தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

சூரியன் 10 - ம் வீட்டில் நிற்பதால் எதிலும் மகிழ்ச்சியுண்டு. புதிய வேலை கிடைக்கும். தந்தையுடனான பிணக்குகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவினர்கள் உங்களிடம் அன்பாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். நட்புவட்டம் விரியும். வெளியூர்ப் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும்.

சுக்கிரன் 8-ம் வீட்டில் மறைந்து நிற்பதால், உங்களை அலட்சியப்படுத்தியவர்களும் இனி மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் எளிதாக முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ராசிநாதன் 12 - ம் வீட்டில் நிற்பதால், அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிக்கவேண்டி வரும். கலைத் துறையினருக்குத் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும்.

எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் காலம் இது.

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

ராசிநாதன் சுக்கிரன் 7-ம் வீட்டில் இருப்பதால், மனைவி வழியில் அனுகூலம் உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கூடி வரும். சூரியன் 9 - ம் வீட்டில் நிற்பதால், தந்தைக்கு அலைச்சல் திரிச்சல் இருக்கும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். புதனும் செவ்வாயும் சாதகமான வீடுகளில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள்.

தடைப்பட்டிருந்த கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களில் சிலர், புது வீட்டில் குடிபுகுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் பாசமழை பொழிவார்கள். அஷ்டமச் சனி தொடர்வதால், எந்த விஷயமாக இருந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரத்தில், புதிய யுக்திகளால் தேங்கிக்கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கையை ஏற்பார்கள். கலைத் துறையினருக்குப் பொதுநிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

எதையும் சாதித்துக் காட்டும் வேளை இது.

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

ங்களின் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், குழப்பங்கள் நீங்கும்; தைரியம் பிறக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்துவந்த மோதல் போக்கு விலகும். பழைய சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். 10 - ம் வீட்டில்  செவ்வாய் சாதகமாக இருப்பதால், உடன்பிறந்தவர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். சொத்து விவகாரங்களில் சுமுகமான தீர்வு கிடைக்கும்.

சூரியன் 8 - ம் வீட்டில் மறைந்து புதனுடன் இருப்பதால், கௌரவப் பதவிகள் கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. சிலருக்கு வீடு மாறவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். வெளியூர்ப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.
வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் அதிகமான வருகையால் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில், உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். கலைத் துறையினருக்கு, திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

தொட்டதெல்லாம் துலங்கும் தருணம் இது.

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

சுக்கிரன் 5 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் சிக்கல் தீரும். சூரியனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், வி.ஐ.பி-களின் ஆதரவுடன் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

குடியிருக்கும் வீட்டில் கூடுதலாக ஓர் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். ராசியிலேயே ராகு நிற்பதால், முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பது நல்லது. வியாபாரத்தில், பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் மத்தியில் மதிப்பு உயரும். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

பொறுப்புகள் அதிகரிக்கும் நேரம் இது.

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

சூரியன் 6 - ம் வீட்டில் நிற்பதால், இதுவரை வாட்டி வதைத்த பிணிகள் நீங்கும்; உடல்நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் தடைகள் நீங்கும். கோலாகலமாக திருமணத்தை நடத்திவைப்பீர்கள்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். வீட்டைப் புதிது போல வடிவமைப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். செவ்வாயும் புதனும் சரியில்லாததால், உடன்பிறந்தவர்களால் மனவருத்தத்துக்கு ஆளாவீர்கள். சொத்து விவகாரங்களில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில், சக ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்துபேசி சலுகைகளைப் பெற்றுத் தருவீர்கள். உங்களின் செல்வாக்கு ஓங்கும்; உயர்வுகள் உண்டாகும். கலைத் துறையினருக்குப் பிறமொழிப் படங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.


அச்சங்கள் யாவும் விலகி, அதிகாரம் பெருகும் வேளை இது.

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

சுக்கிரன் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பொன்-பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் உங்களின் வீடு களைகட்டும். புதன் சாதகமாக இருப்பதால் பொறுமையும் புத்திசாலித்தனமும் வெளிப்படும். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்திப்பார்.

சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளுடன் கருத்துமோதல்கள் ஏற்படலாம்; அரவணைத்துச் செல்லவும். பிள்ளைகளின் அறிவுத் திறனை வளர்க்க புதிய முயற்சி செய்வீர்கள். 4-ம் வீட்டில் சனி நிற்பதால், தாயாரின் உடல்நலனில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில், சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். கலைத் துறையினர், தங்களின் படைப்புகள் பற்றி மற்றவர்களிடம் விவாதிக்கவேண்டாம்; வீண் விமர்சனங்கள் வர வாய்ப்பு உண்டு.

தன்னடக்கத்துடன் செயல்படும் தருணம் இது.

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

சூரியன் சாதகமாகச் செல்வதால், உங்களின் செல்வாக்குக் கூடும். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். தாய்வழியில் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். ராசிக்கு 6 - ம் வீட்டில் செவ்வாய் வலுவாக இருப்பதால், கமிஷன் வகையில் லாபம் உண்டு. எதிர்த்திருந்த பணம் கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு மகிழ்ச்சி தரும்.

