Published:Updated:

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை
ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

சூரியனும் புதனும் லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் பணவரவு உண்டு. சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். வீட்டைக் கட்டிமுடிக்க எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தபந்தங்கள் உங்களைப் புரிந்துகொண்டு வலிய வந்து பேசுவார்கள். வழக்கில் வெற்றி உண்டு.

சுக்கிரனும் சாதகமாகச் செல்வதால், சொந்தபந்தங்களின் மத்தியில் செல்வாக்கு கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். விலையுயர்ந்த ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல் நலம் சீராகும். உடன்பிறந்தவர்களுடன்  வீண்வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் வேலையாள்கள் லாபம் ஈட்டித் தருவர். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

தொலைநோக்குடன் இலக்கை அடையும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

ராசிநாதன் சுக்கிரன் 9-ம் வீட்டில் நுழைவதால் புதுத் தெம்பு பிறக்கும். பழைய சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் கூடுதலாகச் செலவு செய்து அதைச் சீர்திருத்தம் செய்வீர்கள். சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால், புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

குரு வலுவாக இருப்பதால் வீட்டில் தள்ளிப்போன சுப காரியங்கள்  நல்லவிதமாக நடந்தேறும். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும். செவ்வாய் ராசிக்கு 12 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் சேமிப்புகள் கரையும். சகோதரரால் அலைச்சல் இருக்கும். வெளியிடங்களில் நிதானித்துப் பேசுவது நல்லது. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில், உங்கள் திறமையை மூத்த அதிகாரி பாராட்டுவார். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

ங்களின் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பணம் ஓரளவு வரும். குரு 6 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. செவ்வாய் 11-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். பாக்கி தொகையைக் கொடுத்து, புதிய சொத்துகளுக்குப் பத்திரப் பதிவு செய்வீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

வெற்றிப் பயணம் தொடரும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

செவ்வாய் 10-ம் வீட்டில் தொடர்வதால் கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஓடி வந்து உதவுவார்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். சூரியன் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வாழ்க்கைத்துணை வழியில் பிணக்குகள் நீங்கும்; அவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சுக்கிரன், புதன், குரு ஆகிய மூன்று கிரகங்களும் சாதகமாக இருப்ப தால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். வி.ஐ.பி-களின் ஆதரவால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.  பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாள்கள், பங்குதாரர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தைப் பொறுத்தவரையிலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினரை, மூத்த கலைஞர்கள் பாராட்டுவார்கள்.

வசதி- வாய்ப்புகள் பெருகும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

புதன் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் வாகன விபத்து, வீண் டென்ஷன், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். சிக்கனமாக இருக்கவேண்டுமென்று நினைத்தாலும், செலவுகள் அதிகரிக்கும்.

குரு 4-ம் வீட்டில் தொடர்வதால் வீண் விரயம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். ராசிநாதன் சூரியன் 7-ம் வீட்டில்  நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். செவ்வாய் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகமாகும். எனினும் வீடு, மனை புதிதாக வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது செய்யவேண்டாம். உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகளைச் சமாளிக்க வேண்டி வரும். கலைத்துறையினரை அலட்சியப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

விட்டதைப் பிடிக்கும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

சுக்கிரன் சாதகமாகச் செல்வதால், பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சூரியன் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர் கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு கட்ட எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். முன்கோபத்தைக் குறைத்து நிதானமாகச் செயல்படவும்.செவ்வாய் 8-ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள் அதிருப்தி அடைவார்கள். வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். கலைத்துறையினரின் திறமையை வெளிப்படுத்த தகுந்த வாய்ப்பு வரும்.

புதிய யுக்திகளைக் கற்றுக்கொள்ளும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சுறுசுறுப்படைவீர்கள். முடிவுகள் எடுப்பதில் தயக்கங்கள் நீங்கும். இழுபறியான வேலைகள் முடியும். குடும்பத்தில் அமைதி திரும்பும். மனதுக்கு இதமான செய்திகள் வந்து சேரும். குரு வலுவாக இருப்பதால், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

சூரியன் 5 - ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதன் 5 - ம் வீட்டில்  நிற்பதால் உறவினர்களின் ஆதரவு உண்டு. புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களும் பங்குதாரர்களும் தேடி வருவார்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகளுக்கு நெருக்கம் ஆவீர்கள். கலைத்துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள்.

சவால்களைச் சமாளிக்கவேண்டிய நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ஜன்ம குரு தொடர்வதால், எதிர்மறை எண்ணம், உடல் அசதி வந்து நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயமடைவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புதனும் சூரியனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய கோணத்தில் யோசித்து பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

நிதானத்துடன் முன்னேறும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

புதனும் சூரியனும் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்களில் வெற்றிபெறுவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்லவிதத்தில் அமையும். செவ்வாய் 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

சுக்கிரன் சாதகமாகச் செல்வதால் ஆடை, ஆபரணங்கள் அதிகமாகச் சேரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளியூர்ப் பயணங்களில் திடீர் திருப்பம் உண்டாகும். குரு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வேலைச்சுமை, சோர்வு, சலிப்பு ஆகியவை வந்து நீங்கும். வியாபாரத்தில், பெரிய நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில், மேலதிகாரியிடம் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத் துறையினருக்குப் பழைய பாக்கிகள் வசூலாகும்.

தொட்டதெல்லாம் துலங்கும்  நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியம் சீராகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகன வசதி பெருகும்.

குரு வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குல தெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சூரியன் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்பதால் கண், காது வலி வந்து நீங்கும். சகோதரர்கள் வகையில்  செலவுகள் அதிகரிக்கும். வியாபார ரகசியங்களை எல்லோரிடமும் பேசவேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். கலைத்துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

தடைப்பட்ட காரியங்கள் உடனுக்குடன் முடியும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்திகள் உண்டு. நவீன மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

ராசியில் சூரியன் நிற்பதால் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். செவ்வாய் 3-ம் வீட்டில் தொடர்வதால், உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வேலையாள்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து விலகும். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நேரம் இது.

ராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை

சுக்கிரனும் புதனும் சாதகமான நிலையில் உள்ளதால், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வி.ஐ.பி-களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வகையில் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குச் சுமுகத் தீர்வு காண்பீர்கள்.

குரு வலுவாக இருப்பதால், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். 12-ம் வீட்டில் சூரியனும் 2-ம் வீட்டில் செவ்வாயும்  நிற்பதால், பேச்சில் கடுமை காட்டாதீர்கள். பணியாளர்களால் வியாபாரத்தின் தரம் உயரும். உத்தியோகத்தில், மேலதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

புதிய பாதையில் பயணிக்கும் நேரம் இது.

-‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்