தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

மேஷம் வருங்காலத் திட்டம் ஒன்று நிறைவேறும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீடு, வாகன வசதிகள் பெருகும். நவீன டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கணவர் உங்களின் கடின உழைப்பைப் பாராட்டுவார். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவருவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகளால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும், சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும்.

திடீர் முடிவுகளால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

ரிஷபம் நெளிவுசுழிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். முகப்பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்கு வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உயர்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். மகளுக்கு, தடைப்பட்ட திருமணம் கூடி வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். நள்ளிரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. கடையை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

விடாமுயற்சியால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

மிதுனம் தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும். கணவருடன் சின்னச்சின்ன மோதல்கள் வரலாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். எதிர்பாராத பணவரவு உண்டு. சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வழக்குகள் சாதகமாகும். குடும்ப உறவுகளில் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். அனுசரித்துப்போவது நல்லது. ஒரு சிலர் வீடு மாறுவார்கள். பழைய கடனை நினைத்து குழம்ப வேண்டாம்; புதிய வழி பிறக்கும்.

வியாபாரத்தில் கமிஷன் வகையால் லாபம் கணிசமாக உயரும்.

உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும்.

வி.ஐ.பி-களால் ஆதாயம் அடையும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

கடகம் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அக்கம் பக்கம் வாங்கியிருந்த கடனைத் தந்து முடிப்பீர்கள். தந்தையிடம் ஏற்பட்டிருந்த வருத்தம் நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். மகளுக்குத் திருமணம் கூடி வரும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து அதை வளர்ப்பீர்கள். கணவர் மனம்விட்டுப் பேசுவார். சொத்துச் சிக்கல்கள் சுமுகமாக முடியும். மாமியார், நாத்தனாரிடம் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது.

வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. வாடிக்கை யாளர்கள் தேடிவருவார்கள்.

உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும்.

விட்டுப்பிடித்து சாதிக்கும் நேரமிது!

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

சிம்மம் தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். பழைய உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். தோழிகள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவர் பாசமாக நடந்துகொள்வார். உங்களின் வேலைகளை மாமியார், நாத்தனார் பகிர்ந்துகொள்வார்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும்.

அனுபவ அறிவால் வெற்றிபெறும் நேரமிது!

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

கன்னி இங்கிதமாகப் பேசி, கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். கைம்மாற்றாக வாங்கியதைத் தந்து முடிப்பீர்கள். கணவரின் வருமானம் அதிகரிக்கும். உல்லாசப் பயணங்கள் சென்றுவருவீர்கள். நாத்தனார் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீடு மாறுவீர்கள்.

வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் அதிகாரி பாராட்டுவார். பதவி உயர்வு கிடைக்கும்.

சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

துலாம் புதிய திட்டங்கள் நிறை வேறும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். அதிகாரம் மிக்க பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாமியார் உங்களிடம் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். ஏளனமாகப் பார்த்த உறவினர்களுக்குத் தக்க பதிலடி தருவீர்கள்.

வியாபாரத்தில் புதிய வேலையாட்களை நியமனம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் பழைய பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும்.

சொந்தபந்தங்களால் மகிழும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

விருச்சிகம் தள்ளிப்போன விஷயங்கள் விரைந்து முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பராமுக மாக இருந்த கணவர், பாசமழையைப் பொழிவார். குடும்பத்தில் அமைதி உண்டாகும். விலகிச்சென்ற சொந்தபந்தங்கள் விரும்பிவந்து பேசுவார்கள். பிள்ளைகளைப் புதிய பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். வசதியுள்ள வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

தன்னம்பிக்கை துளிர்க்கும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

தனுசு பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கணவரின் கோபம் விலகும். சவாலான காரியங்களையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். சொந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளை அதிகம் மிரட்ட வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தில் பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். அலைச்சல் இருக்கும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். இட மாற்றமும் சிலருக்கு அமையும்.

சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

மகரம் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பிரபலங்கள் உதவு வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவர் உங்களைப் பாராட்டி மகிழ்வார். உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகள் உங்கள் புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். உறவினர் வகையில் உதவிகள் உண்டு.

வியாபாரத்தில் பங்குதாரர்களை மாற்றுவீர்கள். புதிய கிளை தொடங்குவீர்கள்.

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைப் பளு கூடும்.

புதிய முயற்சிகளில் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

கும்பம் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர் வகையில் உதவிகள் உண்டு. கணவர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாகனத்தைச் சரிசெய்வீர்கள். புதிய ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். சகோதரர் வகையில் உதவிகள் உண்டு. கைம்மாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசவும்.

ஏமாற்றங்கள் விலகும் நேரமிது.

ராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை

மீனம் சோர்விலிருந்து விடுபடுவீர்கள். கேட்டிருந்த இடத்தில் பணம் கிடைக்கும். சகோதரி உதவுவார். கணவருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவருவீர்கள்.

வியாபாரத்தில் அழகு சாதனங்கள், உணவு வகைகள் மூலம் ஆதாயம் வரும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலை யைப் பகிர்ந்துகொள்வார்கள்.

போராடி வெற்றிபெறும் நேரமிது.

-`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்