மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

மேஷம் சவால்களில் வெற்றிபெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களின் முயற்சிக்கு கணவர் பக்கபலமாக இருப்பார். மகனுக்கு அயல்நாட்டில் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பு வரும். இங்கிதமான பேச்சால் உறவினர்களைக் கவருவீர்கள். அரசு வகை காரியங்கள் சற்று தாமதமாக முடியும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.

புத்திசாலித்தனத்தால் சாதித்துக்காட்டும் நேரமிது!

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

ரிஷபம் திட்டங்கள் யாவும் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப் பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவர் உங்களிடம் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மாமியார், நாத்தனார் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புதிய கிளைக்குத் திட்டமிடுவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

தொட்டதெல்லாம் துலங்கும் தித்திப்பான நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

மிதுனம் நினைத்ததை நினைத்தபடி முடிப்பீர்கள். உங்களின் புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். அதிகாரத்திலிருப்பவர்கள் உதவுவார்கள். கணவரின் யோசனைப்படி பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கு சாதகமாகத் திரும்பும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள்.

வியாபாரத்தில் அனுபவம்மிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களின் பெயர் பரிசீலிக்கப்படும்.

முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிக்கும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

கடகம் உங்களின் புத்திசாலித்தனம் முழுவதுமாக வெளிப்படும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். கணவரின் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் மரியாதை கூடும். பழுதாகிக்கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கண்டும்காணாமல் இருந்தவர்கள், வலிய வந்து பேசுவார்கள். சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள், தோழிகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியந்து பாராட்டுவார்.

 எதிலும் சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

சிம்மம் அலுப்பு சலிப்பு நீங்கி, உற்சாகமாகச் செயல்படுவீர்கள். கணவரின் குறைநிறை களைச் சுட்டிக்காட்டி அவரை மாற்று வீர்கள். மாமியார், நாத்தனார் உதவுவார்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். அக்கம் பக்கத்து வீட்டாரை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் ஆதாயம் உண்டு. தொட்டது துலங்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புதிதாக வீடு கட்டி குடிபுகுவீர்கள்.

வியாபாரத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கவேண்டி வரும்.

விட்டுக்கொடுத்து வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

கன்னி  எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்களின் செயல்களுக்கு கணவர், உதவிகரமாக இருப்பார். பிள்ளைகள் உங்களின் அருமை யைப் புரிந்துகொள்வார்கள். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப்போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். உடல்நலனில் கவனம் தேவை.

வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் பேசும்போது கவனம் தேவை.

உத்தியோகத்திலிருப்பவர்கள் பணியிடத்திலிருக்கும் முக்கியப் பொருள்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள்.

முன்கோபத்தைத் தவிர்க்கவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

துலாம் மன பலத்தால் எதையும் சாதிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். கணவரின் அன்பைப் பெறுவீர்கள். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வசதிகள் பெருகும். வழக்கு சாதகமாகத் திரும்பும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் புதிய கிளைகளைத் தொடங்கத் திட்டமிடுவீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வார்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

விருச்சிகம் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். நீண்ட நாள்களாகச் சந்திக்க வேண்டுமென்று நினைத்த உறவினர்கள், தோழிகளைச் சந்திப்பீர்கள். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி, லாபம் சம்பாதிப்பீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

அலுத்துக்கொள்ளாமல் செயலாற்றவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

தனுசு புதிய திட்டங்கள் உதயமாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பதவிகள் தேடி வரும். வீடு கட்டும் பணி தொடரும். கணவர் உங்களின் திட்டங்களை நிறைவேற்ற உதவிகரமாக இருப்பார். பிள்ளைகளிடம் குவிந்துகிடக்கும் திறமைகளைக் கண்டறிவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரண மாகச் செய்து முடிப்பீர்கள்.

சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

மகரம் திடீர் வெற்றியும் யோகமும் உண்டு. குழப்பங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். ஆளுமைத்திறன் அதிகரிக்கும். கடனாகக் கொடுத்தப் பணம் கைக்கு வரும். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்து கொள்வார்கள். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். மாமியார் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள்.

உத்தியோகத்தில் சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

கும்பம் தோற்றப்பொலிவு கூடும். பணப்புழக்கம் உயரும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கணவர் புதிதாக ஒரு தொழில் தொடங்கி வெற்றிபெறுவார். பிள்ளைகளின் நட்புவட்டம் விரிவடையும். பூர்வீக சொத்தை மாற்றி யமைப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும், சவாலாக முடித்துக்காட்டுவீர்கள்.

காத்திருந்து காய்நகர்த்தும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

மீனம்  அனைத்து பிரச்னைகளையும் தாங்கும் சக்தி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். டி.வி, ஃப்ரிட்ஜ் புதிதாக வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன் னின்று நடத்துவீர்கள். கணவர் உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார். பிள்ளைகளின் வருங்காலம்குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்த்திடுங்கள்.

உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். அனுசரித்துச் செல்வது நல்லது.

பொறுமையைக் கடைபிடிக்கவேண்டிய நேரமிது.

-`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்