Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

டிசம்பர் 4 முதல் 17 -ம் தேதி வரை

ராசிபலன்

டிசம்பர் 4 முதல் 17 -ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

ங்கள் ராசிக்குச் சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்பு கூடும். திருமணப் பேச்சுவார்த்தை நல்லவிதத்தில் முடியும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும். அவருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பயணங்கள் சாதகமாகும்.

சூரியன் 16-ம் தேதி வரை 8-ம் வீட்டில் இருப்பதால், அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும். சில வேலைகளை முடிப்பதில் திட்டமிடல் அவசியம். சொந்தபந்தங்கள்  மத்தியில் கலகலப்பாகப் பேசி மகிழ்வீர்கள். ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். ஆனால், குரு 8-ம் வீட்டில் இருப்பதால் புதிய நபர்களை முழுமையாக நம்பவேண்டாம். எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில், போட்டியாளர்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைஞர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

திறம்பட செயல்பட்டு காரியங்களைச் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதன் 7 - ம் தேதி வரை 6-ம் வீட்டில் நிற்பதால் வீண்செலவுகள் வந்துபோகும். 8-ம் தேதி முதல் புதன் 7-ம் வீட்டில் அமர்கிறார். ஆகவே, தடைப்பட்டு முடங்கிய காரியங்கள் அனைத்தும் நல்லவிதமாக நடந்தேறும். இதுவரை, உங்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்ட பிள்ளைகள், இனி உங்களின் அருமையைப் புரிந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எனினும் உங்களுக்கு வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

சூரியனும், குருவும் ஒன்றுசேர்ந்திருப்பதால் பணவரவு, வீடு, மனை சேர்க்கை ஆகிய பலன்கள் உண்டு. அரசு வேலைகள் பரபரப்பாக முடியும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.  எனினும் சக ஊழியர்கள் உதவிக்கு வருவார்கள். கலைஞர்களுக்குப் புதிய
வாய்ப்புகள் வீடு தேடி வரும்; பயன்படுத்தினால் முன்னேற்றம் உண்டு.

சாமர்த்தியமாகப் பேசிச் சாதிக்கவேண்டிய தருணம் இது.

ராசிபலன்

ராசிக்கு 5-ம் வீட்டில் சுக்கிரன் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்தபடி சில காரியங்கள் சுமுகமாக முடியும். உங்களின் திறமைகள் வெளிப்படும். கடன் பிரச்னைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். இளைய சகோதரிக்கு திருமணம் ஏற்பாடாகும்.

8-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் வீட்டில் மறைவதால், உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களுடன்  வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். ராசிக்கு 6-ம் வீட்டில் சூரியன் வலுவாக இருப்பதால், அரசாங்கக் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பிரபலங்கள் உதவிக்கு வருவார்கள். வியாபாரத்தில் சுமுகமான நிலைமை காணப்படும். புதிய கிளைகள் தொடங்குவது தொடர்பாக திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில், வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும் உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு, வராமல் இருந்த சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

சகிப்புத்தன்மையால் எதையும் சாதித்துக் காட்டும் நேரம் இது.

ராசிபலன்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருக்கிறார்கள். ஆகவே, தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில்கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களைக் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.

குரு சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்திருந்த பணம் உங்கள் கைக்கு வரும்.சுபகாரிய நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். மனதில் தெளிவு பிறக்கும். இப்போது நீங்கள் சந்திக்கும் புதிய மனிதர் ஒருவர் பெரிய அளவில் உதவுவார். செவ்வாய் சரியில்லாததால் கணவன், மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். வியாபாரத்தில், பழைய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உத்தியோகத்தில், மறைமுக எதிர்ப்புகள் வரலாம். அலுவலகம் பற்றி எவரிடமும் கருத்துப் பரிமாற்றம் செய்யவேண்டாம். கலைத்துறையினரைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். எனினும் கடமையில் கருத்தாக இருந்தால் கவலைகள் இல்லை.

மற்றவர்களின் மனதை வெல்லும் காலம் இது.

