Published:Updated:

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?
பிரீமியம் ஸ்டோரி
அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

பண்டிட் காழியூர். நாராயணன்

`அட்சயம்’ என்றால் வளர்தல் - பெருகுதல் என்று பொருள். அட்சய திரிதியை நாளில் எதைச் செய்தாலும் அது வளர்ந்து பெருகும்.

சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் மூன்றாவது திதி அட்சய திரிதியை. சூரியன் அதிகபட்ச வெப்பத்துடன் இருக்கும் நாள். பலராமர், பரசுராமர் ஆகியோர் அவதரித்த திருநாள். பாண்டவர்கள் வனவாசத்திலிருந்தபோது, அவர்களுக்கு தடையில்லாமல் அன்னம் கிடைக்க ஏதுவாக... சூரியபகவான் அருளால் திரெளபதிக்கு அட்சய பாத்திரம் கிடைத்த திருநாளும் இதுவே.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

அட்சய திரிதியை நாளில் செய்யும் புண்ணிய காரியங்களும் பன் மடங்கு பலன் அளிக்கும். ஆகவே, இந்தத் திருநாளில் தானதர்மங்கள் செய்வது மிகவும் நல்லது. ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும். பழ வகைகளை அளித்தால் உயர்பதவி கிடைக்கும். வெயில் வெம்மை தீர குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்ப வாழ்வு உண்டாகும். ஆடை தானம் செய்ய ஆரோக்கியம் கூடும். தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வி வளர்ச்சி பெருகும். தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் கிடைக்கும். அன்று, பசுவுக்கு உணவளித்தால் சகல பாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

வாழ்வின் எல்லா வளங்களையும் அள்ளித்தரும் இந்தத் திருநாளில், நாம் எந்தப் பொருளை வாங்கினாலும், அவை நம் வாழ்வில் வளம் சேர்க்கும்விதமாக வளர்ந்துகொண்டே போகும்.

அவ்வகையில், அட்சய திரிதியை அன்று பன்னிரண்டு ராசிகளைச் சேர்ந்தவர்களும் என்னென்ன பொருள்களை வாங்கலாம், என்னென்ன புண்ணியக் காரியங்கள் செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம்.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

மேஷம்: காஞ்சனம் என்று சொல்லப்படும் தங்கம் வாங்குவது நல்லது. குறிப்பாக தோடு, கம்மல், மூக்குத்தி போன்ற முகத்தில் அணியும் பொருள்கள் வாங்கலாம்.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

ரிஷபம்: வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் வாங்கலாம். வசதி மிக்கவர்கள் வைர மூக்குத்தி, வைரத் தோடு, பிளாட்டின நகைகள் வாங்கலாம். இஷ்ட தெய்வத்துக்கு வெள்ளிப் பூணூல் வாங்கி அணிவித்தால் வாழ்க்கையில் சுபிட்சம் கிடைக்கும்.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

மிதுனம்: பச்சைக் கல் மோதிரம் வாங்கி அணிவது நல்ல பலன்களைத் தரும். இஷ்ட தெய்வத்துக்குப் பச்சைப் பட்டுடுத்தி அபிஷேகம் செய்தால் மிகுதியான பலன்கள் கிடைக்கும்.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

கடகம்: முத்துமாலை, முத்துகள் பதித்த கம்மல், மோதிரம் வாங்கலாம். எளிமையாக வாங்க நினைத்தால் மல்லிகை மலர்கள் வாங்குவது நல்லது.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

சிம்மம்: மாணிக்கக்கல் பதித்த மோதிரம், கம்மல் உள்ளிட்ட ஆபரணங்கள் வாங்கலாம். சிவப்பு வளையல்கள், சிவப்பு நிற ஆடைகள் வாங்கலாம். சகோதரிகளுக்கு வாங்கிப் பரிசளிப்பது மிகவும் விசேஷம்.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

கன்னி: புதனின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் பச்சைக்கல் மோதிரம் மற்றும் பச்சை நிற ஆடைகள் வாங்கலாம்.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

துலாம்: வைரம் அல்லது வெள்ளிப் பொருள்கள் வாங்கலாம். கோயிலில் பால் பாயசம் நைவேத்தியம் செய்வது சிறப்பு.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

விருச்சிகம்: செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள். மஞ்சள், சந்தனம் போன்ற பொருள்களை வாங்கி, கோயில்களுக்கு வழங்கினால், மனக் குழப்பங்கள் நீங்கி, மனதில் தெளிவு பிறக்கும்.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

தனுசு: கனகபுஷ்பராகம் பதிக்கப்பட்ட மோதிரம் வாங்கி அணிந்துகொள்ளலாம். வஸ்திர தானமாக வெள்ளை நிற வேஷ்டி, சட்டை, துண்டு ஆகியவற்றை வயதானவர்களுக்கு வழங்கினால் தனம், தான்யம் பெருகும்.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

மகரம்: நீல நிறக் கல் பதிக்கப்பட்ட மோதிரம் வாங்கி அணியலாம். நீலாம்பரி என்னும் சங்கு புஷ்பத்தை வாங்கி, நவகிரகங்களுக்கும் இஷ்டதெய்வத்துக்கும் அணிவித்து வணங்கி வழிபடலாம். குடை, காலணி ஆகியவற்றை தானம் அளிப்பது சிறப்பு.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

கும்பம்: வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண ரோஜா மலர் மாலை வாங்கி மகாவிஷ்ணுவுக்கு அணிவித்து வணங்குவது நல்லது. அன்றைய நாளில் அலுமினியப் பொருள்கள் வாங்குவது மிகவும் விசேஷம்.

அட்சயதிரிதியை உங்கள் ராசிக்கு என்ன வாங்கலாம்?

மீனம்: கனகபுஷ்பராகக் கல் பதித்த மோதிரம் வாங்கலாம். குலதெய்வத் துக்கு சங்கு அபிஷேகம் செய்வது விசேஷம்.

படம் : பா.காளிமுத்து