Published:Updated:

கடக ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்! (Video)

கடக ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்! (Video)
கடக ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்! (Video)

கலகலப்பான குணமுள்ள கடக ராசிக்காரர்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரையிலான காலகட்டத்தில், ராகு-கேது சஞ்சாரம், பல நல்ல தீர்வுகளை அளிக்கப்போகிறது. பொதுவாகவே கடக ராசிக்காரர்கள் ஆளுமையும் நிர்வாகத் திறமையும் மிக்கவர்கள்.

நெருக்கடியான நேரத்தில்கூட சமயோஜிதமாகச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்கும் உங்களின் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் ராகு அமர்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்த கஷ்டங்கள் சொல்லிமுடியாது. எவ்வளவோ தைரியசாலியான நீங்களே வெளியில் சொல்லமுடியாத பல பிரச்னைகளை சந்தித்தீர்கள்.

இனி அந்த நிலைமை உங்களுக்கு வராது. மனத்தில் நிம்மதியும் தெளிவும் பிறக்கும். முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தைரியம் கூடும். நிம்மதியாக உறக்கம் வரும். குடும்பத்தில் பிரச்னைகள் அனைத்தும் விலகி, சந்தோஷம் குடிகொள்ளும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

இதுநாள் வரை உங்களின் ராசிக்கு 7 - ம் வீட்டில் இருந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 6 - ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். பிரச்னைகளின் அடிப்படை காரணங்களைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். 
மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி, உன்னதமான நிலைக்கு உங்களை உயர்த்திச் செல்வதாக அமையும். 
 பரிகாரம்:
கோயம்புத்தூர் மாவட்டம், வேல்கோட்டம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமுருகனின் வேலை ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையிலோ, சஷ்டி திதியிலோ சென்று வணங்குங்கள். புற்றுநோய் நோயாளிக்கு உதவுங்கள். உங்களுக்கு நல்ல முறையில் செல்வம் சேரும்.