ராசிபலன்

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், பழுதான வாகனத்தை விற்றுவிட்டு,  புதிய வாகனம் வாங்குவீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள், ரத்தினங்கள் சேரும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீடு வாங்குவது கட்டுவது சாதகமாகும். செவ்வாய் 7 - ம் வீட்டில்  சாதகமாக இருப்பதால், சகோதரர்கள் பாசமாக நடந்துகொள்வார்கள். வீடு, மனை வாங்கவும் விற்கவும் சுமுகமான சூழல் உருவாகும். வெளிநாட்டிலிருந்து சிலருக்கு உதவிகள் கிடைக்கும்.

ராசிக்கு 4 - ம் வீட்டில் சூரியன் வலுவாக இருப்பதால், தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். 6-ம் வீட்டில்  நிற்கும் கேதுவால், தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும். அசாத்தியமான துணிச்சல்  மனதில் உருவாகும். கருமமே கண்ணாக காரியத்தில் இருப்பீர்கள். வியாபாரத்தில் பெரிய மாற்றங்களைச் செய்யும் சூழ்நிலை இப்போது இல்லை. பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உங்களுக்கான பணிகளை விரைந்து முடியுங்கள். கலைஞர்களின் சம்பளப் பாக்கி கைக்கு வந்து சேரும்.

எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் வேளை இது.

ராசிபலன்

ராசிக்கு 2 - ம் வீட்டில் சுக்கிரனும் ராசிநாதன் புதனும் சாதகமான வீடுகளில் தொடர்வதால், தள்ளிப்போன சுபகாரியங்கள் விரைந்து நடக்கும். வீடு களை கட்டும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக முடியும். சொந்தபந்தங்கள் மத்தியில் உங்களின் மதிப்பு - மரியாதை கூடும்.

ராசிக்கு 3-ம் வீட்டில் சூரியன் சாதகமாக இருப்பதால், நாடாளுபவர்கள் மற்றும் தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். 6-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக நிற்பதால், மறைமுக எதிரிகளாலும் ஆதாயம் உண்டு. உலக நடப்புக்கேற்ப உங்களையும் கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். வியாபாரத்தில், சரக்குகள் விற்றுத்தீரும்; நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்; முன்னேற்றம் உண்டாகும்.

நல்ல சந்தர்ப்பங்கள் அமைந்து முன்னேற்றம் காணும் நேரம் இது.

ராசிபலன்

ங்கள் ராசிநாதன் சுக்கிரன் தொடர்ந்து ஆட்சிபெற்று வலுவாக இருப்பதால், பிரச்னைகளைத் தைரியமாக எதிர்கொண்டு வெற்றிபெறுவீர்கள். முகப்பொலிவு கூடும். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வாழ்க்கைத் துணையின் வழியில் ஆதாயம் உண்டு. பிள்ளைகளிடமிருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். புதன் சாதகமாகச் செல்வதால், பண வரவு அதிகரிக்கும்.

செவ்வாய் நல்ல இடத்தில் இருப்பதால் புதிய திட்டம் மனதில் உதயமாகும். மாறுபட்ட அணுகுமுறையால் காரியங்கள் சாதிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சூரியன் 2-ம் வீட்டில் இருப்பதால், வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில்  பழைய பாக்கிகள் வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், நேரம் தவறாமையில் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்களுக்கு வெளிமாநில வாய்ப்புகள் கிடைக்கும்.

சிந்தனைத்திறத்தால் எதையும் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

சுக்கிரன் வலுவாக இருப்பதால் வரவேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாளாகப் போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பும் அதனால் முன்னேற்றமும் உண்டாகும். சூரியனும் புதனும் சாதகமான வீடுகளில் இருப்பதால், வேலைப்பளு குறையும். பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கண் எரிச்சல், தூக்கமின்மை வரலாம். உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது.

4 - ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் மனதில் தைரியம் கூடும்; எதையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். சகோதரர் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார். வி.ஐ.பி-களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று - வரவு உயரும். உங்களில் சிலர், புதிய கிளையைத் தொடங்க வாய்ப்பு கூடிவரும். உத்தியோகம் சார்ந்த பணிகளில், தேக்க நிலை மாறும். உங்களின் திட்டங்களால், நீங்கள் சார்ந்திருக்கும் நிறுவனம் முன்னேற்றம் அடையும். கலைத் துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும். 

