மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜனவரி 22-ம் முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை

ராசி பலன்கள்

மேஷம் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.  அரசாங்க அலுவல்கள் எளிதாக முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீடு கட்ட வங்கிக்கடன் உதவி கிடைக்கும். பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். கணவரின் குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். புண்ணியஸ்தலங்களுக்குச் செல்வீர்கள்.

வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

நினைத்தது நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம் புதிய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உயர் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பூர்வீகச் சொத்தால் பலனடைவீர்கள். உங்களின் புதிய திட்டத்தைக் கணவர் ஆதரிப்பார். உறவினர் களின் வருகையால் வீடு களைகட்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். செலவுகள் இருந்துகொண்டே இருக்கும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகள் யாவும் எளிதாக விற்றுத் தீரும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.

வருங்காலத் திட்டத்துக்குப் பாதை அமைக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம் உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறைகள் எல்லோரையும் கவர்ந்திழுக்கும். சாதுர்ய மாகப் பேசி, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கணவரின் ஒத்துழைப்புடன் முக்கிய வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பழைய கடனைத் தீர்ப்பீர்கள். நவீனப் பொருள்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.

வியாபாரத்தில் வழக்கமான லாபத்தில் எந்தவித குறையும் இருக்காது.

உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போவது நல்லது.

அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம் செயலில் வேகம் கூடும். பிரபலங் களின் உதவியுடன் தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். உறவினர்கள் மதிப்பார்கள். கணவரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைப் புதிதாக நியமிப்பீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியரின் விடுப்பால் வேலைப் பளு அதிகரிக்கும்.

 செலவில் சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம் எதிர்ப்புகளை எளிதாகச் சமாளிப்பீர்கள். வெற்றிபெற்ற மனிதர்களின் அறிமுகமும் அரசால் அனுகூலமும் உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். புதிய வேலை அமையும். விலகிச்சென்ற உறவினர்கள், தோழிகள் வலிய வந்து உதவுவார்கள். நீங்கள் எதார்த்தமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களை முறியடிக்க, அதிகம் உழைக்க வேண்டி வரும்.

உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி, எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி துணிச்சலாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கணவர் ஆதரவாகப் பேசி, உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். தியானம் செய்யுங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவீர்கள்.

வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கற்றுக்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியந்து பாராட்டுவார்.

எதையும் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம் வருமானம் உயரும். அதற்கேற்ப செலவுகளும் கூடும். பிரச்னைகளைச் சமாளிக்கும் புதிய யுக்திகளைத் தெரிந்து கொள்வீர்கள். கணவரின் பாராட்டுதல்கள் மேலும் சாதிக்க தூண்டும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பூர்வீகச் சொத்தில் உங்கள் பங்கைக் கேட்டுப் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெற வேண்டியிருக்கும்.

உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். பதவி உயர்வும் சலுகைகளும் கிடைக்கும்.

இங்கிதமாகப் பேசி எதையும் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளெல்லாம் வெளிப்படும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகளின் எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். சொந்தங்கள் மெச்சும்படி நடந்துகொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உணவு விஷயத் தில் கட்டுப்பாடு அவசியம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு மனோபலம் அதிகரிக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். கணவரின் பெயருக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உடன்பிறந்த வர்கள் உதவுவார்கள். திடீர்ப் பயணங்கள் உண்டு. கொடுக்கல் வாங்கலில் எதையும் முன்னின்று செய்ய வேண்டாம்.

வியாபாரத்தில் புதிய முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள்.

உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது.

வளைந்துகொடுத்து சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம் புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். பதவியும் பொறுப்பும் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு கட்டுவீர்கள். கணவர் உங்களின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுவார். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழிநடத்து வீர்கள். உறவினர்கள், தோழிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.

வி.ஐ.பி-க்களின் ஆதரவால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம் சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை பிறக்கும். வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கணவர் பொறுப்பாக நடந்துகொள்வார். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி, அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். புதிதாக எதிலும் முதலீடு செய்ய வேண்டாம்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசவும்.

அலுப்பை விரட்டி அயராது உழைக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம் நினைத்த காரியம் நிறைவேறும். பெரிய பதவிகள் தேடி வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வார்கள். கணவர் மனம்விட்டுப் பேசுவார். பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். எதிரும் புதிருமாக இருந்த உறவினர்கள் தன் தவற்றை உணர்வார்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் காலநேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும்.

மனக்கலக்கம் விலகி மகிழ்ச்சி பிறக்கும் நேரமிது.

`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்