தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

மேஷம்: புதிய முயற்சிகள் வெற்றிபெறும். இழுபறியாக இருந்த வேலைகள் எளிதில் முடியும். பண வரவு திருப்தி தரும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். கணவர் உங்களுக்காகப் பரிந்துபேசுவார். பூர்வீகச் சொத்து வழக்கு முடிவுக்கு வரும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. வழக்குகள் சாதகமாகும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி, அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். விடாமுயற்சியால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

ரிஷபம்: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கணவர், உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும், பிறகு ஏற்றுக்கொள்வார். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீகச் சொத்தில் உங்களுக்கான பங்கைக் கேட்டு பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வந்து உதவுவார்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். புதிய கிளை ஒன்றைத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்க்கவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. அரசு வகையில் வருமானம் கிடைக்கும். கணவர் உங்களின் திறமையைப் பாராட்டுவார். புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரைக் கவருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். சொந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் வாங்கும்போது தேவையான தொகையை மட்டும் வாங்குவது நல்லது. வியாபாரத்தில் தொழில்நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

கடகம்: செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நிலம், வீடு வாங்க, வங்கிக்கடன் கிடைக்கும். வாகன வசதி பெருகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் பிள்ளைகளுக்கு உயர்கல்வி அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலியவந்து பேசுவார்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களை மாற்றுவீர்கள். அனுபவமிக்கவர் பக்கபலமாக இருப்பார். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

சிம்மம்: புதிய முயற்சிகள் வெற்றி பெறும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். மனத்தில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். புதிய பயிற்சி வகுப்புகளில் பிள்ளைகளைச் சேர்ப்பீர்கள். பழைய வீட்டை விற்று, புதிய இடம் வாங்குவீர்கள். நாத்தனாருக்குத் திருமணம் நிச்சயமாகும். பதவிகள் தேடி வரும். புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உறவினர்கள், தோழிகளால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத்தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிரச்னைகளைத் தீர்க்கும் நேரமிது.

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

கன்னி: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். மனஉறுதியுடன் சவால்களைச் சமாளிப்பீர்கள். மாமியார் உதவிகரமாக இருப்பார். கணவரிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். சொத்து விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. சகோதர வகையில் ஆதரவு பிறக்கும். உடல்நலனில் கவனம் தேவை. நகைகளை  மற்றவர்களுக்கு இரவல் தர வேண்டாம். வாகனப் பழுது ஏற்பட்டு நீங்கும். நாத்தனாரின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். பொறுமை தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

துலாம்: தீர்க்க முடியாமல் இருந்த பிரச்னைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கணவருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்கில் திருப்பம் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்திலும் உறவினர்கள் மத்தியிலும் மதிப்பு உயரும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை கிடைக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் மலர்ச்சியான போக்கு நிலவும். வர்த்தகத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வு வரும். மற்றவர்களால் புகழப்படும் நேரமிது.

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

விருச்சிகம்: கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வழக்குகளில் சுமுகத் தீர்வு கிடைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். கணவர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாமியார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பேசிப் பழகுவது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

தனுசு: முக அழகு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். பிள்ளைகளின் அலட்சியப்போக்கு மாறும். பழுதான பொருள்களை மாற்றுவீர்கள். சகோதரர் மனம்விட்டுப் பேசுவார். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மாமியார், நாத்தனார் உங்களின் திறமையைக்கண்டு அதிசயிப்பார்கள். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்தவர்கள் உங்களிடமிருந்து விலகுவார்கள். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும் நேரமிது.

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

மகரம்: சோர்வு நீங்கி, துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. வாகன வசதிகள் பெருகும். கணவருக்குத் தொழில் முன்னேற்றம் உண்டு. உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி சம்பந்தப்பட்ட பிரச்னை சாதகமாக முடியும். மாமியாரிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவருவீர்கள். கிடைக்கிறதே என்று அதிகமாகக் கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்குரிய அங்கீகாரம் தாமதமாகக் கிடைக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

கும்பம்: தாமதமான வேலைகள் தடங்கலின்றி முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். கணவரிடம் பக்குவமாகப் பேசி அவரின் திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். அரசாங்க பிரச்னைகள் நல்லவிதமாக முடியும். வழக்குகள் சாதகமாகத் திரும்பும். மாமியார், நாத்தனார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். கடனைத் தீர்க்க புதிய வழி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களை மாற்றுவீர்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். எதிர்பார்த்த நிலுவைத் தொகை கைக்கு வரும். நினைத்த காரியத்தில் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் எளிதாக நிறைவேறும். அரசு வகையில் வருமானம் உண்டு. நீண்ட நாள்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். கணவர் உங்களின் மனதுக்கேற்றபடி நடந்துகொள்வார். பிள்ளைகளின் நட்புவட்டம் விரிவடையும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். மாமியார் உங்களின் செயலைப் பாராட்டுவார். சொந்தங்களால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.
வாக்குவன்மையால் வெற்றிபெறும் நேரமிது.

- `ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்