Published:Updated:

ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?
பிரீமியம் ஸ்டோரி
ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

Published:Updated:
ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?
பிரீமியம் ஸ்டோரி
ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?
ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

? என் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பது பற்றியும், எனக்கு எந்த மாதிரியான வேலை அமையும் என்பது பற்றியும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

- எஸ்.தம்பிதுரை, கும்பகோணம்

தங்கள் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில், உங்கள் லக்னத்துக்கு 11-ல் குரு இருக்கிறார். அது குருவின் சொந்த வீடாகிய மீனமாக இருப்பது கூடுதல் சிறப்பு. 2-ம் அதிபதி 11-ல் அல்லது 11-ம் அதிபதி 2-ல் பரிவர்த்தனை பெற்றிருப்பதும், 11-ம் அதிபதி 11-லும் 2-ம் அதிபதி 2-லும் இருப்பின் செல்வந்த யோகம் என்று சொல்வார்கள்.

தங்கள் ஜாதகத்தில் 10-க்கு உடைய சனி 3-ல் மறைவு பெற்றிருக்கிறார். கோசாரப்படி சனி 3-ல் இருப்பது சிறப்பானதுதான். எனினும் சனி 8-ம் பார்வையுடன் தன் வீட்டுக்கு 6 மற்றும் 7-ம் வீடாகிய கடகத்தில் இருப்பதால் ஜீவன வகையில் சில தடைகள் ஏற்படுகின்றன. மேலும் 11-ல் குருவுடன் சனியின் உப கோளாகிய மாந்தி இணைந்துள்ளது. தற்போது குருதசை 2021 வரை உள்ளது. குரு 8 மற்றும் 11-க்கு உடையவர் என்பதால், குரு தசை முடியும்போது நன்மையே செய்துவிட்டுச் செல்வார். பிறகு வரும் சனி தசையும் படிப்படியான வளர்ச்சியைத் தரும். தற்போது மாந்தியுடன் சேர்ந்த குருதசை நடைபெறுவதால், தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது.

? பிறந்த தேதி - 28.8.1965. பிறந்த ஊர் - சென்னை. பிறந்த நேரம் - காலை 10 மணி. ஜாதகக் குறிப்பு அனுப்ப முடியவில்லை.  என்னால் ஒரே வேலையில் நிலைத்திருக்க முடியவில்லை. இதற்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா?

- டி.வி.கணேசன், புதுதில்லி 122 001

தாங்கள் குறிப்பிட்டு அனுப்பிய விவரங்களைக்கொண்டு ஜாதகம் கணித்துப் பார்த்ததில், தாங்கள் உத்திர நட்சத்திரம் கன்னி ராசியில் பிறந்திருக்கிறீர்கள். தங்களின் லக்னம் துலாம். லக்னத்துக்கு 10-க்கு உடைய கிரகம் சந்திரன், 12-ல் கன்னியில் மறைந்திருக்கிறார். 12-க்கு உடைய புதன் 10-ல் உள்ளார். இது பரிவர்த்தனை யோக அமைப்பாகும்.

இருந்தாலும் கர்மாதிபதி 12-ல் மறைவு பெற்றிருப்பதால், செய்யும் வேலைக்கு ஏற்ற வருமானம் கிடைக்காது. அத்துடன், பணியிடத்தில் அடிக்கடி அவமதிப்புகளைச் சந்திக்க நேரிடும். அனுகூலமான பாக்கிய அமைப்புகள் இருந்தால், இளம் வயதிலேயே நல்ல வேலை, வருமானம், பணியிடத்தில் மதிப்பு, பதவி உயர்வு கிடைத்தல் போன்ற சுபபலன்கள் ஏற்படும்.

கர்மஸ்தானாதிபதி அனுகூலமாக இல்லையென்றால், செய்யும் வேலைக்கு ஏற்ற வருமானம் கிடைக்காது என்பதுடன், அடிக்கடி அவமதிப்புகளுக்கு ஆளாகி, அதனால் ஏற்படும் மன வருத்தத்தின் காரணமாக வேறு வேறு வேலை என்று மாறிக்கொண்டே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தங்கள் ஜாதகத்தின்படி தங்களுடைய தொழில் ஸ்தானம் என்பது சர ராசியான கடகமாக இருப்பதால், அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படவே செய்யும். சந்திரன் வழிபட்டு வரம் பெற்ற சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் ஓரளவு நிவாரணம் பெறலாம்.

ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

? ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

- பி.சத்தியா, பெங்களூரு

லக்னம் என்பது சூரியனின் உதயப் புள்ளி. சூரியன் இந்தியாவில் தெரியாத நிலையில் அமெரிக்காவில் தெரியும். சூரியன் உதிக்கும் நேரத்தில் எந்த ராசியில் இருக்கிறாரோ அதுவே லக்னம் எனப்படும். வேறு வேறு தேதியில் பிறந்தவர்கள் ஒரே லக்னத்தில் பிறந்திருந்தாலும் திருமணம் செய்துகொள்வதில் தவறு எதுவும் இல்லை.

