Published:Updated:

மிதுன ராசிக்காரர்களுக்கான ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள் (வீடியோ)

மிதுன ராசிக்காரர்களுக்கான ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள் (வீடியோ)
மிதுன ராசிக்காரர்களுக்கான ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள் (வீடியோ)

நெருக்கடியான நேரத்தில்கூட நிதானமாகச் செயல்படும் மிதுன ராசிக்காரர்களுக்கு  ராகு, கேது சஞ்சாரம் 13.2.19 முதல் 31.8.20 வரையிலும் மாறுபட்ட பலன்களை அருளப் போகிறது. இதுநாள் வரை 2 -ம் வீட்டில் இருந்த ராகு பகவான், இரண்டாம் வீடு வாக்குஸ்தானமென்பதால் உங்களின் வாயைக் கட்டிப்போட்டிருந்தார்.  

நீங்கள் நல்லவிதமாகச் சொன்னால்கூட  அதை வேறுவிதமாக மற்றவர்கள் புரிந்துகொண்டனர். இதனால் உங்களுக்கே மனத்தில் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து ராகு அமர்கிறார். பேச்சில் தெளிவும் முதிர்ச்சியும் பிறக்கும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்குவரும். குலதெய்வக்கோயிலுக்குச் சென்று வருவது நல்லது.

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்துகொண்டு நிம்மதி இல்லாமலும், சரியான தூக்கமில்லாமலும் துரத்தியடித்த கேது பகவான் இப்போது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். கணவன் மனைவிக்குள் வீண்வாக்குவாதங்களைத் தவிர்த்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப்போனால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முக்கியமான விஷயங்களை நேருக்கு நேராகப் பேசிக்கொள்ளாமல், செல்போன் மூலமாகப் பேசிக்கொள்வது நல்லது. 

மொத்தத்தில் இந்த ராகு, கேதுப் பெயர்ச்சி, கவலைகளிலிருந்து உங்களை விடுவிப்பதுடன், எதார்த்தமான முடிவுகளால் முன்னேற வைப்பதாக அமையும். 
பரிகாரம்: 
கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு அருகிலுள்ள கிள்ளை எனும் ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு புற்று மாரியம்மனை ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் சென்று வணங்குங்கள். தொழு நோயாளிகளுக்கு உதவுங்கள். தொட்டது துலங்கும்.