தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

மேஷம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்கு சாதகமாகும். உங்கள் மனம்கோணாமல் கணவர் நடந்துகொள்வார். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். சகோதர வகையில் நல்லது நடக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். சமையலறையைப் புதுப்பிப்பீர்கள். வீட்டைக்கட்டி முடிப்பீர்கள். மாமியார், நாத்தனார் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகத்தில் நிலுவைத் தொகை கைக்கு வரும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

ரிஷபம்: அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மன இறுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். கணவருடன் இருந்த மனத்தாங்கல்கள் விலகும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். எதிர்பார்த்த அளவுக்குப் பணம் வராவிட்டாலும் ஓரளவு வரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நாத்தனாரின் ஆதரவு கிடைக்கும்.

வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. புதிய முதலீடு பற்றி ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். முன்னெச்சரிக்கையாகச் செயல்படும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

மிதுனம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். ஆன்மிகப் பயணங்களால் ஆறுதல் கிட்டும். சொந்த பந்தங்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். உறவினர்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். அரசாங்க விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடல்நலத்தில் அக்கறை தேவை.

வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

கடகம்: செலவுகள் அதிகரிக்கும். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். கணவர் மிகவும் அன்பாக இருப்பார். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச்சென்ற தோழிகள் வலியவந்து பேசுவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். உங்களின் வேலைகளை மாமியார், நாத்தனார் பகிர்ந்துகொள்வார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்துகொண்டிருக்கும்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சிக்கனம் தேவைப்படும் காலமிது.

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

சிம்மம்: வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புது வீடு கட்டி சிலர் குடிபுகுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பிரிவில் உயர்கல்வி அமையும். சொத்து வாங்குவீர்கள். கௌரமிக்க பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். லாபம் பெருகும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். நீண்ட நாள் கனவு நனவாகும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

கன்னி: உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். விழாக்கள்,  சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். சொத்தில் மாற்றம் செய்வீர்கள். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். பிள்ளைகளின் மனத்திலிருக்கும் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் உண்டு. சகோதர வகையில் இருந்த மன வருத்தம் நீங்கும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மௌனத்தால் மதிப்புகூடும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

துலாம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். திருமண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள், தோழிகளின் பாசமான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள்.

வியாபாரத்தில் புதிய கிளை தொடங்குவீர்கள். லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முடிக்காமல் இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்களால் மகிழ்ச்சியடையும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

விருச்சிகம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள், தோழிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பழுதான சமையலறைச் சாதனங்களை மாற்றுவீர்கள். பூர்வீக சொத்தைச் சீர்செய்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும். கணவரின் வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்வீர்கள். சாதுர்யமான பேச்சால் சிக்கலான பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. செலவுகளைக் குறைக்கவேண்டிய நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

தனுசு: நினைத்தது நிறைவேறும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புது வீடு வாங்குவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வருமானம் உயரும். கணவர் உங்களை நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார். மகளுக்குத் தீவிரமாக வரன் தேடுவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை அமையும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும்.

வியாபாரத்தில் தெளிவு பிறக்கும். முக்கியமானவற்றில் முதலீடு செய்வீர்கள்.உத்தியோகத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்கவைப்பீர்கள்.கடும்முயற்சியால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

மகரம்: எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். பாதியில் நின்ற கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். தள்ளிப்போன விஷயம் ஒன்று உடனே முடிவுக்கு வரும். அழகும் முகப்பொலிவும் கூடும். கணவன் மனைவிக்குள் பரஸ்பர புரிந்துகொள்ளல் இயல்பாக நடக்கும். மின்சாதனப் பழுதை சரி செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். மாமியார் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்.

வியாபாரத்தில் வேலையாட்களின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டி அன்பாகத் திருத்துங்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

கும்பம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அறிஞர்களின் நட்பால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்தால் வருமானம் கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பள்ளி, கல்லூரி கால தோழியைச் சந்திப்பீர்கள். நேர்த்திக்கடனைச் செலுத்துவீர்கள். நாத்தனார், மச்சினருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.

வியாபாரத்தில் பணியாளர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். செல்வாக்கு கூடும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை

மீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவர் சில நேரங்களில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்வார். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக நடந்துகொள்வார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பூர்வீக சொத்து ஒன்றை விற்பதன் மூலமாக பணம் வரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொடங்குவீர்கள்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சலுகைகளும் சம்பள உயர்வும் கிடைக்கும். திட்டமிட்டு செலவு செய்யவேண்டிய நேரமிது.

-`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்