Published:Updated:

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

Published:Updated:
ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை
ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

மேஷம்

புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், இங்கிதமாகப் பேசிச் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. புது நட்பு மலரும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். சூரியன் சாதகமாக இல்லாததால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். எனினும் அவர் புதனுடன் சேர்ந்து நிற்பதால், கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் பணவரவு, வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. 17 - ம் தேதி வரை குருபகவான் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், அதிரடி மாற்றம் உண்டாகும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். செவ்வாய் வலுவாக அமர்ந்ததால், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.  வியாபாரத்தில், கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில், சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.
 
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

ரிஷபம்

சூரியன் 14 -ம் தேதி வரை 12- ல் மறைந்திருப்பதால், அடுத்தடுத்து பயணங்களும் செலவினங்களும் கூடும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வரக்கூடும்.  புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். எதிலும் முன்னேற்றம் உண்டு. வேலை தேடும் அன்பர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
 
17 - ம் தேதி வரை குருபகவான் 8 - ல் மறைவதால், எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். அஷ்டமத்துச்சனியும் நடைபெறுவதால், மற்றவர்கள் பிரச்னையில் அநாவசியமாக தலையிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் அலுப்பும் சலிப்பும் தேவையில்லை; உரிய பலன் உரிய நேரத்தில் கிடைக்கும். கலைத் துறையினரே! பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

மனநிறைவுடன் செயல்படும் நேரம் இது.

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

மிதுனம்

குருபகவான் 17-ம் தேதி வரை, 7-ல் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ராசிநாதன் புதனும், 14 -ம் தேதி வரை சூரியனும், சாதகமான  வீட்டில் அமர்ந்திருப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும்.  சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். எதிர்பார்த்த பணம் வரும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். ஆனால் 7-ல் சனி தொடர்வதால், மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அலைச்சல் வந்துபோகும். உங்கள் ராசிக்குள் செவ்வாய் அமர்ந்திருப்பதால், நிர்வாகத் திறன் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு. கலைத்துறையினரே! நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும்.

புது முயற்சிகளில் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

கடகம்

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசாங்கக் காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

17 -ம் தேதி வரை குரு 6-ல் மறைந்திருப்பதால் வீண் செலவு, அலைச்சல், மறைமுக எதிர்ப்பு ஆகியவை வந்து செல்லும். ஆனால் சனியும் கேதுவும் 6 -ல் வலுவாக நிற்பதால், எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். கடன் பிரச்னை தீரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில், வேலைச்சுமை அதிகரிக்கும்; வீண் டென்ஷன் வந்து போகும். கலைத்துறையினரே! பழைய சம்பளப் பிரச்னை தீரும்.

புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும் நேரம் இது.

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

சிம்மம்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் நட்பு வட்டம் விரியும். ராசிநாதன் சூரியன், சாதகமான வீடுகளில் செல்வதால் தன்னம்பிக்கை துளிர்விடும். அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

17-ம் தேதி வரை குருபகவான் 5 - ம் வீட்டில் நீடிப்பதால் பதவி, புகழ் தேடி வரும். செவ்வாயும் ராகுவும் வலுவாக இருப்பதால் இழுபறியான வேலைகள் முடியும். பிரபலங்களின் சுபகாரியங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும்.

உற்சாகம் ததும்பும் நேரம் இது.

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

கன்னி

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், நீண்ட நாள் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்கள் உதவுவார்கள். 14-ம் தேதி வரை சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணம், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். புதன் ஓரளவு சாதகமாக இருப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும்.

17 - ம் தேதி வரை குருபகவான் 4 - ல் அமர்ந்திருப்பதால் அலைச்சல், பணப்பற்றாக்குறை, வந்து செல்லும். செவ்வாய் சாதகமாக அமர்ந்திருப்பதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில், மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில், பொறுப்புகள் கூடும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் தேடி வரும்.

திறமைகளை வெளிப்படுத்தும் நேரம் இது.

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

துலாம்

னியும் கேதுவும் 3-ல் தொடர்வதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சூரியன் சாதகமாக இல்லாததால் வீண் சந்தேகம், குழப்பம், டென்ஷன் ஆகியவை வந்து போகும். அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். புதன் சாதகமாக இருப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்களால் உதவிகள் உண்டு.

17-ம் தேதி வரை குருபகவான் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வேலைச்சுமை, வீண் செலவுகள் வந்து போகும். 11-ம் தேதி முதல் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில், வேலைச்சுமை குறையும். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வதந்திகள் ஏற்பட வாய்ப்பு உண்டு; கவனம் தேவை.

பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது.

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

விருச்சிகம்

சுக்கிரன் 10 - ம் தேதி வரை சாதகமாக இருப்பதால், ஆரோக்கியம் கூடும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். 14 -ம் தேதி வரை சூரியன் 6 -ல் வலுவாக இருப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனைச் செலுத்துவீர்கள்.

ஆனால் 11 -ம் தேதி வரை புதன் 6 -ல் மறைந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் மறைமுகப் பகை வரக்கூடும். 17 -ம் தேதி வரை குருபகவான் 2 -ல் அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். பாதச்சனி தொடர்வதால் உடல்வலி, வீண் டென்ஷன் வந்து போகும். கணவன் - மனைவிக்குள் வாக்குவாதம் வந்து விலகும். வியாபாரத்தில், போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில், வீண் பழி வந்து செல்லும். தலைமைக்கு உதவுவீர்கள். கலைத்துறையினரே! சக கலைஞர்கள் உங்களிடம் நட்புறவாடுவார்கள்.

சிந்தித்துச் செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

தனுசு

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். 17-ம் தேதி வரை குருபகவான் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை, வீண் டென்ஷன், உறவினர் பகை, மன உளைச்சல் வந்துபோகும். சூரியன் 15-ம் தேதி முதல் 6-ல் நிற்பதால், பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.

ஜன்மச்சனி தொடர்வதால் சிறு சிறு உடற்பிணிகள் ஏற்படலாம். 7 -ல் செவ்வாய் அமர்ந்திருப்பதால், தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்; தேங்கிக்கிடந்த வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். கலைத் துறையினரே! பரிசு-பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் நேரம் இது.

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

மகரம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. புதனும் சாதகமாக இருப்பதால், பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். உறவினர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். 14 -ம் தேதி வரை சூரியன் 4-ல் நிற்பதால், புதுத் திட்டங்கள் நிறைவேறும். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும்.

17 -ம் தேதி வரை குரு 12 -ல் மறைந்திருப்பதால் வீண் செலவு, டென்ஷன் வந்து செல்லும். ஏழரைச்சனி தொடர்வதால் கடன் பிரச்னை ஒன்றை நினைத்துக் கவலைப்படுவீர்கள். ஆனால் செவ்வாய் 6-ல் நிற்பதால் புது வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சிலநேரம் உங்களைக் கடிந்து பேசினாலும் அன்பாக நடந்துகொள்வார். கலைத்துறையினரே! படைப்புகளை வெளியிடுவதில் சிரமங்கள் ஏற்படலாம்.

போராட்டங்களைக் கடந்து சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

கும்பம்

புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வேற்றுமொழிக்காரர்களால் நிம்மதி அடைவீர்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், உங்கள் ரசனைக்கேற்ப சொத்து வாங்குவீர்கள். 17-ம் தேதி வரை குரு 11-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தடைகள் நீங்கும். சனிபகவான் வலுவாக இருப்பதால், வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். செவ்வாய் வலுவாக நிற்பதால், வி.ஐ.பி-கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள். கலைத்துறையினரே! விமர்சனத்தைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

முகமலர்ச்சியுடன் செயல்படும் நேரம் இது.

ராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை

மீனம்

புதன் சாதகமாக நிற்பதால் சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். 14 -ம் தேதி வரை, 2 -ல் சூரியன் அமர்ந்திருப்பதால் கண் எரிச்சல், நெஞ்சு வலி, படபடப்பு, வீண் அலைச்சல் வந்து போகும்.

15-ம் தேதி முதல் சூரியன் சாதகமாவதால் தைரியம் பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. 17-ம் தேதி வரை, குரு 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல், பயம் வந்து நீங்கும். சனி வலுவாக இருப்பதால் மனோ பலம் அதிகரிக்கும். செவ்வாய் 4-ல் அமர்ந்திருப்பதால் வசதி பெருகும். வியாபாரத்தில் நவீன வசதிகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். உத்தியோகத்தில் வீண் பழி விலகும். கலைத்துறையினரே! உங்களின் சம்பளம் உயரும்.

தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றி காணும் நேரம் இது.

- ‘ஜோதிட ரத்னா’ முனைவர்  கே.பி.வித்யாதரன்