Published:Updated:

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை
ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

ங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானாதிபதியான புதன், லாப வீட்டில் தொடர்வதால், எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெறுவீர்கள். உறவினர்களில் சிலர் உங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும் நண்பர்கள் தக்கநேரத்தில் உதவுவார்கள்.

பிள்ளைகளின் தேர்வு, உயர்கல்வியில் கவனமாக இருங்கள். கர்ப்பிணிப் பெண்கள் வெளி உணவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. பேச்சில் கம்பீரம் பிறக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். சகோதரர்கள் வகையில் பயனடைவீர்கள். வியாபாரத்தில், வேலையாள்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில், பணிகளைக் கொஞ்சம் போராடி முடிக்கவேண்டி வரும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து வாய்ப்பு வரும்.

முற்பகுதியில் போராடினாலும் பிற்பகுதியில் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூரியனும் புதனும் தொடர்ந்து சாதகமாக இருப்பதால், தொடங்கிய வேலைகளை வெற்றிகரமாக முடித்துக்காட்டுவீர்கள். உற்சாகம் பிறக்கும். வி.ஐ.பி-களும் ஆதரவாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னை நல்லவிதத்தில் முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். நீங்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்பு கூடும். திருமணப் பேச்சுவார்த்தை நல்லவிதத்தில் முடியும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்தது போல் வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில், எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினர், தங்களின் படைப்புகள் பற்றி மற்றவர்களிடம் விவாதிக்கவேண்டாம்.

பிரபலங்களின் உதவியால் முன்னேறும் தருணம் இது.

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

ராசிநாதன் புதன் 9-ம் வீட்டில் நிற்பதால், பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். டி.வி., ஃப்ரிட்ஜ்,  முதலான எலெக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். சூரியன் 14-ம் தேதி முதல் 10-ம் வீட்டில் அமர்வதால், புதிய வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். சிலர் வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும்.

எதிர்பார்த்த பணம் வந்துசேரும். பால்ய நண்பர்களால் ஆதாயமுண்டு. வீடு, நிலம் சம்பந்தப்பட்ட முக்கியமான பத்திரங்கள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில், பதவி - சம்பள உயர்வு தேடி வரும். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

நினைத்ததை நடத்தி முடிக்கும் நல்ல நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

புதன் 8-ம் வீட்டில்  மறைந்திருப்பதால் புத்திசாலித்தனத்தால்  சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. 14-ம் தேதி முதல் சூரியன் 9-ம் வீட்டில் அமர்வதால், பணிச்சுமை மற்றும் அலைச்சல் இருக்கும். தந்தையுடன் வீண் வாக்குவாதங்கள் செய்யவேண்டாம். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் யோகமும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீடு, மனை வாங்குவீர் கள். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த பிரச்னைகள் குறையும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. திருமணம், கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில், பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக்காட்டுங்கள். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றிபெறுவார்கள். 

ரகசியங்களைக் காக்கவேண்டிய நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

புதன் உங்கள் ராசியைப் பார்ப்பதால், புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேற்றுமொழி பேசுபவர்கள், நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 14-ம் தேதி முதல், சூரியன் 8-ம் வீட்டில் மறைவதால், அடுத்தடுத்து அலைச்சலும் எதிர்பாராத செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்துப் போவீர்கள்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால் புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். சொத்து வாங்கும் அமைப்பு உண்டாகும். வழக்குகள் சாதகமாகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கணவன், மனைவிக்குள் கருத்து மோதல்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். வியாபாரம் செழிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில், உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத்துறையினர் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பழைய பிரச்னைகள் தீரும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

சுக்கிரன் 21-ம் தேதி வரை 5-ம் வீட்டில் நீடிப்பதால், தோற்றப் பொலிவு கூடும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால்  நண்பர்கள், உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்யவேண்டாம்.

வெளியூர்ப் பயணங்கால் அலைச்சல் அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். செவ்வாய் பகவான் 20-ம் தேதி முதல் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால், சகோதரர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வழக்கில் இருந்த தேக்கநிலை மாறி சாதகமாக முடியும். நிலம், சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில், சின்னச் சின்ன இடர்ப்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்; புதிய வாய்ப்புகள் வந்துசேரும்.

