Published:Updated:

இந்த வார ராசிபலன் மார்ச் 4 முதல் 10 வரை

இந்த வார ராசிபலன் மார்ச் 4 முதல் 10 வரை
இந்த வார ராசிபலன் மார்ச் 4 முதல் 10 வரை

மேஷராசி அன்பர்களே!
வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரியச் சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்க முடியாது. வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்க வேண்டிவரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்புத் தருவார்கள்.

கலைத்துறையினர் சற்று சிரத்தையுடன் முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.

மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.
 

அதிர்ஷ்ட நாள்கள்: 4,5,6
அதிர்ஷ்ட எண்கள்: 1,4,5
வழிபட வேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை ஏற்படக் கந்தர் அனுபூதியில் உள்ள கீழ்க்காணும் பாடலைத் தினமும் பாராயணம் செய்யலாம்.

எந்தாயும், எனக்கு அருள் தந்தையும் நீ,
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்,
கந்தா கதிர்வேலவனே உ மையாள்
மைந்தா குமரா மறை நாயகனே. 

ரிஷபராசி அன்பர்களே!
பணவரவுக்குக் குறைவிருக்காது. ஆனால், எதிர்பாராத சுபச் செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால், சிலருக்குக் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால் அவர்களுடன் அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றச் செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்படுவதுடன், அதன் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பும் உண்டாகும்.

அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதன் காரணமாக சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சிரத்தையுடன் படிப்பீர்கள். அதன் மூலம் தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.
 

அதிர்ஷ்ட நாள்கள்: 5, 6,7, 9
அதிர்ஷ்ட எண்கள்: 1,2,7
வழிபடவேண்டிய தெய்வம்: மீனாட்சி அம்மன்


பரிகாரம்: குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் சோர்வு நீங்கவும், உற்சாகமாகப் பொறுப்புகளை நிறைவேற்றவும் அபிராமி அந்தாதியிலுள்ள கீழ்க்காணும் பாடலைத் தினமும் பாராயணம் செய்யலாம்.

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!

மிதுனராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவைப்படும். பணியின் காரணமாகச் சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வெளியில் உண்பதையோ நேரம் தவறி உண்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணை வழியில் சில ஆதாயங்கள் ஏற்படக்கூடும். 

அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். சிலருக்கு இருக்கும் இடத்திலிருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளை நல்லபடி எழுதுவதற்குத் தேவையான ஆலோசனைகளும் உதவிகளும் கிடைக்கும்.

குடும்ப நிர்வாகத்தைக் கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
 

அதிர்ஷ்ட நாள்கள்: 7, 9, 10
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச்  4, 5

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

பரிகாரம்: மனதில் தெளிவும் செயல்களில் விவேகமும் பெற்றிட அனைவரும் பேயாழ்வார் அருளிய கீழ்க்காணும் பாசுரத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் 
அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும் 
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன், 
என்னாழி வண்ணன்பால் இன்று. 

கடகராசி அன்பர்களே!
எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புகழ் பெற்ற புனிதத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். 

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்க வேண்டி இருக்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மாணவர்கள் மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு, அதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். ஆசிரியரின் அறிவுரை கேட்பதன் மூலம் மன அமைதி பெறலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 4, 10
அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 9
சந்திராஷ்டம நாள்: மார்ச்  5 மாலை முதல் 6, 7
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கவும், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெறவும், பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்றிருக்கும் கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்


கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி 
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய் 
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச் 
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம். 

சிம்மராசி அன்பர்களே!
குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது.

புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபட வேண்டி வரும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.

கலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் சிரத்தையுடன் படிப்பீர்கள். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
 

அதிர்ஷ்ட நாள்கள்: 4, 5
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச்  8, 9
வழிபட வேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை

பரிகாரம்: கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்க, அபிராமி அந்தாதியிலுள்ள கீழ்க்காணும் பாடலைத் தினமும் பாராயணம் செய்யலாம்.

வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை --விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே

கன்னிராசி அன்பர்களே!

பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் சற்று பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் சில தடைகள் ஏற்பட்டு விலகும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.
 

