வழிகாட்டும் மய மதம்!

சொந்தவீடு என்பது சாமான்ய மக்கள் அனைவருக்குமான கனவு. சிறுகச் சிறுக சேமித்து ஆசையுடன் சொந்த வீட்டுக்கான மனை வாங்கும்போது, நாம் ஒவ்வொருவரும் அவசியம் கவனிக்கவேண்டிய அதிமுக்கிய விஷயங்கள் குறித்து ஞானநூல்கள் வழிகாட்டுகின்றன.

மய மதம் முதல் பாகம் 3-வது அத்தியாயத்தில், கிரகிக்கத்தக்க மனை, இகழத்தக்க மனை, புகழத்தக்க மனை ஆகியவை குறித்த தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதாவது, இடத்தின் (பூமி) நிறம், மணம், சுவை, வடிவம் ஆகியவற்றின் தன்மைகளை அறிந்து, நல்ல இடத்தை தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்கிறது மய மதம். அவ்வகையில் அனைவருக்கும் ஏற்புடைய நிலம் குறித்த தகவலைத் தெரிந்துகொள்வோம்.

நிறம்: மஞ்சள், சிவப்பு, வெளுப்பு, கறுப்பு.

மணம்: தாமரைப்பூ, தானியம், பசு ஆகியவற்றின் மணத்துக்கு ஒப்பான வாசனை.

சுவை: கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, உப்பு, இனிப்பு.

வடிவம்: தெற்கு, மேற்குப் பகுதிகள் உயரமாகவும், கிழக்கு மற்றும் வடக்கு தாழ்வாகவும் அமைந்து, அங்கு நீரூற்றும் அமைவது சிறப்பு. திசை கோணலாக இல்லாமலும், நீள்சதுரமாகவும், சம அளவு உடையதாகவும் உள்ள நிலம் அனைவருக்கும் ஏற்றதாகும்.

மேலும் மனித எலும்பு, பாறை, புழு, புற்று, பொந்து, எறும்பு போன்றவை இல்லாமலும், சிறுமணல் நிறைந்ததும், மரங்களின் வேர்கள், பாழ்கிணறுகள், கூழாங்கற்கள், சாம்பல், உமி போன்றவை இல்லாததும், அனைத்து வகை விதைகளும் முளைக்கக் கூடியதுமான பூமி சகலருக்கும் நன்மை பயப்பதாகும்.

வீட்டு மனை வாங்க ஏற்ற காலம்!

தற்போது நீங்கள் வசிக்கும் இடத்துக்கு குறிப்பிட்ட திசைகளில் நிலம் மனை வாங்குவதற்கு, குறிப்பிட்ட நட்சத்திர நாள்கள் விசேஷமானவை.

தெற்கு – மகம், சுவாதி, அஸ்தம், உத்திரம்.

மேற்கு – உத்திராடம், திருவோணம், மூலம்

வடக்கு – உத்திராடம், சித்திரை, சதயம்

கிழக்கு – ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம்

ரேவதி நட்சத்திரத்தன்று எந்தப் பகுதியிலும் நிலம்மனை வாங்கலாம். அதேபோன்று நகரங்களில் வாங்குவதற்கு அஸ்வினி, சித்திரை, ரேவதி நட்சத்திரங்கள் உகந்தவை.

- வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்