
ராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை

மேஷம்: நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவருக்கு ஆலோசனைகளை வழங்குவீர்கள். அவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். விலையுயர்ந்த வாகனம், ஆபரணம் வாங்குவீர்கள். ஆனாலும், நீங்கள் சாதாரணமாகப் பேசிய சில விஷயங்கள் மனஸ்தாபத்தில் முடியலாம். எல்லோரையும் அனுசரித்துப் போகவும். பிள்ளைகளின் உயர்கல்விக்காகக் கொஞ்சம் அலைய நேரிடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். ஆளுமைத்திறன் அதிகரிக்கும் நேரமிது.

ரிஷபம்: மனத்தில் உற்சாகம் பிறக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நிலம், வீடு வாங்குவது விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். பழுதான சமையலறைச் சாதனங்களை மாற்றுவீர்கள். சகோதரிக்கு உதவிகரமாக இருப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காகக் கொஞ்சம் செலவு செய்ய நேரிடும். சில செயல்கள் தடைபட்டு நிறைவேறும். மாமனார், மாமியாருடன் கருத்து மோதல்கள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நேரமிது.

மிதுனம்: சோம்பல், அசதி நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய உறவினர்கள், தோழிகளின் வருகையால் வீடு களைகட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். கணவர் பாசமழை பொழிவார். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப புதிய வீடு அமையும். ஆபரணம் வாங்குவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். மாமனார், மாமியார் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். விடாமுயற்சி வெற்றி தரும் நேரமிது.

கடகம் : புதிய திட்டங்கள் நிறைவேறும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் உண்டு. சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவர் உங்களைப் பாராட்டுவார். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். அவர்களின் உயர்கல்வியும் சிறப்பாக அமையும். மாமனார், மாமியாருக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
வசதி, வாய்ப்புகள் கூடும் நேரமிது.

சிம்மம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவி உறவு பலப்படும். மகனுக்கு நல்ல இடத்தில் மணப்பெண் அமைவார். மகளின் பிடிவாத குணம் மாறும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். நாத்தனார், மாமியார் மதிப்பார்கள். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் மனம் திருந்துவார்கள். கோயில் விழாவை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியந்து பாராட்டுவார். திறமைகள் அதிகரிக்கும் நேரமிது. முக்கியச் சந்திப்புகளால் முன்னேறும் நேரமிது.

கன்னி: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். மனத்தில் நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிள்ளைகள், குடும்பச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உறவினர்கள், தோழிகளுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாமியார் உங்களை விமர்சிப்பார். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அலைச்சல் இருக்கும்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் அதன் சூட்சுமங்களை உணர்ந்துகொண்டு செயல்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரமிது.

துலாம்: எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளை ஆதரிப்பார். மகளுக்கு, மாப்பிள்ளை தேடுவதில் தீவிரம் காட்டுவீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். விலகி நின்ற சொந்தங்கள் விரும்பி வருவார்கள். டி.வி, ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். சுற்றுலா சென்றுவருவீர்கள். குற்றம், குறை கூறிக்கொண்டிருந்தவர்கள் மனம் மாறுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய கிளையைத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நேரமிது.

விருச்சிகம்: நினைத்தது நிறைவேறும். பணவரவும் உண்டு. எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதிய வேலை சிலருக்கு அமையும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். மகனுக்கு உங்கள் ரசனைக்கேற்ற மணப்பெண் அமைவார். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். மாமியாரின் ஆதரவு உண்டு. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். பிள்ளைகளின் உயர்கல்வி பற்றிய உங்களின் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முடங்கிக்கிடந்த பணிகளை முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிகழும் நேரமிது.

தனுசு: தொட்ட காரியங்கள் யாவும் வெற்றிபெறும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். கைம்மாற்றாக வாங்கியிருந்த பணத்தைக் கொடுத்து முடிப்பீர்கள். வீட்டுமனை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். கணவர், உங்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு நடப்பார். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் மதிப்பு கூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். மாமியாரின் பாராட்டைப் பெறுவீர்கள். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் கமிஷன் வகையில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள்மீது சுமத்தப்பட்ட பழி விலகும். சமயோஜித புத்தி தேவைப்படும் நேரமிது.

மகரம்: மனத்திலிருந்த குழப்பம் விலகும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சொத்துப் பிரச்னைக்குச் சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு வரும். மாமியார் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார். சொத்துப் பிரச்னை தீரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிலும் எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செயல்படுங்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் போடுவீர்கள். உத்தியோகத்தில் அதிக சம்பளத்துடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நேரமிது.

கும்பம்: உங்கள் மீது சுமத்தப்பட்ட பழி, வதந்தி விலகும். வி.ஐ.பி-க்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணபலம் உயரும். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த பிரச்னைகள் தீரும். பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்றுசேரும். கணவரின் பாராமுகம் மாறும். பாசமழை பொழிவார். இயக்கம், சங்கம் இவற்றில் உயர் பதவிகள் தேடி வரும். பிள்ளைகளின் ஓவியம், இசைத்திறமையை வளர்ப்பீர்கள். மாமியார், நாத்தனாரால் ஏற்பட்ட தொந்தரவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய தொடர்பால் ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். கடின முயற்சியால் காரியத்தை முடிக்கும் நேரமிது.

மீனம்: குடும்பத்திலிருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். அறிவுபூர்வமாகப் பேசுவீர்கள். தடைபட்ட வேலைகள் உடனே முடியும். பழைய நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். புதிய இடத்தில் வீடு கட்ட தொடங்குவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், வருங்காலத்தைப் பற்றிய பயம் வரும். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வரும் நேரமிது.
- `ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்