Published:Updated:

இந்த வார ராசிபலன் : ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை

மீனம் ராசி நேயர்களே: பொருளாதார நிலை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பம் உண்டாகும்.

இந்த வார ராசிபலன் :  ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை
இந்த வார ராசிபலன் : ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை

மேஷம் ராசி நேயர்களே: பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால்  சேமிக்க முடியாத நிலை ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வழக்குகளில் இதுவரை இருந்து வந்த இழுபறியான நிலை மாறி சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால், உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள்.

வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புதிய திட்டங்களுக்குச் சிறப்பான முறையில் செயல்வடிவம் கொடுப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் கிரகித்துக் கொள்வீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும் என்றாலும் உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜனவரி: 28, 29; பிப்ரவரி: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5
சந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி: 30, 31
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 

ரிஷபம் ராசி நேயர்களே: பொருளாதார நிலை திருப்திகரமாக உள்ளது. வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற் கில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடையே இருந்த மனக் கசப்பு நீங்கி ஒற்றுமை வலுப்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன் தேடும் முயற்சிகள் சாதகமாகும். பால்ய கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு எதிர்பார்த்துத் தடைப்பட்ட  பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், புதிய திட்டங்களைத் தீட்டவும் செய்யலாம். சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும், அதற்கேற்ற வருமானம் கிடைக்காது. மூத்த கலைஞர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. 

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் குறையக்கூடும். சிலருக்கு மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு, குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் கிடைக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜன: 29, 30, 31
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5
சந்திராஷ்டம நாள்கள்: பிப்: 1, 2
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் - நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்த
சஷ்டி கவசந்தனை
அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.

மிதுனம் ராசி நேயர்களே: எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிக்கக்கூடிய அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாகும். சகோதரர்களுடன் இணக்கமான உறவு ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 

அலுவலகத்தில் தங்கள் பணிகளை மட்டும் கவனமாகச் செய்து வருவது நல்லது. மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக்  கிடைக்கும். பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்னை இல்லாமல் இருக்கும். பணியாளர்களிடம் கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் எதுவும் இருக்காது. வருமானமும் திருப்திகரமாக இருக்கும். 
மாணவர்களுக்குப் பாடங்களை  படிப்பதில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜன: 30, 31, பிப்: 1, 2
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5
சந்திராஷ்டம நாள்: பிப்: 3
வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை 
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் - பிறைமுடித்த 
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே -அன்பு முன்பு 
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

கடகம் ராசி நேயர்களே: எதிர்பாராத பணவரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு, உரிய மருத்துவச் சிகிச்சையினால் உடனே சரியாகும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.

அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப் பெறலாம். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களிடமும் பணியாளர்களிடமும் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிறுசிறு தடை தாமதங்கள் ஏற்படும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவர்கள் படிப்பில் ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். ஆசிரியரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கக்கூடும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: பிப்: 1, 2, 3,
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

சிம்மம் ராசி நேயர்களே: தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற் கில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வார இறுதியில் கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாரப் பிற்பகுதியில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும், ஊதிய உயர்வும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

வியாபாரிகளுக்கு பல வகைகளிலும் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கும். இதுவரை தடைப்பட்டு வந்த கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்லபடியாக முடியும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும்..
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமமான வாரமாக இருக்கும். ஆனால், பாதிப்பு எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜன: 28, 29, பிப்: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விநாயகனே வெவ்வினையை  வேரறுக்கவல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில்  பணிமின் கனிந்து 

கன்னி ராசி நேயர்களே: பணவரவு திருப்திகரமாக இருக்கும். சில அநாவசியமான செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். திருமணம் தடைப்பட்டு வந்தவர்களுக்கு திருமணம் கூடி வரும். வழக்குகளில் இருந்த பிற்போக்கான நிலைமை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அலுவலகத்தில் உங்கள் பொறுப்புகளை சிறப்பாகச் செய்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் வழக்கமான நிலையே நீடிக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கை தேவை. முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விடவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மாணவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. மாதாந்திரத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரையும். எதிர்பாராத விருந்தாளிகள் வரக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜன: 30, 31
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: மீனாட்சி அம்மன்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சொல்லும் பொருளுமென நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே!நின்புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!.

