* வருணனின் மைந்தனான பிருகு முனிவர், தன் தந்தையிடம் கேட்டறிந்து உலகுக்குச் சொன்ன பொக்கிஷம் - ‘சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம்’. மனிதர்களின் அங்க லட்சணங்கள் குறித்தும் அவற்றின் அமைப்புக்கு ஏற்ப உருவாகும் பலாபலன்கள் குறித்தும் விளக்கும் இந்த சாஸ்திர நூல், கண்கள் மற்றும் புருவங்களின் அமைப்புக்கும் உரிய பலன்களைச் சொல்கிறது.

* புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளி குறுகி நெருக்கமாக இருந்தால், அது நட்புறவு மனப்பான்மையின் அடையாளம். புருவங்களுக்கான இடைவெளி அதிகமாக இருந்தால் பொறியியல், கலை ஆகிய துறைகளில் வல்லுநராக இருப்பார்கள்.

* பெண்களுக்குப் புருவங்கள் இடைவெளி இல்லாமல் இருப்பது சுப லட்சணம் ஆகும்; வாழ்வில் நிறைந்த சௌபாக்கியம் நிலவும்.

* புருவம் பிறை வடிவில் இருந்தால் மிகவும் மென்மையான உணர்வு படைத்தவர்கள். இவர்கள் செல்வந்தர்களாகவும் கல்வியில் உயர் தகுதியைப் பெற்றவர்களாகவும் விளங்குவர். சரஸ்வதி தேவியின் புருவம் பிறைவடிவில் இருக்கும் என்று ஐதீகம்.

* வில் போன்ற புருவம் பெண்களுக்கு இருந்தால், அவர்கள் அழகுணர்ச்சி மிக்கவர்கள். அன்புடனும் பாசத்துடனும் குடும்பத்தில் பழகுவர். ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் நாட்டம் இருக்கும்.

* அதிகம் வளையாமல் நீண்டு இருக்கும் புருவ அமைப்பு உடையவர்கள், சற்று முரட்டுக்குணம் மற்றும் பிடிவாதம் கொண்டவர்களாக விளங்குவார் கள். இவர்களுக்கு ராணுவம், காவல்துறை போன்ற துறைகள் சிறந்தவை. பெரிய பொறுப்புகளை எளிதில் செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் சில சலசலப்புகள் ஏற்படும். ஆயினும், நிம்மதி குறையாது.

* புருவங்கள் ஒரு மெல்லிய கோடு போன்று அமைந்திருக்கும் அன்பர்கள் கபடு, சூது இல்லாத அப்பாவிகளாக இருப்பார்கள். எளிதில் அனைத்தையும் நம்பிவிடுவார்கள்.

* கண்கள் உட்புறமாக ஆழ்ந்திருப்பின் தாராள மனம் படைத்தவர்கள். பிறருக்கு உதவுபவர்கள். இவர்களுக்குக் கல்வியறிவு குறைவு. எனினும், வாக்கு சாதுர்யம் அதிகம்!

* அளவுக்கு அதிகமாக அகன்றும் சற்று கோணலாகவும் கண்கள் அமைந்திருந்தால் எதிலும் பற்றற்று வாழ்வார்கள். மருத்துவம், ஜோதிடம், மந்திரதந்திரங்கள் ஆகியவற்றில் பிடிப்பும் நம்பிக்கையும் பயிற்சியும் இருக்கும். இதேபோன்ற அமைப்பு பெண்ணுக்கு இருந்தால் காரியவாதியாக இருப்பார்கள்.

* பூனைக் கண்களைப் பெற்றிருப்பவர் ஆணாயினும், பெண்ணாயினும் அதிர்ஷடம் மிகுந்தவர்களாக இருப்பார்கள்.

- ஆத்தூர் செந்தில்குமார்