Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மார்ச் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை

ராசி பலன்கள்

மார்ச் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்
ராசி பலன்கள்

மேஷம் எதிர்பாராத பணவரவு உண்டு. தடைபட்ட திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதி பெருகும். கணவர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார். அவருக்குத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. உயர் ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். மாமனார், மாமியார் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளித்து முன்னேறுவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச் சுமையால் சோர்வு வந்து நீங்கும்.

குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நாத்தனாரின் அன்புமழையில் நனைவீர்கள். முகப்பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னை முடிவுக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையே வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் இருந்த தடுமாற்றம் நீங்கி, லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.

தன்னம்பிக்கையால் சாதித்துக் காட்டும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம் புதிய யோசனைகள் பிறக்கும். சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பண வரவு திருப்திதரும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் வெற்றிதரும். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும். அயல்நாட்டுப் பயணம் அமையும். உறவினர்களை அனுசரித்துப்போவது நல்லது.

வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள்.

உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

சகிப்புத்தன்மையால் சாதித்துக்காட்டும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம் கடந்த சில நாள்களாக முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த நீங்கள், திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர்செய்வீர்கள். புதிதாகப் பொருள்கள் வாங்குவீர்கள். கணவருடன் மோதல் வந்து நீங்கும். நீண்ட நாள்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவரைச் சந்திப்பீர்கள். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.

வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புது ஒப்பந்தங்கள் கைக்கு வரும்.

உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் இழுத்துப்போட்டுச் செய்யவேண்டி வரும்.

பொறுப்புடன் செயல்படும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம் வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். பிள்ளைகள், குடும்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் பொறுப்பாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள். ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வியாபாரத்தில் புது முதலீடு செய்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

புதிய எண்ணங்கள் மனத்தில்  உதயமாகும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். உறவினர்களிடமிருந்த கசப்பு உணர்வு நீங்கும். மனவலிமை கூடும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு உண்டு. வழக்கிலிருந்த பயம் விலகும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். கணவருக்கு புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை யால் நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமையை மேலதிகாரி பாராட்டுவார்.

சகிப்புத்தன்மையால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம் வி.ஐ.பி-க்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள்களாக வரவேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக் கும். மகனின் பிடிவாதம் தளரும். பழைய சொந்தங்கள் தேடி வரும். உறவினர்கள், தோழிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அரசு வகையில் ஆதாயம் உண்டு. வழக்குகள் சாதகமாகும். நாத்தனார் உங்களைக் கலந்தாலோசிப்பார். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

வியாபாரத்தில் முழுமூச்சுடன் இறங்கி விரிவுபடுத்து வீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

தன்னம்பிக்கையால் எதையும் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம் நினைத்தது நிறைவேறும். விமர் சனங்களைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். வீட்டில் தள்ளிப்போன திருமணம் கூடி வரும். சில நாள்களாக முடிவெடுக்கமுடியாமல் இருந்த விஷயங்களில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவர் உங்கள் வேலையைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். பழைய கடனைக் கொடுத்து முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் பங்குதாரர்களால் தொடர்ந்த பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். சம்பள உயர்வு கிடைக்கும்.

புதிய பாதை தெரியும் பொன்னான நேரமிது.

ராசி பலன்கள்

னுசு நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகளுக்கு உங்களின் தகுதிக்கேற்ற நல்ல வரன் அமையும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். அண்டை அயலாரின் அன்புத்தொல்லைகள் குறையும். நவீன பொருள்கள் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில்
வேலைச்சுமை அதிகரித்தாலும், அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள்.

இழுபறி நிலைமாறி, ஏற்றம்பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

கரம் புத்திசாலித்தனம் வெளிப்படும். பிரச்னைகளின் ஆணிவேரை அறிவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வீடு கட்ட, வாகனம் வாங்க கடன் உதவி கிடைக்கும். கணவர் உங்களின் கடின உழைப்பைப் பாராட்டுவார். நீங்கள் கொடுக்கும் அறிவுரைகளை ஏற்று, பிள்ளைகள் தேர்வை நல்ல முறையில் எழுதுவார்கள். மாமனார், மாமியார் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். எதிர்கால திட்டம் ஒன்று மனத்தில் உதயமாகும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும், சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.

விடாமுயற்சியால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம் வாழ்வில் புதிய வெளிச்சம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகனுக்கு  நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பள்ளி, கல்லூரி கால தோழியைச் சந்தித்து மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். புதிதாக வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவீர்கள். மாமியார், நாத்தனாருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தில் அதிரடியான தள்ளுபடிகள் கொடுத்து நல்ல லாபம் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில்  புதிய பயிற்சி வகுப்புகள் சிலவற்றில் சேருவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

இங்கிதமான பேச்சால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப் பீர்கள். கணவர் உங்களின் தியாகத்தை மதிப்பார். குழந்தைபாக்கியம்  சிலருக்குக்  கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். மகனுக்கு வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.  கார உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளித்து முன்னேறுவீர்கள்.

உத்தியோகத்தில்
அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும்.

பிரபலங்களால் பாராட்டு பெறும் நேரமிது.

`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்