விடாமுயற்சியால் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

புதன் 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார் கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது வேலை கிடைக்கும். சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். மனஉளைச்சல், செலவினங்கள் வந்து போகும்.

உங்களுக்குச் சாதகமாக ராசிநாதன் சுக்கிரன் நிற்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். கணவன், மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில், புதுப்புது திட்டங்களை அறிவித்து லாபத்தைப் பெருக்கு வீர்கள். உத்தியோகத்தில் பல நல்ல ஆலோசனைகளைத் தருவீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் காலம் இது.

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

புதன் 4-ம் வீட்டில் நிற்பதால், அனுபவ அறிவால் முன்னேறுவீர்கள். வளைந்துகொடுத்துப் போகக் கற்றுக்கொள்வீர்கள். இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது, பழகுவது நல்லது. பழைய சொத்து ஒன்றை விற்கவேண்டி வரலாம். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்த கவலைகள் வந்துபோகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

கல்யாணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தரும். எதிலும் வெற்றியே! எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதரர்களுக்கிடையே மனம்விட்டுப் பேசி நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில், புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாள்கள், வாடிக்கையாளர்களால் மறைமுகத் தொந்தரவுகள் வரக்கூடும். உத்தியோகத்தில், தன்னிச்சையாக முடிவெடுக்கவேண்டாம். கலைத்துறையினரே, விமர்சனங்கள் பற்றிக் கவலைப்படவேண்டாம்.

விட்டுக்கொடுத்து வெற்றி பெறவேண்டிய நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

புதன் 3-ம் வீட்டில் நிற்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். கல்வியாளர்கள் உதவுவார்கள். சித்தர் பீடங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களின் பாக்கியாதிபதி சூரியன் 4-ம் வீட்டில் பலம் பெற்று நிற்பதால், நிர்வாகத்திறன் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ற சொத்து அமையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வங்கிக்கடன் கிடைக்கும். பிள்ளைகளிடம் கண்டிப்பு வேண்டாம்.

செவ்வாய் சாதமாக இருப்பதால் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். புறநகர்ப் பகுதியில் வீடு அல்லது மனை வாங்குவீர்கள். ஆடை, அணிகலன்கள் சேரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் தவிர்க்கமுடியாததாக இருக்கும். கலைத்துறையினரின் வசதி-வாய்ப்புகள் பெருகும்.

பிற்பகுதி அலைச்சலும் முற்பகுதி முன்னேற்றமும் தரும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

புதன் 2-ம் வீட்டில் நிற்பதால் இதமாகப் பேசி சில கடினமான வேலை களை முடிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. தந்தைவழி சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். விலகிப்போன பழைய நட்பு இனி மலரும். அரசு வகை காரியங்கள் சுலபமாக முடியும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே கருத்துமோதல்கள் விலகும்.
 
சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தள்ளுபடி விற்பனையில் வாகனம் வாங்குவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். மனைவியின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

பழைய நண்பர்களால் முன்னேறும் நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

ங்களின் பூர்வ புண்ணியாதிபதி புதன் ராசியிலேயே நிற்பதால், மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து உங்களின் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய சொந்தங்களைச் சந்திப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. வெளியூர்ப் பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். பழைய பிரச்னைகளைத் தீர்க்க புதிய வழி கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள்.

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். சுக்கிரன் சாதகமாக செல்வதால், படிப்படியாக குடும்ப வருமானம் உயரும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகப் பணிபுரிவது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டிய நேரம் இது.

ராசிபலன் - மார்ச் 12 முதல் 25 - ம் தேதி வரை

புதன் 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 14-ம் தேதி முதல், சூரியன் ராசியிலேயே நிற்பதால், அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துப்போவது நல்லது. செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சகோதரர்கள் உங்களின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருப்பார்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், மதிப்பு, மரியாதை கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னையைத் தீர்க்க வழிபிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வியாபாரத்தில், கடையை விரிவுபடுத்த முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினருக்குப் புகழ் அதிகரிக்கும்.

முக்கிய விஷயங்களை நேரடியாக முடிக்கவேண்டிய நேரம் இது.

- ‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism