Published:Updated:

ரிஷப ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள்!

ரிஷப ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள்!
ரிஷப ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள்!

கலைத்துறையில் ஆர்வமும் கற்பனை சக்தியும் மிகுந்திருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு, இதுநாள் வரை 3-ம் வீடான கடகத்திலிருந்த ராகு பகவான், இரண்டாம் வீடான மிதுனத்துக்கு வந்துள்ளார். ராசிக்கு 9-ம் வீட்டில் இருந்த கேது, தற்போது 8-ம் வீட்டுக்கு வந்துள்ளார்.

ராசிக்கு 3-ல் இருந்தபடி புதிய திருப்பங்களுடன், பணவரவு, பிரபலங்களின் நட்பு என்று பலன்களைத் தந்த ராகு, தற்போது 2-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரவிருக்கிறார். தடைப்பட்டு வந்த பல காரியங்கள் அனுகூலமாக முடியும். தனம், குடும்பம் வாக்குஸ்தானமான இரண்டாமிடத்தில் ராகு இருப்பதால், மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது நல்லது. நல்லதைச் சொல்லப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சூழல் ஏற்படும்.

முன்ஜாமீன் கையெழுத்திடுவது, முன்னின்று கடன் வாங்கிக்கொடுப்பது போன்றவற்றில் கவனமாக இருங்கள்.  ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி, சின்னச் சின்ன சங்கடங்களைத் தந்தாலும், குருபகவானால் சில நன்மைகளையும் தரும். 
பரிகாரம்:
   வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டான் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாளை ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.