேசுவார்கள். கணவரிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வெளியூர் பயணங்கள் இனிமை தரும்.

வியாபாரத்தில் வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலைவாங்குவது நல்லது.

உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். ஆனால், வருமானம் உயரும்.

நிதானத்தால் வெற்றிபெறும் நேரமிது.