
பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை

மேஷம் உங்கள் கை ஓங்கி நிற்கும். புது வேலை அமையும். வருமானம் அதிகரிக்கும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். கணவர் உங்களைப் பாராட்டுவார். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். மாமியார் உங்களிடம் முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார். சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
திட்டமிடுதல் மூலம் வெற்றிபெறும் நேரமிது.

ரிஷபம் சமூகத்தில் மரியாதை கூடும். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். புதிய பொறுப்பும் பதவியும் தேடி வரும். கல்யாண முயற்சி கைகூடும். கணவர் உங்களுக்கு முழுச் சுதந்திரம் தருவார். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்வார்கள். வழக்கில் சாதக மான தீர்ப்பு வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
வியாபாரிகள் தங்களின் ரசனைக்கேற்ப கடையை மாற்றியமைப்பார்கள்.
உத்தியோகத்தில் அலைச்சல்கள் இருக்கும். சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.
எதிலும் முதலிடம் பிடிக்கும் நேரமிது.

மிதுனம் சவால்களில் வெற்றிபெறுவீர்கள். கணவர் உங்களின் வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகளின் வருங் காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வெளியூர்ப் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக் கும். உறவினர்கள் உங்களின் திறமையைக் கண்டு ஆச்சர்யப்படுவார்கள்.
வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் தலைமை அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.
நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நேரமிது.

கடகம் மனப்போராட்டங்கள் விலகும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். பழைய இடத்தை நல்ல விலைக்கு விற்று, புது வீடு வாங்குவீர்கள். வி.ஐ.பி-க்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவர் உங்களின் பெருந்தன்மையை இப்போது புரிந்துகொள்வார். ஆனால், பிள்ளைகள் அவ்வப்போது கோபப்படுவார்கள். மைத்துனருக்கு தள்ளிப்போன திருமணம் நிச்சயமாகும்.
வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள்.
உத்தியோகத்தில் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.
முக்கிய முடிவை துணிச்சலாக எடுக்கும் நேரமிது.

சிம்மம் எண்ணங்கள் நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கணவர் உங்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உறவினர்கள் வீட்டு திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், வேலைச்சுமை, தூக்கமின்மை, மன இறுக்கம் தரும்.யோகா, தியானத்தில் ஈடுபடவும்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் அதிரடி லாபம் உண்டு.
உத்தியோகத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
நிதானத்தால் எதையும் சாதிக்கும் நேரமிது.

கன்னி மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பண வரவு திருப்தி தரும். கணவரின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால், திடீர்ப் பயணங்கள், சொத்துப் பிரச்னைகளை நிதானத்துடன் கையாளவும். அளவாகப் பேசுவது நல்லது.
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்கவேண்டிவரும்.
நீண்ட கால சிக்கல்கள் முடிவுக்கு வரும் நேரமிது.

துலாம் மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீட்டைச் சீர்செய்து அழகுபடுத்துவீர்கள். உறவினர்கள் வழியில் நல்ல செய்தி வரும். தோழியிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. சகோதரர்கள் மதிப்பார்கள். கமிஷன் வகையில் பண வரவு உண்டு. எதிர்பாராத சந்திப்புகள் நிகழும்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
உத்தியோகத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அதிகாரிகளை ஆச்சர்யப்படுத்துவீர்கள்.
சமயோஜித புத்தியுடன் நடந்துகொள்ளும் நேரமிது.

விருச்சிகம் பல வேலைகளை உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறு வீர்கள். கணவரின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டி அவரை மாற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப் பாக நடந்துகொள்வார்கள். மாமியார் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார்.
வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும், தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
சின்னச்சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

தனுசு உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். புது வேலை கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு கணவர் ஆதரவு தருவார். பிள்ளைகள் உங்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
வியாபாரத்தில் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் சில சவாலான வேலைகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.
வெற்றிக்கனியைச் சுவைக்கும் நேரமிது.

மகரம் செயலில் வேகம் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு நடப்பார். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். பழுதாகிக்கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். எதிரும்புதிருமாக இருந்த உறவினர்கள் தம் தவற்றை உணர்வார்கள். புண்ணியத்தலங்கள் சென்றுவருவீர்கள். மாமியார் உதவிகரமாக இருப்பார்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.
உத்தியோகத்தில் சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள்.
சவால்களில் வெற்றிபெறும் நேரமிது.

கும்பம் பேச்சில் கம்பீரம் பிறக்கும். வழக்கு சாதகமாகத் திரும்பும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கணவர் பாச மழை பொழிவார். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார்கள். உறவினர்கள், தோழியின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை வழங்குவீர்கள். லாபமும் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
சொன்ன சொல்லை நிறைவேற்றும் நேரமிது.

மீனம் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்த தொகை வரும். சுப நிகழ்ச்சி கள் ஏற்பாடாகும். கணவர் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார். பிள்ளை களால் சமூகத்தில் மதிப்பு கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். எதிர்பார்த்த அயல் நாட்டுப் பயணம் அமையும். உறவினர்கள், தோழிகளின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும்.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
வாழ்க்கையில் புதிய வசதிகள் கிடைக்கும் நேரமிது.
-`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்