தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

மார்ச் 19-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை

ராசி பலன்கள்

மேஷம் குடும்பத்தில் அமைதி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். பழைய சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். மாமனார், நாத்தனாரின் கோபம் தீரும். பழைய கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண்டும் காணாமலும் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வங்கிக்கடன் கிடைக்கும். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு.

உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.

சுபச் செலவுகள் அதிகரிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

ரிஷபம் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ஆடை, ஆபரணம் சேரும். சில நேரங்களில் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டியிருக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள்.

உத்தியோகத்தில் விமர்சனங்களைக் கண்டு கொள்ளாதீர்கள்.

எதையும் சாதித்துக்காட்டும் நேரமிது.

ராசி பலன்கள்

மிதுனம் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்கிப்போவார்கள். அதிகாரம் மிகுந்த பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கணவரின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும்.

வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள்.

உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

பழைய சிக்கல்களைத் தீர்க்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம் வேலைகள் யாவும் விரைந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளை களால் செல்வாக்கு கூடும். வீடு கட்டும் பணியைத் தொடர கடன் கிடைக்கும். கணவர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் குறையும். பலரால் மதிக்கப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யவேண்டி வரும்.

வாக்குச் சாதுர்யத்தால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

சிம்மம் இழுபறியாக இருந்த பல வேலைகள் உடனே முடியும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். கணவரிடம் பக்குவமாகப் பேசி அவரின் திறமையை வெளிகொண்டுவருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். நாத்தனார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புதிய ஏஜென்ஸி தொடங்குவீர்கள்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.

எதிலும் போராடி வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள்

கன்னி உங்களின் செயலில் வேகம் கூடும். வீடு, வாகன வசதிகள் பெருகும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை அவர்களாகவே திருப்பித் தருவார்கள். பிள்ளைகளின் இசை, ஓவியம் விளையாட்டுத் திறனை வளர்க்க, பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலைவாங்குவது நல்லது.

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பழகும்போது கவனமாக இருங்கள். அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள்.

சகிப்புத்தன்மையால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம் நினைத்ததை முடிப்பீர்கள். தெய்வ  அருள் கிடைக்கும். திடீர்ப் பண வரவு உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தோழிகள், உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். தள்ளிப்போன வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசாங்க வகையில் ஆதாயம் உண்டு. சகோதரர் பாசமழை பொழிவார்.

வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள்.

உத்தியோகத்தில்அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

விட்டதைப் பிடிக்கும் விவேகமான நேரமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம் புதிய பாதை தெரியும். பணம் புரளும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களின் பொறுப்பான செயலைக் கண்டு கணவர் பாராட்டுவார். விலையுயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்திப்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களிடம் கொஞ்சம் இடைவெளிவிட்டுப் பழகுங்கள்.

வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஏற்படும் பிரச்னைகளைக் கவனமாகக் கையாளுங்கள்.

உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் ஆதரிப்பார்கள்.

அறிவுபூர்வமாகச் செயல்படவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு மனத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்களின் தொந்தரவுகள் குறையும். கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்வீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெறும். கணவன் மனைவி இடையே அவ்வப்போது ஏற்படும் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய கிளை ஒன்றைத் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.

தடைகளைத் தகர்த்து முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம் தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும். பணபலம் உயரும். குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரைக் கவருவீர்கள். வீடு, மனை வாங்க வேண்டுமென்ற எண்ணம் துளிக்கும். வெளியூர்ப் பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். மனத்தில் புதிய உற்சாகம் பிறக்கும். அரசு வேலைகள் வேகமாக முடியும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடியான லாபம் உண்டு.

உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

வெற்றிக்கனியைச் சுவைக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கும்பம் எதையும் துணிச்சலாகச் செய்து வெற்றி பெறுவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். முடிக்க முடியாத காரியங்களை முடித்துக்காட்டுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். நீண்ட நாள்களாக நினைத்துக்கொண்டிருந்த இடத்துக்குச் செல்வீர்கள். நிர்வாகத் திறன் கூடும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த பிரச்னைகள் விலகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

வியாபாரத்தில் ஆழம்தெரியாமல் காலை விட வேண்டாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாகச் செயல்படுங்கள்.

துணிச்சலுடன் எதையும் வெல்லும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம்  உங்களின் திட்டங்கள் வெற்றியடையும். பொறுப்புகள் அதிகரிக்கும். வர வேண்டிய பணத்தை கேட்டுப் பெற வேண்டியிருக்கும். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்துகொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். மாமியார், நாத்தனாருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். விட்டுக்கொடுத்து காரியம் சாதிப்பது நல்லது.

வியாபாரத்தில் பங்குதாரர்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

கவனமும் விடாமுயற்சியும் தேவைப்படும் நேரமிது.

-`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்