ஆனால், ஒரே நாளில் ஒரே நட்சத்திரம் ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாகத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது.

? என் எதிர்காலம் எப்படி அமையும் என்பது பற்றியும் எனக்கு ஏற்றத் தொழில் எது என்பது பற்றியும் தெரிவிக்கவேண்டுகிறேன்.

-ஆர்.ராமகிருஷ்ணன், ஊட்டத்தூர்

தங்களுடைய ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில், தங்களுடைய லக்னம் துலாம் ஆகும். லக்னத்துக்கு 7-ல் புதன், சந்திரன் உள்ளனர். பொதுவாக எதிர்காலத்தைப் பற்றிய கவலை எல்லோருக்கும் இருப்பது இயல்புதான். எதிர்காலம் நல்லபடி அமைய சில முன்னேற்பாடுகளைச் செய்துகொள்வது அனைவருக்கும் சாத்தியம்தான்.

ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும், 5-வதாக வரும் தசை, மற்ற தசைகளில் 5-வது தசாநாதனின் புக்திக் காலங்கள் சிறப்பாக இருக்கும். தற்போது தங்களுக்கு 5-வது தசையாக ராகு தசை 2025 வரை உள்ளது. இந்தக் காலம் மிகச் சிறப்பான காலம். அடுத்து வரப்போகும் காலங்களுக்கான முன்னேற்பாடுகளையும் செய்துகொள்ள முடியும். எதிர்காலம் மிகச் சிறப்பாகவே அமையும்.

? என் கணவர் சர்க்கரை வியாதியால் மிகவும் கஷ்டப்படுகிறார். கால்வலியும் அதிகமாக உள்ளது. அவருக்கு எப்போது நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பதைத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

- ஆர்.ஜெயலக்ஷ்மி, ஜம்ஷெட்பூர்

தங்கள் கணவருக்கு தற்போது குருதசை நடைபெறுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் குரு வலுக்குன்றி இருந்தால், அந்த ஜாதகருக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக லக்னம் மற்றும் 8-ம் இடங்களுக்கு அசுபர் தொடர்பு அல்லது சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும், பலவீனமான லக்னாதிபதி பகை - நீசம் பெற்றாலும், அந்த ஜாதகருக்கு நீரிழிவு நோய் ஏற்படக்கூடும்.

6-ல் பாதிக்கப்பட்ட சுக்கிரன் இருப்பது; புதன் துலாம், தனுசு, மீனம் ஆகிய இடங்களில் இருந்து செவ்வாயின் பார்வை பெற்றிருப்பது; தனுசு அல்லது மீனத்தில் புதன் இருந்து சூரியனின் பார்வை பெற்றிருப்பது போன்ற அமைப்புகளும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான ஜாதக நிலைகள் ஆகும்.

மேலும் சனி, சூரியன், புதன் 5-ல் இருப்பதும், லக்னத்துக்கு 7-ல் செவ்வாய் இருப்பதும், செவ்வாய் 6-ல் இருந்து, அந்த பாவத்தின் அதிபதி அசுபரின் பார்வை பெற்றிருக்கும் நிலையும் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதைச் சொல்லும்.

குறிப்பாக 8-ம் இடத்தைச் செவ்வாய் பார்ப்பது, சர்க்கரை நோயை ஏற்படுத்தவே செய்யும். தங்கள் கணவரின் ஜாதகத்தில் 5-ல் இருக்கும் செவ்வாய், தன் 4-ம் பார்வையால் 8-ம் இடத்தைப் பார்க்கிறார். எனவேதான் அவருக்குச் சர்க்கரை வியாதி ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரை அவமதித்தல், பிறர் உணவைத் தட்டிப் பறித்தல், பெண்களைப் பல வகைகளிலும் துன்புறுத்தல் போன்ற செயல்களே ஒருவருக்குச் சர்க்கரை நோய் போன்ற பிணிகள் ஏற்படுவதற்கான முன்வினைகள் ஆகும். இத்தகைய செயல்களை இந்தப் பிறவியில்தான் செய்திருக்கவேண்டும் என்பதில்லை. அவை முந்தைய வினைப்பயனாகவும் இருக்கலாம். சர்க்கரை வியாதியிலிருந்து ஓரளவு நிவாரணம் பெற கோயில்களுக்குக் கன்றுடன் கூடிய பசுவை தானம் செய்தல், கோடைக்காலங்களில் தண்ணீர்ப்பந்தல் அமைத்து தாகம் தீர்த்தல், வருணபகவானைக் கலசத்தில் ஆவாஹணம் செய்து வழிபடுதல் போன்ற பரிகாரங்களைச் செய்யலாம். 

- பதில்கள் தொடரும்...

 வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism