மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கூடிவாழும் குணம்கொண்ட உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் விகாரி ஆண்டு பிறப்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மனத்தில் தோன்றும். உங்கள் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியவர்கள் இப்போது தருவார்கள். கணவரின் கோபம் குறையும். உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பூர்வீக சொத்தி லிருந்த வில்லங்கம் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.

எதிலும் தெளிவு பிறக்கும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.   பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

வியாபாரத்திலிருப்பவர்கள் தேங் கிய சரக்குகளை விற்றுத் தீர்ப்பார்கள். உத்தியோகத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மனத்தின் ஆசைகளை நிறை வேற்றும் நேரமிது!

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

திலும் நடுநிலை தவறாத உங்களின் தனம் மற்றும் பூர்வ புண்ணியாதிபதியான புதன், லாப வீட்டில் நிற்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்ல விதத்தில் அமையும்.

சொந்தபந்தங்கள் மதிக்கும்படி வாழ்க்கைத் தரம் உயரும். மாமனார், மாமியார் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். நாத்தனாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். நிர்வாகத் திறன் கூடும். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

பணப்புழக்கம் அதிகரிக்கும் காலமிது!

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ங்களின் ராசிக்கு குரு 7-ம் வீட்டில் இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் பொறுப்பாக நடந்துகொள்வார். அவருக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளை களின் போக்கில் நல்ல மாற்றம் வரும்.

உங்களின் ராசிக்கு 2-ம் வீட்டில் இந்த விகாரி ஆண்டு பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சோர்ந்திருந்த நீங்கள், உற்சாக மடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பி-களின் உதவியால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

வியாபாரத்தில் புதிய கொள் முதல் செய்வீர்கள். விளம்பர யுக்திகளால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பை மேலதிகாரி அங்கீகாரம் அளிப்பார். நெடுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுக்கு வாய்ப்புண்டு.

அலைச்சலுடன் ஆதாயம் பெறும் காலமிது!

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ங்களின் ராசிக்கு செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விகாரி வருடம் பிறப்பதால், புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பதவியிலிருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கணவரின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.

புது பதவிகள், பொறுப்புகள் தேடிவரும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும். ஆனால், உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. அரசாங்கக் கெடுபிடிகள் தளரும். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் நிறைவேறும்.   

மகிழ்ச்சியில் மனம் நிறைவு பெறும் காலமிது!  

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

முகத்துக்கு நேராக எதையும் பேசிவிடும் குணமுடைய உங்களுக்கு, உங்களின் ராசியை சுக்கிரன் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், வருமானம் உயரும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள்.

இந்த ஆண்டு பிறக்கும்போது குரு உங்கள் ராசிக்கு சாதகமாக இருப்பதால், அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். உங்களை தாழ்த்திப்பேசியவர்கள் திருந்தி வந்து மன்னிப்பு கேட்பார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனமறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். ஆனால், அத்தி யாவசிய செலவுகள் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் ஈட்டுவீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புது சலுகை களும் சம்பள உயர்வும் உண்டு.

கனவுகள் நனவாகும் காலமிது!

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

சுமையோடு வருபவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் உங்களின் ராசிக்கு 11-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், ஆரோக்கியம் கூடும். கவலை தோய்ந்திருந்த உங்களின் முகம் மலரும். கணவர் அன்பாகப் பழகுவார். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். விருந்தினர்களின் வருகையால், வீடு களைகட்டும். பிள்ளைகளின் நெடுநாள் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிக்க முயற்சி செய்வீர்கள். அடிப்படை வசதிகள் அதிகமாகும். நீண்டகாலமாகப் பார்க்க நினைத்த உறவினர்கள், தோழியைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

வியாபாரத்தில் விளம்பர யுக்தி களைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் ஆர்வமில்லாமல் இருந்தவர்கள் இனி விரும்பிப் பணிபுரிவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வு உண்டு.  வெளி நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

விட்டுக்கொடுத்து வெற்றிபெறும் காலமிது!

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ரந்த மனம் படைத்த உங்களின் ராசிக்கு 10-வது ராசியில் இந்த விகாரி வருடம் தொடங்குவதால், உங்களின் சாதனைகள் தொடரும். எதையும் முன்னரே திட்டமிட்டு முடிப்பது நல்லது. வைகாசி, ஆனி மாதங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு வரும். கணவருக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். குழந்தைபாக்கியம் சிலருக்கு உண்டு. மகளின் திருமணத்துக்காக கடன் வாங்குவீர்கள்.