துலாம் ராசி நேயர்களே: பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மூத்த சகோதரர்களின் அறிவுரையும் உதவியும் ஆறுதல் தருவதாக இருக்கும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர் கள்.வேலையின் காரணமாக சிலருக்குக் குடும்பத்தை தற்காலிகமாக பிரியவேண்டிய சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.

வியாபாரத்தில் வங்கிக் கடன் கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். 
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மூத்த கலைஞர்களின் அறிவுரைகள் உங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுவதாக இருக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். மனதில் பல்வேறு எண்ணங்கள் தோன்றி சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடும். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் சந்தோஷம் தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜன: 31, பிப்: 1, 2, 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஆலம்தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும் 
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை, 
ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்றவாறே! .

விருச்சிகம் ராசி நேயர்களே: பணவரவு சுமாராகத்தான் இருக்கும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை.  கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வெளி மாநிலப் புண்ணி யத் தலங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மூத்த சகோதரர்களின் ஆலோசனை உங்க ளுக்கு நன்மை தருவதாகவே இருக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

அலுவலகத்தில் உங்கள் பொறுப்புகளை சிரத்தையுடனும் ஆர்வத்துடனும் செய்து நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சில சலுகைகளும் கிடைக்கக் கூடும்.

வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விடவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.மூத்த கலைஞர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது எதிர்காலத்துக்கு நல்லது.

மாணவர்களுக்கு படிப்பை விடவும் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். சக மாணவர்களிடம் பழகுவதில் கவனமாக இருக்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் பொறுமையுடன் இருக்கவேண்டிய வாரம். அலுவல கத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜன: 30, 31, பிப்: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி    
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்    
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பிரண்டு முடனே    
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. 

தனுசு ராசி நேயர்களே: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் காணப்படும். சகோதரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். வழக்குகளில்  சிறிது காலம் பொறுமை காப்பது அவசியம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணிகளை நல்லபடி முடிப்பதில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் இப்போது கிடைக்கும்.

வியாபாரம் நன்றாக நடக்கும். முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகம் ஆவார்கள். சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிறு சிறு பிரச்னைகள் உண்டாகும். சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விரும்பும் பாடப் பிரிவில் படிப்பதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜன: 28, 29, பிப்: 1, 2
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு


அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
 தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

மகரம் ராசி நேயர்களே: பணவரவு திருப்தி தருவதாக இருக்கும்.ஆனாலும், தேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பொறுமையுடன் இருப்பது அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. 

வியாபாரம் சற்று மந்தமாகவே இருக்கும். லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும். சக வியாபாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பக்குவமாக நடந்துகொள்ளவும். 

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் எதுவும் இருக்காது. வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்களுக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். பணவரவு திருப்தி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அனுகூலமான வாரம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜன: 29, 30, 31, பிப்: 3
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே.

கும்பம் ராசி நேயர்களே: பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், பயணத்தின் போதும் வீட்டிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதுடன் சக பணியாளர்களும் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள்.

வியாபாரத்தில் இருக்கும் நிலையே நீடிக்கும். பழைய பாக்கிகளைப் பக்குவமாகப் பேசித்தான் வசூலிக்கவேண்டி இருக்கும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்கள் உதவி செய்வார்கள்.

மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிப்பதில் விருப்பம் இருந்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபட்டால் வெற்றிகரமாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு கூடும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜன: 30, 31, பிப்: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: அகிலாண்டேஸ்வரி

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

மீனம் ராசி நேயர்களே: பொருளாதார நிலை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பம் உண்டாகும். தேவையற்ற சில பிரச்னைகளால் மனதில் அடிக்கடி சஞ்சலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தந்தைவழியில் அனுகூலம் உண்டாகும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அதிகாரி களிடமும், சக பணியாளர்களிடமும் மதிப்பும் மரியாதையும் கூடும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தத் தேவையான பண உதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடை இல்லாமல் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்களுக்குப் பாடங்களில் ஈடுபாடு குறையக்கூடும். மனதை ஒருநிலைப்படுத்தி பாடங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: பிப்: 1, 2, 3
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5
சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 28, 29

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே.