ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

வீடு-மனை யோகம்!

வீடு-மனை யோகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வீடு-மனை யோகம்!

தொகுப்பு: சுந்தர், சென்னை-44

வீடு-மனை யோகம்!

ருவரது ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் (ஜன்ம லக்னத்தில் இருந்து) நவகிரகங்களில் ஒன்றான சூரியன் அமைந்திருப்பின், அவரது ஆயுளின் மத்திய காலத்துக்குப் பிறகே வீடு வாசல் நன்கு அமைய வாய்ப்பு உண்டு. பெற்றோர் மீது வாஞ்சை இருக்கும். அதேநேரம், குடும்ப அங்கத்தினரின் ஒத்துழைப்பு  கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு எத்தகைய வீடு அமையப் பெற்றாலும் உடல் ஆரோக்கியம், அவ்வப்போது லேசான பாதிப்புக்கு உள்ளாகும். ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜன்ம லக்னத்திற்கு 4-ம் வீட்டில் சந்திரன் அமையப்பெற்றிருந்தால், அவர்கள் எத்தகைய வீட்டில் வசித்தாலும், சுகபோகங்களை அனுபவிப்பதில் தடை ஏற்படாது. ஆனால், அடிக்கடி இடம் மாறி வாழவேண்டி வரலாம். ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் அமைந்திருப்பின் நல்ல வீடு-மனை யோகங்கள் உண்டு. அதேநேரம், மற்றவர்களுடன் இவர்கள் அனுசரித்துச் செல்வது கடினம். குரு பார்வை ஏற்பட்டால் நல்ல வீடு, மனை யோகம் கிட்டும். கெட்ட கிரகங்களின் பார்வை இருப்பின், வாஸ்து சாஸ்திரப்படி அமைந்த வீட்டில் வாழ்ந்தாலும் அமைதி கிடைக்காது.

வாஸ்து தோஷம் நீங்கும்!

டுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர் கள் அல்லது ஏற்கெனவே  கட்டப்பட்ட வீட்டை வாங்கி குடியேறுபவர்களுக்கு, அந்த வீட்டின் வாஸ்து அமைப்பு குறித்து சஞ்சலம் எழலாம். வாஸ்துக் குறைபாடுகள் இருந்தாலும் மாற்றி அமைக்க முடியாத நிலையில் தவிப்பார்கள்.

இந்த நிலையில், ‘பஞ்ச சிர ஸ்தாபனம்’ எனும் யந்திரத்தை வெள்ளியிலோ தங்கத்திலோ  அல்லது தாமிரத் தகட்டிலோ தயார் செய்து, வீட்டின் தலைவாயிலில் ஸ்தாபித்து, வாஸ்து பூஜை செய்தால் போதும். சிங்கம், ஆமை, பன்றி, யானை, ஆண் எருது ஆகிய ஐந்து விலங்குகளின் (தலைகள்) உருவங்கள் பொறிக்கப்பட்ட இந்த யந்திரம், சகல வாஸ்து குறைபாடுகளையும் நீக்கவல்லது.

போர்வெல் எங்கு அமைக்கலாம்?

பிளாட்டில் போர்வெல் அல்லது கிணறு அமைக்க விரும்பினால், கட்டடத்துக்கும் மதிலுக்கும் இடையில் அமைந்த காலியிடத்தில், கீழ்க்காணும் திசைகளில் அமைக்கவேண்டும்.

1. பிளாட்டில் ஈசானிய மூலை அதாவது வடகிழக்கு.

2. வடக்கில் சரிபாதிக்கு மேல் கிழக்கு பாகத்தில்.

3. கிழக்கில் சரிபாதிக்கும் மேல் வடக்கு பாகத்தில்.

அதேபோல், கட்டடம் கட்டுவதற்கு நமது பிளாட்டில் அமைத்த போர்வெல் அல்லது கிணற்றிலிருந்து எடுத்த நீரை முதலில் பயன்படுத்துவது மிக விசேஷம்.