Published:Updated:

வீட்டுமனை விருத்தி அடைய...

வீட்டுமனை விருத்தி அடைய...
பிரீமியம் ஸ்டோரி
வீட்டுமனை விருத்தி அடைய...

சுப்ரமணிய சாஸ்திரிகள்

வீட்டுமனை விருத்தி அடைய...

சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:
வீட்டுமனை விருத்தி அடைய...
பிரீமியம் ஸ்டோரி
வீட்டுமனை விருத்தி அடைய...
வீட்டுமனை விருத்தி அடைய...

புதிதாக வாங்கியிருக்கும் மனையில் வீடு கட்டும் பணியைத் தொடங்கப்போகிறீர்களா? எனில், `மய மதம்’ எனும் ஞானநூலின் வழிகாட்டல்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும்.

மய மதம் - முதல் பாகம், 3-வது அத்தியாயத்தில், கிரகிக்கத்தக்க பூமிகள் (நிலங்கள்), இகழத்தக்க பூமிகள், புகழத்தக்க பூமிகள் குறித்தான தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதாவது, இடத்தின் (பூமி) நிறம், மணம், சுவை, வடிவம், திசை, ஒலி, தொடு உணர்ச்சி ஆகியவற்றின் தன்மைகளை அறிந்து, நல்ல இடத்தை தேர்வு செய்யவேண்டும் என்கிறது மய மதம்.

வீட்டுமனை விருத்தி அடைய...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிறம்: மஞ்சள், சிவப்பு, வெளுப்பு, கறுப்பு.

மணம்: தாமரை, தானியம், பசு ஆகியவற்றின் மணத்துக்கு ஒப்பான வாசனை.

சுவை: கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, உப்பு, இனிப்பு.

வடிவம்: தெற்கு, மேற்குப் பகுதிகள் உயரமாகவும், கிழக்கு மற்றும் வடக்கு தாழ்வாகவும் அமைந்து, அங்கு நீரூற்றும் அமைவது சிறப்பு. திசைகோணலாக இல்லாமலும், நீள்சதுரமாகவும் சம அளவு உடையதாகவும் உள்ள நிலம் அனைவருக்கும் ஏற்றதாகும்.

மேலும் மனித எலும்பு, பாறை, புழு, புற்று, பொந்து, எறும்பு போன்றவை இல்லாமலும், சிறுமணல் நிறைந்ததும், மரங்களின் வேர்கள், பாழ்கிணறுகள், கூழாங்கற்கள், சாம்பல், உமி போன்றவை இல்லாததும், அனைத்து வகை விதைகளும் முளைக்கக்கூடியதுமான பூமி சகலருக்கும் நன்மை பயப்பதாகும்.

அதேபோல் குறிப்பிட்ட மனையில் உரிய வழிபாட்டையும் செய்யவேண்டும்.

மயன் செய்யச்சொல்லும் பிரார்த்தனை!

‘மேதாவியான ஸ்தபதியானவன்... உருவம், நிறம், ஒலி முதலான குணங்களுடன் கூடிய பூமியில் முறையாக பூஜைகள் செய்து, மங்கள வாத்திய சத்தங்களுடன், ‘இந்த பூமியில் வசிக்கக்கூடிய பூதங்களும், தேவதைகளும், ராட்சஸர்களும் இந்த பூமியிலிருந்து விலகி வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும். இந்த பூமியை நான் எடுத்துக்கொள்ளப் போகிறேன்’ என்று மந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்யவேண்டும்’ என்கிறார் மயன்.

இவ்வாறு பிரார்த்தனை செய்யப்பட்ட இடத்தை உழுது, பசுஞ்சாணம் கலந்த விதைகளை விதைக்கவேண்டும். அந்த இடத்தில் பசுக்கள், கன்றுகள், காளைகள் ஆகியவற்றை வளர்க்கவேண்டும். பசுக்களின் குளம்படி பட்டதும், அவற்றால் முகர்ந்துபார்க்கப்பட்டதுமான பூமி பரம பவித்திரமாகிறது. கன்றுகளின் வாயிலிருந்து சிந்திய நுரையாலும் பசுக்களின் பால்பெருக்கினாலும் அந்தப் பூமி சுத்தம் செய்யப்படுகிறது. கோமியத்தில் நனைந்தும், பசுஞ்சாணத்தில் மூழ்கியும், பசுக்களின் அசைவுகளால் மணம் பெற்றதுமான அந்த பூமி, பசுக்களின் குளம்படிகளால் கெளதுபந்தனம் (காப்பு கட்டுதல்) செய்யப்பட்டதாகிறது.

இத்தகைய பூமியில், சுபமுகூர்த்த சுபநாளில் வெள்ளை புஷ்பங்களால் பலிஹரணம் செய்யவேண்டும் என்றும் மயன் அறிவுறுத்துகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism