Published:Updated:

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

மேஷம்

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சொத்துப் பிரச்னை தீரும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.

சனி வலுவாக இருப்பதால், பங்குச்சந்தை மூலம் பணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாகப் பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில், பிறரின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். கலைத்துறையினருக்கு, எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் தள்ளிப்போகும்.

விவேகமான முடிவுகளால் வெற்றிபெறும் நேரம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிஷபம்

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

சூரியன் 13-ம் தேதி வரை லாபவீட்டில் நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். குரு 8 - ம் வீட்டில் மறைவதால் கணவன், மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.

புதனும் ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள்.

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுடன் வெளியூர்ப் பயணம் சென்று வருவீர்கள். அஷ்டமச்சனி நடைபெறுவதால், மற்றவர்களின் பிரச்னையில் அநாவசியமாகத் தலையிடவேண்டாம். வியாபாரத்தில், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில், உழைப்புக்குப் பாராட்டு கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

தகுதி, திறமையால் விஸ்வரூபமெடுக்கும் நேரம் இது.

மிதுனம்

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் வழக்குகள் சாதகமாகும். தாய்வழி உறவுகளிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வங்கிக்கடன் கிடைத்து வீடு கட்டத்தொடங்குவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

உறவினர், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சுக்கிரனும் ராசிநாதன் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தங்க நகைகள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த கௌரவப் பதவி கிடைக்கும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினரின் படைப்புத்திறன் வளரும்.

தன்மானத்துடன் தலைநிமிர்ந்து நிற்கும் நேரம் இது.

கடகம்

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

சூரியன் 9-ம் வீட்டில் 13 தேதி வரை நிற்பதால், தந்தையுடன் கருத்துமோதல்களைத் தவிர்ப்பது நல்லது. வேலைக்காக காத்திருந் தவர்களுக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். குரு 6-ம் வீட்டில் மறைவதால், பழைய கடனை அடைப்பது பற்றி திட்டமிடுவீர்கள். உடல்நலனில் கவனமாக இருங்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார்.

நட்பால் ஆதாயம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அடகிலிருந்த நகைளை மீட்பீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி புது வீடு வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பதன் மூலம் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

பணிவால் எதையும் சாதிக்கும் நேரம் இது.

சிம்மம்

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

குரு 5 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், தாயாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புகழ்வார்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் உண்டு. செலவுகளும் அதிகமாகும். நீண்ட நாட்களாகச் சந்திக்க நினைத்த நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சூரியனின் போக்கு சரியில்லாததால் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். அக்கம்பக்கம் வீட்டார் அன்பாகப் பேசுகிறார்கள் என்று குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் இப்போதைக்கு புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில், ‘உழைப்புக்குரிய அங்கீகாரம் கிடைக்க வில்லையே’ என ஆதங்கப்படுவீர்கள்.

நிதானமும் சிக்கனமும் தேவைப்படும் நேரம் இது.

கன்னி

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

ராசிநாதன் புதனும், 16-ம் தேதி முதல் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், உங்களின் செயலில் வேகம் கூடும். வீட்டில் திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வீட்டில் கூடுதலாக ஓர் அறையைக் கட்டுவீர்கள். குடும்பத்தினர், உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனைச் செலுத்துவீர்கள்.

மனைவியின் உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. குருவும் சனியும் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், தாயாருடன் வீண் விவாதங்களைத் தவிர்த்திடுங்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றிபெறும் நேரம் இது.

துலாம்

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

சூரியன் 6-ம் வீட்டில் 13-ம் தேதி வரை நிற்பதால், பாதியில் முடங்கிக்கிடந்த வீடு கட்டும் பணி முடிவடையும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. குரு 3 - ம் வீட்டில் மறைவதால், முக்கிய வேலைகள் காலதாமதமாக முடியும்.

மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். 3-ம் வீட்டில் சனி தொடர்வதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தன்னார்வத் தொண்டுநிறுவனங்களில் உங்களை இணைத்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.போராடி சமாளிக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வரலாம்; நிதானமாகக் கையாளுங்கள். கலைத் துறையினர் மற்றவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.

காத்திருந்து காய் நகர்த்தவேண்டிய நேரம் இது.

விருச்சிகம்

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

சூரியன் 14- ம் தேதி முதல், ராசிக்கு 6 - ம் வீட்டில் நுழைவதால், திடீர் யோகம் உண்டாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். தடைப்பட்ட அரசு வேலைகள் உடனே முடியும். குரு 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். ஓரளவுக்குப் பணவரவும் உண்டு. அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்களால் காரியம் சாதிப்பீர்கள்.

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் பணபலம் உயரும். வீடு மற்றும் வாகன வசதி பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பாதச் சனி தொடர்வதால், உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களின் செயலைப் பாராட்டுவர். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரம் இது.

தனுசு

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

சுக்கிரனும் புதனும் 4 - ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் செல்வாக்கு உயரும். தோற்றப்பொலிவு கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் இசை, ஓவிய, விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்காக, பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புது வீட்டுக்கு மாறுவீர்கள்.

13-ம் தேதி வரை சூரியன் 4-ம் வீட்டில் இருப்பதால், புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். குரு ராசியிலேயே வந்து அமர்வதால் தியானம், தெய்வ வழிபட்டில் ஈடுபடுவது நல்லது. வியாபாரத்தில் அதிரடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் பணிகளைப் போராடி முடிப்பார்கள். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

நினைத்ததை நடத்திக்காட்டும் நேரம் இது.

மகரம்

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், பிரச்னைகளைத் தீர்க்கமாகக் கையாண்டு வெற்றிபெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவன், மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் உறவினர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்.

பணம் வரும். நிலம், வீடு வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெளியூர்களுக்குச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

ஏழரைச் சனி தொடர்வதால், கடன் பிரச்னையை ஒன்றை நினைத்துக் கவலைப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கலைத்துறையினரை, உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசி வாய்ப்பு தரும்.

பட்ட மரம் துளிர்க்கும் நேரம் இது.

கும்பம்

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

குரு பகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், ஷேர் மார்க்கெட் லாபம் தரும். சுப நிகழ்ச்சிகள், பொதுவிழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். சிலருக்கு, புதிய இடத்தில் வேலை அமையும். அதிகாரமிக்க பதவியிலிருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், சமூகத்தில் மரியாதை கூடும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சனி பகவான் வலுவாக இருப்பதால், வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும், தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் வீண்வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. 

கடின உழைப்பால் முன்னேறும் நேரம் இது.

மீனம்

ராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை

சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், குடும்ப வருமானம் உயரும். சுயதொழிலுக்காகக் குறைந்த வட்டியில் வங்கிக்கடன் கிடைக்கும். வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். உங்களின் தோற்றப்பொலிவு கூடும். கணவன், மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

உறவினர்கள், நண்பர்களுடன் பேசும்போது கவனமாகப் பேசுங்கள்; வரம்பு மீறவேண்டாம். சனி வலுவாக இருப்பதால், மன வலிமை அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் கடினமான உழைப்பால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில், மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரின் சிறந்த படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரம் இது.

- ‘ஜோதிட ரத்னா’ முனைவர்  கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism