Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

டிசம்பர் 11-ம் தேதி முதல் முதல் 24-ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

டிசம்பர் 11-ம் தேதி முதல் முதல் 24-ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மேஷம் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். மகனின் அலட்சியப்போக்கு மாறும். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். சகோதர வகையில் வீண் வாக்குவாதங்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ராசி பலன்கள்



வியாபாரத்தில் வரவு உயரும். தொழில் போட்டிகள் இருக்காது.

உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். ஆனால், வேலைப்பளு அதிகரிக்கும்.

விட்டுக்கொடுத்து வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம்  நிர்வாகத்திறன் கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவர்களால் ஆதாயம் உண்டு. பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கணவர் உங்கள் ஆலோசனை களை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் வகையில் செலவுகள் வந்து போகும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது செய்ய வேண்டாம்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் நேரமிது.

மிதுனம்  திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். ஓரளவுக்கு பணம் கைக்கு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் ஆதரிப்பார்கள். கணவர் உங்களின் அர்ப்பணிப்பான பணிகளைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாகச் சரிசெய்வீர்கள். வீடு, மனை வாங்கு வது, விற்பது விரைந்து முடியும். சகோதரர் உதவிகரமாக இருப்பார். வாகனத்தைச் சரி செய்வீர்கள். வீண்செலவுகள் அதிகரிக்கும். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ராசி பலன்கள்



வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும்.

உத்தியோகத்தில் போட்டிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

எதையும் போராடி சாதிக்கவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

கடகம் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பெரிய பதவிகள் தேடிவரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையைத் தந்து முடிப்பீர்கள். கணவன் உங்கள் எண்ணங்களை ஏற்றுக்கொள்வார். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும்.

வியாபாரத்தில் புதிய முதலீடு செய்து, உங்களின் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் கூடும் நேரமிது.

சிம்மம் தடைகளும் ஏமாற்றங்களும் வந்தாலும் ஓய மாட்டீர்கள். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவருக்கு புதிய ஆலோசனைகள் தருவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று பிரச்னைகளிலிருந்து வெளியே வருவீர்கள். பணம் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

ராசி பலன்கள்



வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வீர்கள்.

சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். குடும்பத்தில் சில முக்கியப் பொறுப்புகள் உங்கள் கைக்கு வரும். கணவர் உங்களின் சகிப்புத்தன்மையைப் பாராட்டுவார். சமூகத்தில் செல்வாக்கு கூடும். குடும்ப நிகழ்ச்சி களை முன்னின்று நடத்துவீர்கள். எதிரும் புதிருமாக இருந்த உறவினர்கள், தங்களின் தவற்றை உணர்வார்கள்.

வியாபாரத்தில்  புதிய பணியாளர்களைச் சேர்ப்பீர்கள். புதிதாக ஒரு கிளையைத் தொடங்குவீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வார்.

புதிய கோணத்தில் யோசித்து வெற்றிபெறும் நேரமிது.

துலாம் மனவலிமை கூடும். சவாலான காரியங்களை யும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். அரசாங்க வகையில் சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பணத் தட்டுப்பாடு குறையும். வீடு, வாகன வசதிகள் பெருகும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். பிள்ளைகளின் வருங்காலத்துக்குத் திட்டமிடுவீர்கள்.

ராசி பலன்கள்



வியாபாரத்தில் பங்குதாரர்களை மாற்றுவீர்கள். முதலீட்டை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

சகிப்புத்தன்மையால் சங்கடங்கள் தீரும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம் எடுத்த காரியங்கள் யாவும் சுபமாக முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஷேர் மூலம் லாபமடைவீர்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமைசேர்க்கும்விதமாக நடந்துகொள்வார்கள். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கவேண்டியிருப்ப தால் லாபம் குறையும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

சிக்கல்களிலிருந்து விடுபடும் நேரமிது.

தனுசு எதிர்காலத் திட்டங்கள் தீட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று திருத்துவது நல்லது. வெளியூர் பயணம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள். உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.

ராசி பலன்கள்



வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள்.

உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்கவேண்டி வரும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும்.

கோபத்தைக் கட்டுப்படுத்தி வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம் சவால்களில் வெற்றிபெறுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வீடு கட்டும் பணி விரைந்து முடியும். கணவர் உங்கள் மனதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப  நடந்துகொள்வார். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புதிய முதலீடுகள் செய்வது நல்லது.

உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உயரதிகாரி பாராட்டுவார்.

சூழ்நிலைகளை மாற்றியமைக்கும் நேரமிது.

கும்பம் மனதில் இருந்த தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். கணவர் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள்.

ராசி பலன்கள்



வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வந்து பொருள்களை வாங்குவார்கள்.

உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு ஏற்படும்.

இங்கிதமான பேச்சால் உயரும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம் மறைந்துகிடந்த திறமைகள் வெளிப்படும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் பெருகும். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக் குள் வரும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். கௌரவப் பதவிகள் சிலருக்குத் தேடி வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும்.

புதிய முயற்சிகளில் வெற்றி காணும் நேரமிது.