அனுபவ அறிவைப் பயன்படுத்தி வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள். 8 - ம் தேதி முதல்  ராசிக்கு 12 - ம் வீட்டில் சூரியனுடன் புதனும் சேர்வதால், திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல் செல்வாக்கு, வி.ஐ.பி-களின் தொடர்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்ப்புகள் அகலும். சிலருக்குக் கௌரவப் பதவிகள் கிடைக்கும். ஜன்மச் சனி தொடர்வதால் மனஇறுக்கம், ஒற்றைத் தலைவலி வந்துபோகும். வியாபாரத்தில், அதிரடி மாற்றங்களும் புதுமைகளும் செய்வீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரி உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பார். கலைத் துறையினர் வீண் சச்சரவுகளில் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. பொறுமையாகச் செயல்பட்டால் பேரும் புகழும் கிடைக்கும்.

பொறுமையுடன் செயல்படவேண்டிய நேரம் இது.

ராசிபலன்

சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பாதியிலேயே நின்றுபோன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். பள்ளிக்கால நண்பர்களால் சில உதவிகள் கிடைக்கும். இஷ்டதெய்வத்தை வணங்க, வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். சூரியன் ராசிக்கு 11-ம் வீட்டில் பலமாக இருப்பதால், வரவேண்டிய பணம் கைக்கு வரும். வி.ஐ.பி-களின் அறிமுகமும் அவர்களால் உதவிகளும் கிடைக்கும். முடியாமலிருந்த பழைய பிரச்னைகளுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும்.

ஏழரைச் சனி தொடர்வதால், யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். செவ்வாய் 2-ம்  வீட்டில் நிற்கிறார். ஆகவே, சமயோசித புத்தியால் எதையும் சாதிப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
வியாபாரத்தில், உங்களின் நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போகவும். கலைஞர்களின் படைப்புகள் புகழைச் சேர்க்கும்.

சமயோசித செயல்பாடுகளால் வெற்றி ஈட்டும் வேளை இது.

ராசிபலன்

சுக்கிரன் வலுவாக இருப்பதால், வீட்டுக்குத் தேவையான மின்சாதனப் பொருள்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், தூரத்துச் சொந்தங்களைச் சந்திப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். சூரியன் சாதகமாக இருப்பதால், அரசாங்க விஷயங்களில் வெற்றியுண்டு. நாடாளுபவர்களின் சந்திப்பு நிகழும். வெகுகாலமாகப் போக நினைத்த வெளிமாநிலத்துப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

10 - ம் வீட்டில் குரு நீடிப்பதால், குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் சொல்லி ஆறுதல் தேட முனையவேண்டாம். வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனை செய்து புதிய முடிவுகள் எடுப்பது நல்லது. உத்தியோகத்தில், சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினருக்குப் புதிய தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து பணி புரியும் சூழல் உருவாகும்.

மனதில் புதிய சிந்தனைகள் பூக்கும் தருணம் இது.

ராசிபலன்

ராசிநாதன் குருபகவான் வலுவாக அமர்ந்திருக்கிறார். ஆகவே, அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் நட்பால் முன்னேற்றம் உண்டாகும். சொந்தபந்தங்கள் உங்களைப் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பி-களின் சந்திப்பும் அதனால் சில நற்பலன்களும் உண்டாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

சூரியன் 9 - ம் வீட்டில் நிற்பதால், தந்தையுடன் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். அரசு காரியங்கள் தள்ளிப்போய் முடியும். செவ்வாய் பலமற்று இருப்பதால், வீண் செலவுகளைத் தவிர்க்கவும். உடலநலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் மந்த நிலை காணப்படுவதால், அதற்கேற்ப கொள்முதல் செய்யவும். உத்தியோகத்தில், சில தருணங்களில் உயரதிகாரிகள் உங்களைக் கடிந்துகொண்டாலும், உங்களின் உழைப்பைப் புரிந்துகொண்டு பாராட்டுவார்கள். கலைஞர்கள், வாய்ப்புகளாலும் முன்னேற்றத்தாலும் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

சிறப்பான சிந்தனைகளால் முன்னேற்றம் காணும் நேரம் இது.

‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism