Published:Updated:

இந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை

இந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை
இந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை

மேஷராசி அன்பர்களே!

பொருளாதார வசதி நல்லபடியே காணப்படுகிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாரப் பிற்பகுதியில் உடல் நலனில் கவனம் தேவை.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே காணப்படுவீர்கள்
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். மற்றபடி வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கடின முயற்சிக்குப் பிறகே கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
மாணவர்கள் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் போது உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 25, 26, 27
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி 
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய் 
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச் 
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம். 

ரிஷபராசி நேயர்களே!

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். சகோதரர் நீங்கள் கேட்ட உதவியை செய்து தருவார். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பணவரவும் கூடுதலாகக் கிடைக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மாணவர்களுக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் மனம் விட்டுப் பேசி தெளிவு பெறுவது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 21, 22, 27
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 8

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அல்லல் போம் வல்வினை போம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம் - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.

மிதுனராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்த புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.
கலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வதுடன் சக கலைஞர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம்.

மாணவர்களுக்கு பிரச்னை இல்லாத வாரம் இது. படிப்பில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 23, 24
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

கடகராசி அன்பர்களே!

பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.  கணவன் - மனைவிக் கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. பொறுமையைக் கடைப்பிடிப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். பண வசதியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை
மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும், விளையாடும்போது கவனம் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் போதுமான பணம் இருப்பதால் சிரமம் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 21, 22, 25
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:5, 7

வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!

சிம்மராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாரப் பிற்பகுதியில் நீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல இடத்தில் வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்,
வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பணியாளர்க ளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவுக்குதான் இருக்கும். சக கலைஞர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். 

மாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால், மனதை அலைபாய விடாமல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 23, 24, 27
அதிர்ஷ்ட நிறம்: சந்தனம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:1, 9

வழிபடவேண்டிய தெய்வம்: கிருஷ்ணர்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுதேத்தும் 
ஆதியை அமுதை என்னையாளுடை அப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே

கன்னிராசி அன்பர்களே!

வருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வாரத் தொடக்கத்தில் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாக முடியும்.

வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், சரக்குகளைக் கொள்முதல் செய்யவும் சிலருக்கு வெளிமாநிலப் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி  வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. மூத்த கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பதில் ஆர்வம் ஏற்படும். ஆசிரியர்களிடம் பாராட்டு பெறும் வாய்ப்பு ஏற்படும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குத் தேவையான பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 21, 22, 25
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்.
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
 தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

துலாராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் எதையும் வார ஆரம்பத்திலேயே தொடங்கிவிடுவது நல்லது. நீண்டநாளாக நினைத்த சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாரப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. 

வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும்
புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

சக கலைஞர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

மாணவர்கள் உடன் படிக்கும் நண்பர்களுடன் அளவோடு பழகவும். பாடங்களில் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 22, 23, 24, 25
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக்கனியை அடைந்துய்ந்து போனேனே

விருச்சிகராசி அன்பர்களே!

குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன்  - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு பணியிடத்தில்  மாற்றம் ஏற்படக்கூடும். 
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலும், வருமானத்துக்கும் குறைவிருக்காது. சக கலைஞர்களால் அனுகூலம்  உண்டாகும்.
மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்பட வாய்ப்பு உண்டு என்பதால், மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது அவசியம்.
குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 23, 24, 25
அதிர்ஷ்டம் தரும் நிறம்: வெண்மை
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே

தனுசுராசி அன்பர்களே!

பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகளும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரி களின் ஆதரவு உற்சாகம் தரும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.
வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கடும் முயற்சியின் பேரிலேயே கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடைகள் ஏற்படும்.


மாணவர்கள் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வார முற்பகுதியில் மனதில் சிறுசிறு சலனம் ஏற்படக் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். நிர்வாகத் தினரின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 25, 26
அதிர்ஷ்டம் தரும் நிறம்: வெண்மை
அதிர்ஷ்ட எண்கள்: 7,9
சந்திராஷ்டம நாள்கள்: 21, 22

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.

மகரராசி அன்பர்களே!

பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் தேவையான உதவியும் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். 

அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். நிர்வாகத்தினரின் பாராட்டு கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்களால் தேவையான உதவி கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

கலைத்துறையினருக்கு போதிய வருமானம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படும்.
மாணவர்களுக்குத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர் பெற்றோர்களின் பாராட்டுகள் உற்சாகப்படுத்தும்.
குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளும் தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.
 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 21, 22, 27
அதிர்ஷ்டம் தரும் நிறம்: பச்சை
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7
சந்திராஷ்டம நாள்கள்: 23, 24

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் - பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு 
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே!

கும்பராசி அன்பர்களே!

பண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.  

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும்.

வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும் என்றாலும் அதனால் போதிய வருமானம் வருவதற்கில்லை.
மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டிய காலம். சக மாணவர்களிடம் அளவோடு பழகவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமையால் சற்று சோர்வு ஏற்படக்கூடும். ஆனால், சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 21, 22, 24
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9
சந்திராஷ்டம நாள்கள்: 25, 26

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே!

மீனராசி அன்பர்களே!

குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் வாரம். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 
வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளமுடியாதபடி சில தடைகள் உண்டாகும்.

மாணவர்களுக்கு நினைவாற்றலும்.பாடங்களில் ஆர்வமும் அதிகரிக்கும். பெற்றோர் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.
குடும்பத்தை  நிர்வகிக்கும் பெண்களுக்கு மனநிம்மதி தரும் வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த. சலுகைகள் கிடைக்கும். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 23, 24, 25
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7, 9
சந்திராஷ்டம நாள்: 27 

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மூவிரு முகங்கள் போற்றி! முகம்பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி, காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலர்அடி போற்றி, அன்னான்
சேவலும் மயிலும் போற்றி, திருக்கை வேல் போற்றி போற்றி!