அதிர்ஷ்ட நாள்கள்: 5, 6, 7
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
சந்திராஷ்டம நாள்: மார்ச்  10
வழிபட வேண்டிய தெய்வம்: சிவபெருமான்


பரிகாரம்: குடும்பத்தில் உறவினர்களாலும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களாலும் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, திருஞானசம்பந்தர் சீர்காழிப் பதியில் அருளிய பதிகத்திலுள்ள கீழ்க்காணும் பாடலைத் தினமும் பாராயணம் செய்யலாம்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

துலாராசி அன்பர்களே!
நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வார முற்பகுதியில் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாரப் பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கா தீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.
வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவர்களுக்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு  அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.
 

அதிர்ஷ்ட நாள்கள்: 8, 9, 10
அதிர்ஷ்ட எண்கள்: 6,7,9
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: உடல் ஆரோக்கியம் மேம்படவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலைத்திருக்கவும் அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரத்தில் இடம் பெற்றிருக்கும் கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

விருச்சிகராசி அன்பர்களே!

அதிர்ஷ்டம் தரும் வாரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் உங்களின் கௌரவம் உயரும்.

 அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சக பணியாளர்கள் பணிகளில் உதவி செய்வார்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவிக் கிடைக்கும்.

கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மாணவர்கள் சிரத்தையுடன் கண்விழித்துப் படிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். அவ்வப்போது சற்று ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகள் கிடைக்கும்.
 

அதிர்ஷ்ட நாள்கள்: 4,5,10
அதிர்ஷ்ட எண்கள்:1,4,9

வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி

பரிகாரம்: கலைத்துறை அன்பர்கள் வேண்டி விரும்பியபடி வாய்ப்புகளைப் பெற்றிட, அபிராமி அந்தாதியில் உள்ள கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் 
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத் 
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்-- 
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே

தனுசுராசி அன்பர்களே! 
வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்குச் சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உடனே சரியாகி விடும். குடும்பம் தொடர்பான. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ  நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

கலைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. மனதை அலைபாய விடாமல் பாடங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக் கூடும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
 

அதிர்ஷ்ட நாள்கள்: 5,6,7
அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6
வழிபடவேண்டிய தெய்வம்: சரஸ்வதி 

பரிகாரம்: மாணவர்கள் மனச் சஞ்சலம் நீங்கி, பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த  கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதியில் உள்ள கீழ்க்காணும் பாடலைத் தினமும் பாராயணம் செய்யலாம்.

படிகநிறமும் பவளச் செவ் வாயும்
கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி

மகரராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.

கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு. சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை. சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு  சந்தோஷமும் நிம்மதியும் தரும்  வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சலுகைகள் கிடைக்கும். 
 

அதிர்ஷ்ட நாள்கள்: 7, 9, 10
அதிர்ஷ்ட எண்கள்:2,5,6
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.

பரிகாரம்: சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நல்லபடி நிறைவேறத் திருஞானசம்பந்தர் திருமருகலில் அருளிய பதிகத்தில் உள்ள கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே

கும்பராசி அன்பர்களே!
பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச்  செல்வது நல்லது.

மாணவர்கள்  தேவை இல்லாமல்  வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
 

அதிர்ஷ்ட நாள்கள்: 6, 9, 10
அதிர்ஷ்ட எண்கள்: 1,3,7
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கவும், உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகவும் கச்சியப்ப சிவாசார்யார் அருளிய காரியசித்தி மாலையில் உள்ள  கீழ்க்காணும் பாடலைத் தினமும் பாராயணம் செய்யலாம்.

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்

மீனராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும்.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபடச் சாதகமான வாரம்.

அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்கக்கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவு படுத்துவீர்கள்.

கலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.

மாணவர்கள்  படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவியையும் ஆசிரியர்கள் தருவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 4, 5, 7, 9
அதிர்ஷ்ட எண்கள்: 1,2,4
வழிபடவேண்டிய தெய்வம்: அகிலாண்டேஸ்வரி

பரிகாரம்: வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்க, அபிராமி அந்தாதியில் இடம் பெற்றிருக்கும் கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!