Published:Updated:

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை
ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

ங்களின் பூர்வபுண்ணியாதிபதி சூரியன் 10 - ம் வீட்டில் பலம் பெற்றிருப்ப தால், உங்களின் நிர்வாகத்திறன் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புதிய இடத்தில் வேலை அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய முயல்வீர்கள். நண்பர்களிடமிருந்து நல்ல செய்தி வந்து சேரும். 1 -ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் வலுவாக ஆட்சி பெற்றிருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

கடினஉழைப்பால் இலக்கை எட்டுவீர்கள்.

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

குருபகவான் வலுவாக இருப்பதால், வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் கூடி வரும். பழைய சொந்தபந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சூரியன் 9-ம் வீட்டில் தொடர்வதால், தந்தையாருடன் கருத்துவேறுபாடுகள் வரும். சேமிப்புகள் கரையும். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். அவர்களின் உயர்கல்வியில் நாட்டம் கூடும்.

1-ம் தேதி முதல் 12-ம் வீட்டில் செவ்வாய் அமர்வதால், தவிர்க்கமுடியாத பயணங்கள் வந்து போகும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் அநாவசிய பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பணியில் முன்னேற்றம் உண்டு. கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

தீராத பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் நேரம் இது.

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

செவ்வாய் 1-ம் தேதி முதல் லாப வீட்டில் வலுவாக அமர்வதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சூரியன் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால், எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். இயக்கம், சங்கம் ஆகியவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு.

ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிதாக ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத் துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

புதிய திட்டங்களை நிறைவேற்றும் காலம் இது.

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

குரு பகவான் வலுவாக இருப்பதால் சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய இடத்தில் வேலை அமையும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். சூரியன் 7-ம் வீட்டில் தொடர்வதால் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். வீடு வாங்க, கட்ட வங்கிக்கடன் உதவி கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வர வேண்டிய தொகை கைக்கு வரும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சி பெற்று நிற்பதால், எதிலும் வளைந்துகொடுத்து செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால், உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில், மேலதிகாரி மனம் திறந்து பாராட்டுவார். கலைத்துறையினரின் படைப்புத்திறன் வளர்ச்சி பெறும்.

அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

ராசிநாதன் சூரியன் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தந்தைவழி உறவுகளின் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

1 - ம் தேதி முதல் புதன் 7 - ம் வீட்டில் அமர்வதால் உறவினர், நண்பர்களுடன் இருந்த அதிருப்தி விலகும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் வீட்டில் அமர்வதால், அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனைச் செலுத்துவீர்கள். வியாபாரத்தில், கடையை உங்கள் ரசனைக்கேற்ப அழகுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் புதுப் பொறுப்பை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரை, உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவீர்கள்.

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. வீட்டைக் கட்டிமுடிக்க எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். சூரியன் 5-ம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். 1-ம் தேதி முதல் ராசிநாதன் புதன் 6-ம் வீட்டில் மறைவதால் உறவினர்கள், நண்பர்கள் உங்கள் நிலைமை புரியாமல் உதவி கேட்பார்கள்.

1-ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் வீட்டில் நிற்பதால் இடம், பொருள், ஏவலறிந்து பேசுங்கள். உடன்பிறந்தவர்கள், உரிமையுடன் ஏதாவது பேசினால், கவலைப்படவேண்டாம்; ‘மறப்போம் மன்னிப்போம்’ என இருப்பது நல்லது. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கவேண்டி வரும். கலைத்துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

உணர்ச்சிவசப்படாமல் காரியம் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்டு புதிய டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள், உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

சூரியன் 4-ம் வீட்டில் நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரர் சாதகமாக இருப்பார். 1-ம் தேதி முதல் 7-ம் வீட்டில்  செவ்வாய் அமர்வதால், உடல் உஷ்ண உபாதைகள் வரலாம். மனைவிவழி உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யவேண்டாம். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் புதுக் கிளைகளைத் தொடங்குவீர்கள். சிலர் புதிதாகத் தொழில் தொடங்குவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினருக்கு, எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சமயோஜித புத்தியால் எதையும் சாதிப்பீர்கள்.

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

ராசிநாதன் செவ்வாய் 1 - ம் தேதி முதல் 6 - ம் வீட்டில் வலுவாக இருப்பதால், எதிர்த்தவர்களே உங்களைத் தேடி வருவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். சகோதர வகையில் ஒற்றுமை வலுக்கும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். தாய்மாமன், அத்தை வகையில் ஆதரவு பெருகும். சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால், புதிய இடத்தில் வேலை கிடைக்கும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்கக் காரியங்கள் உடனே முடியும்.

ஜன்ம குரு தொடர்வதால் அடுக்கடுக்காகச் செலவுகள், வேலைச்சுமை, தூக்கமின்மை ஆகியவை வந்து போகும். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில், வேலைப்பளு அதிகரிக்கும். கலைத்துறையினர், புதுமையான படைப்பால் சாதிப்பார்கள்.

காத்திருந்து காய் நகர்த்தி வெற்றிபெறும் காலம் இது.

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்களின் அழகு, இளமை கூடும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டார பழக்கங்களில் நன்மை உண்டு. இல்லத்தில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். சிலர், இருக்கும் வீட்டைக் கொஞ்சம் விரிவுபடுத்தி கட்டுவார்கள். ஆனால் 2-ம் வீட்டில் நிற்கும் சூரியன் கறாராகப் பேசவைப்பார். இதைச் சிலர் குறை கூறுவார்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். மனைவி வழியில் செல்வாக்கு கூடும். புதிய வேலை அமையும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். 1-ம் தேதி முதல் 5-ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால், எதிர்மறை எண்ணங்கள், எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். குரு 12-ம் வீட்டில் நீடிப்பதால், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

மதிப்பும் அந்தஸ்தும் உயரும் வேளை இது.

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

குருபகவான் 11-ம் வீட்டில் நிற்பதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், வேலைச்சுமை, தாமதம் வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சாதுர்யமாகப் பேசி சில காரியங்களைச் சாதிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 1-ம் தேதி முதல் செவ்வாய் 4 - ம் வீட்டில் நிற்பதால், மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். சகோதரருக்குத் திருமணம் முடியும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள், வேலையாள்களால் சின்னச்சின்ன பிரச்னைகள் வரும்; பேசி தீர்ப்பது நல்லது. உத்தியோகத்தில், உயரதிகாரி வெறுப்பாகப் பேசினாலும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரின் சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய காலம் இது.

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

ராகு 6-ம் வீட்டிலும் கேது 12-ம் வீட்டிலும் வலுவாக நிற்பதால், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 12-ம் வீட்டில் சூரியன் மறைந்திருப்பதால் வீண் விரயம், வேலைச்சுமை, திடீர்ப் பயணங்கள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். திருமணம், சீமந்தம் போன்ற சுபச்செலவுகள் வரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களின் தனித்திறமை அனைத்திலும் பளிச்சிடும். வி.ஐ.பி-களால் பாராட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். குடும்பத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகளைச் சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில்ம் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் அதிகம் மூக்கை நுழைக்காதீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறும் வேளை இது.

ராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை

சூரியனும் கேதுவும் 11-ம் வீடான லாப ஸ்தானத்தில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பண பலம் உயரும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துகொள்வார்கள். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள்.

1-ம் தேதி முதல் செவ்வாய் 2-ம் வீட்டில் நிற்பதால் இடம், பொருள், ஏவலறிந்து அதற்கேற்ப பேசி சாதிப்பீர்கள். சகோதரர்கள் உங்களின் உண்மையான அன்பைப் புரிந்துகொள்வார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில், சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் காலம் இது.

 ‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு