Published:Updated:

உங்கள் மனையில் நீரோட்டம் எப்படி?

உங்கள் மனையில் நீரோட்டம் எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் மனையில் நீரோட்டம் எப்படி?

உங்கள் மனையில் நீரோட்டம் எப்படி?

உங்கள் மனையில் நீரோட்டம் எப்படி?

உங்கள் மனையில் நீரோட்டம் எப்படி?

Published:Updated:
உங்கள் மனையில் நீரோட்டம் எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் மனையில் நீரோட்டம் எப்படி?

னதில் மிக ஆழமாகவும், விதியின் சூட்சுமமா கவும் மறைந்துள்ள விஷயங்களை ஜோதிடம் எவ்வாறு வெளிக்கொண்டு வருகிறதோ, அதுபோல் பூமியின் அடியிலுள்ள நீரோட்டம் குறித்த அரிய தகவல்களையும் சொல்கின்றன சில ஜோதிட நூல்கள்.

•  மய மதம் எனும் நூலில், பூமிக்கடியில் உள்ள நீரோட்டத்தை அறியும் நுட்பத்தை ‘தொடு குறி’ என்ற பெயரில் விவரிக்கிறார், மயன்.

சிறுவன் ஒருவனை கிழக்கு நோக்கி நிற்கச் செய்யவேண்டும். மற்றொரு சிறுவனைக் கொண்டு முதலாமவனின் உடலைத் தொடச் சொல்ல வேண்டும். அப்போது இரண்டாவது சிறுவன் முதலாமவனின் தலை, தோள் மற்றும் உடலின் வடமேற்கு பாகத்தில் தொட்டால், அந்த இடத்தில் நிலத்துக்கு அடியில் 7 முழம் அளவிலான ஆழத்தில் தண்ணீர் உண்டு. அதேபோல் முகம், கண், தொடை ஆகியவற்றைத் தொட்டாலும் 7 முழ ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும்.

உங்கள் மனையில் நீரோட்டம் எப்படி?

கழுத்து, நெற்றி, வலது கால் ஆகிய இடங்களில் தொட்டால், 11 முழ ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும். மார்பு, தென்கிழக்கு பாகங்களில் தொட்டால், அதிக ஆழம் தோண்ட வேண்டியதிருக்கும். விரல் மற்றும் உடலின் தென்கிழக்கு பாகங்களில் தொட்டால், 9 முழம் ஆழத்திலும், இடுப்பு, பாதம் ஆகிய பகுதிகளைத் தொட்டால் அந்த இடத்தில் நீர் இல்லை எனவும் அறியமுடியும் என்கிறார் மயன்.

• கூவ சாத்திரம் என்றொரு நூல் மரம், செடிகொடிகள், புற்றுகள் ஆகியவையும் நீரூற்று காண வழிகாட்டிகளாக உதவும் என்கிறது. அவற்றில், புற்றுகளின் அமைவின் அடிப்படையிலான தகவல்கள் அற்புதமானவை. கொண்டை இடப்பட்ட பெண்களின் கூந்தல் போன்று நீண்டு உயரமாக இருக்கும் புற்று, கொடிப் புற்று. அதன் கீழ் சுமார் 20 அடி ஆழம் தோண்டினாலே நீர் பெருகும். மேலும் 5 அடி தோண்டினால் நிலத்தடியில் பெரிய ஓடையே பாய்வதை அறியலாம் என்றும் தகவல் உண்டு.

உருண்டையான அமைப்பில் தாழ்ந்து அமைந்துள்ள புற்று, பிட்டான் புற்று எனப்படும். அங்கு தோண்டினால், சுமார் 16 சாண் அளவு ஆழத்திலேயே நீர் கிடைக்கும். பெரிய துளை களுடனும் கூம்புகளுடன் திகழும் புற்று ‘ஆயிலைப் புற்று’. இந்த இடத்தில் 12 சாண் அளவு ஆழத்திலேயே நல்ல தண்ணீர் கிடைக்கும் என்கிறது கூவசாத்திரம்.

• பசு-கன்றினை மனையில் மேயவிடுவார்கள். அந்தப் பசு சிறுநீர் கழிக்கும் இடத்தில் தோண்டினால், தண்ணீர் கிடைக்கும்; சாணம் இடும் இடத்தில் கற்பாறைகள் அதிகம் இருக்கும். எனவே, அந்த இடத்தைத் தோண்டமாட்டார்கள்.

• முதல் நாள் மாலை நேரத்தில் கிணறு அல்லது போர்வெல் அமைக்க விரும்பும் இடத்தில் மல்லிகைப் பூக்களைப் போட்டுவைத்து, வைக்கோல் கொண்டு மூடிவிடுவார்கள். மறுநாள் காலையில் பூக்கள் வாடாமல் இருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்டலாம்; இல்லையெனில் தோண்டக்கூடாது என்று முடிவு செய்வார்கள்.

- சுப்ரமணிய சாஸ்திரிகள்