ராசிநாதன் சுக்ரன் 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வி.ஐ.பி-களால் ஆதாயமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். மாமனார், மாமியார் உதவிகரமாக இருப்பார்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது. மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதங்கள் சாதகமாக இருக்கும். என்றாலும், பணிச்சுமை அதிகரிக்கும்.

தடைக்கற்களைப் படிக்கட்டு களாக்கும் காலமிது!

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

திலும் புதுமையை விரும்பும் உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் சாதகமாக நிற்பதால், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பெரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பால் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள்.

பேச்சில் அனுபவ அறிவு வெளிப் படும். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும்.

விடாமுயற்சியால் வெற்றிபெறும் காலமிது!

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

புன்சிரிப்பால் அனைவரையும் வசீகரிக்கும் உங்களுக்கு, செவ்வாய் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். கணவர், நீங்கள் சொல்வதைச் செய்வார். அவருக்குப் புது வேலை கிடைக்கும். சிறுகச் சிறுக சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் படிக்க இடம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். அவ்வப்போது கணவருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.  

வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மனஇறுக்கம் அதிகரிக்கும். தை, மாசி, பங்குனி மாதங்களில் புதிய சலுகைகள் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு.

துவண்டுபோன உங்களின் மனம் துளிர்க்கும் காலமிது!

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

னசாட்சிக்கு விரோதமில்லாத உங்களின் ராசியை சந்திரன் பார்க்கும்போது இந்தாண்டு பிறப்பதால், சமயோசிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். பழைய வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றுவீர்கள்.

துணை உங்களுக்கு முக்கியத் துவம் தருவார். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய வேலை அமையும். பழுதான சமையலறைச் சாதனங்களை மாற்று வீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். மாமனார், மாமியார் உங்களை நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார்கள். திடீர்ப் பயணங்கள் உண்டு. எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

வியாபாரத்தில் புதிய யுக்தி களைக் கையாள்வீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய வேலையாட்கள், பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். ஆவணி, கார்த்திகை மாதங்களில் பதவி உயர்வும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.

முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி வெற்றிபெறும் காலமிது!

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

லர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரிக்கும் பண்பாளரான உங்களுக்கு, சூரியனும் செவ்வாயும் வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த விகாரி ஆண்டு பிறப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். மனோபலம் அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

கணவன் மனைவி அந்நியோன் யம் அதிகரிக்கும். உங்களின் ஆலோசனைக்கு கணவர் முக்கியத்துவம் தருவார். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சகோதரர் வகையில்  கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். மாமனார், மாமியார் பாராட்டைப் பெறுவீர்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். இந்த ஆண்டு முழுக்க கேதுவும் சனியும் லாப வீட்டுக்குள் நிற்பதால், ஷேர் லாபம் தரும்.

வியாபாரத்தில் உற்சாகம் அதிக மாகும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புதிய கிளை களைத் தொடங்குவீர்கள். உத்தி யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

வெற்றிமாலைகள் தோளில் விழும் காலமிது!

ராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

செயற்கரிய செயல்களைச் செய்தாலும் மிகச் சாதாரணமாக இருக்கும் உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த விகாரி ஆண்டு பிறப்பதால், புதிய யோசனைகள் பிறக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். தோழிகளால் ஆதாயமடைவீர்கள். நவீன பொருள்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

வியாபாரத்தில் வரவு சுமாராக இருக்கும். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். பங்கு தாரர்களுடன் போராடவேண்டி வரும். லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் காலநேரமில்லாமல் உழைக்கவேண்டி வரும். சக ஊழியர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 

அனுபவ அறிவால் எதையும் வெல்லும் காலமிது!

பொது பலன்: வெற்றிகரமான விகாரி ஆண்டு கோலாகலமான வசந்த ருதுவில், உத்தராயண புண்ணியகாலம், ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி 06 நிமிடங்களுக்கு 14.04.2019-ல் சுக்லபட்சத்து தசமி திதி, கீழ்நோக்கு நாளில் ஆயில்யம் நட்சத்திரம் 2-ம் பாதம், கடக ராசியில், கடக லக்னத்தில், புதன் தசை சூரிய புத்தியில் பிறக்கிறது.

-`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்