2 - ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால், எந்த விஷயத்திலும் கனிவான பேச்சால் சாதிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். 2-ம் வீட்டில் குரு வலுவாக இருப்பதால், எடுத்த வேலையை விரைந்து முடிக்க எண்ணுவீர்கள். சுபச் செலவுகளும் திடீர்ப் பயணங்களும் இருக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில், உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித்தருவார். கலைத் துறையினருக்குப் பழைய சம்பள பாக்கி கிடைக்கும்.

எதிர்கால வெற்றிக்கு வித்திடும் காலம் இது.

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

சூரியன் 3 - ம் வீட்டில் நிற்பதால், எதிலும் வெற்றிபெறுவீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பதவிகள் தேடி வரும். வீடு கட்ட  வங்கிக்கடன் கிடைக்கும். புதிய இடத்தில் வேலை அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் கூடி வரும். புதன் சாதகமாக இருப்பதால், திடீர்ப் பயணங்கள் உண்டு. புதிய நட்பு மலரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

3-ம் வீட்டில் கேது வலுவாக அமர்ந்திருப்பதால், சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். சுக்கிரன் ராசிக்குள் நிற்பதால், மனதில் உற்சாகம் பிறக்கும். தோற்றப்பொலிவு கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில், அதிரடியான செயல்பாடுகளால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில், விமர்சனங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளுங்கள்; நிதானத்துடன் செயலாற்றி வெற்றி பெறுங்கள். கலைத்துறையினருக்கு, மூத்த கலைஞர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

கோபத்தைக் குறைக்கவேண்டிய வேளை இது.

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

புதன் வலுவாக இருப்பதால் புதிய சிந்தனைகள் பிறக்கும்; உங்களின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் வரும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். சூரியன் 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால்,  முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்; பேச்சில் நிதானம் தேவை.

சுக்கிரன் 12-ம் வீட்டில்  மறைந்திருப்பதால் திடீர் யோகம், ஆடை - ஆபரணச் சேர்க்கை உண்டு. 12-ம் வீட்டில் குரு நின்றாலும், சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள் - நண்பர்களால் நன்மையுண்டு.
வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். ஜன்மச் சனி தொடர்வதால் உடல்நலனில் கவனமாக இருங்கள். தங்க நகைகள் இரவல் வாங்குவதும் கொடுப்பதும் கூடாது. வியாபாரத்தில், புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில், உங்கள் கை ஓங்கும். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

செல்வாக்குடன் தலைநிமிர்ந்து நடக்கும் தருணம் இது.

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

செவ்வாய் 3-ம் வீட்டில்  நிற்பதால், புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். ஆன்மிகத்தில் மனம் ஈடுபடும். சூரியன் ராசிக்குள் நுழைந்திருப்பதால், பெற்றோருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். 

ராசிக்குள் புதன் அமர்ந்திருப்பதால் பணப் பற்றாக்குறை நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்தவரைச் சந்திப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால், உங்களின் செயலில் வேகம் கூடும்; எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவர். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபார லாபம் கணிசமாக உயரும்.
உத்தியோகத்தில், உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைத் துறையினரின் படைப்புத் திறன் வளரும்.

எதிலும் போராடி வெற்றிபெறும் நேரம் இது.

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

சூரியன், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். தடைகள் அனைத்தும் நீங்கி, திருமணம் கூடி வரும்.  உங்களில் சிலர், புதிய வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். சூரியனின் சஞ்சார பலன், உங்களுக்குத் திடீர்ப் பயணங்களை ஏற்படுத்துவதாக இருக்கும்.

2-ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால், உடன்பிறந்தவர்களிடம் வீண் சண்டை-சச்சரவுகள் வேண்டாம்; அவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். சுக்கிரன் வலுவடைந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வியாபாரத்தில், சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில், உங்களின் நேர்மையை மூத்த அதிகாரி புரிந்து கொண்டு உதவுவார். கலைத் துறையினருக்கு, வெகுநாள்களாகத் தடைப்பட்டிருந்த வாய்ப்பு, இப்போது கூடிவரும்.

உங்களின் திறமை வெளிச்சத்துக்கு வரும் வேளை இது.

ராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை

சூரியனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். உயர்ந்த பதவியும் பொறுப்புகளும் கிடைக்கும். அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சொந்தபந்தங்களின் குணங் களைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

சுக்கிரன் 9-ம் வீட்டில் நிற்பதால் ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும்.  புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவார்கள். கடன் கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தந்தைவழியில் மகிழ்ச்சி தங்கும். தந்தைவழிச் சொத்துகள் வந்து சேரும். செவ்வாய் ராசிக்குள் நிற்பதால், கோபத்தைத் தவிர்க்கவும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில், பதவி உயர்வு தேடி வரும். கலைத் துறையினருக்கு பாராட்டும் புகழும் கிடைக்கும்.

கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் தருணம் இது.

 ‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்