Published:Updated:

கன்னி ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்! #Video

கன்னி ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்! #Video
கன்னி ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்! #Video

கலகலப்பாகவும் கறாராகவும் பேசக்கூடிய கன்னி ராசிக்காரர்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகு கேதுவின் சஞ்சாரம், அவர்களின் வாழ்க்கையில் புதிய பயணத்தை வழங்கப்போகிறது. இதுவரை உங்களின் ராசிக்குப் பதினோராம் வீட்டில் இருந்த ராகு பகவான், இப்போது உங்களின் ராசிக்குப் பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார். 


தொழிலிலும், பணிபுரியும் இடத்திலும் வேலைப் பளு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், புதிதாகச் சில பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெற வைப்பார். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள்.
 

உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த கேது, இப்போது ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்கிறார். இதுநாள் வரை அத்தை, மாமன் வகை உறவுகளில் பிணக்குகளும் தர்மசங்கடங்களும் ஏற்பட்டிருந்த நிலை இனி மாறும். பதற்றத்திலிருந்து விடுபடுவீர்கள். கனிவான பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். 

கேது நான்காமிடத்தில் வந்து அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் சென்று வருவது நல்லது. தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவாருங்கள்.

மகனுக்குப் புதிய இடத்தில் நல்லவேலை அமையும். ஒரு சிலருக்கு வெளி நாடு செல்கின்ற யோகமும் உண்டாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமைந்து திருமணம் சிறப்பாக நடக்கும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, உங்களுக்கு வேலைச் சுமையைத் தந்தாலும், விடாமுயற்சி, கடின உழைப்பால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

பரிகாரம்:
விழுப்புரம் மாவட்டம், மையனூர் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீவைகுந்தப் பெருமாள் மற்றும் வரதராஜப் பெருமாளை ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள். ஏழைப் பெண் திருமணத்துக்கு உதவுங்கள். எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும்.