Published:Updated:

பங்குனி மாத ராசிபலன் - மேஷம் முதல் கன்னி வரை #Astrology

பங்குனி மாத ராசிபலன்  - மேஷம் முதல் கன்னி வரை  #Astrology
பங்குனி மாத ராசிபலன் - மேஷம் முதல் கன்னி வரை #Astrology

பங்குனி மாத கிரகநிலைகள்:

மேஷ ராசி அன்பர்களே...

12-ல் சூரியன்; 1, 2-ல் செவ்வாய்; 3-ல் ராகு; 9-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 10, 11-ல் சுக்கிரன்; 11,12-ல்  புதன்

பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபர ணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு தாய்வழி உறவினர்கள் வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. மாதப் பிற்பகுதியில் ஓரளவு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும்  வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். பாராட்டுகளும் பரிசுகளும் பெறும் வாய்ப்பு ஏற்படும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள்.

மாணவர் - மாணவியர்க்கு மாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும்.  பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்திப் படிப்பது நல்லது. அப்போதுதான் தேர்வுகளில்  நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும்.உறவி னர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்புத் தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 15, 16, 21, 22, 23, 24, 30, 31, ஏப்: 1, 2, 6, 7, 8, 11, 12
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 25, 26, 27

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வதும், பிரதோஷத்தன்று நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நன்மைகளைத் தரும்.

ரிஷப ராசி அன்பர்களே...

11-ல் சூரியன்; 12, 1-ல் செவ்வாய்; 2-ல் ராகு; 8-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 9, 10 -ல் சுக்கிரன்; 10, 11-ல் புதன்
வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வீடு, மனை வாங்கும்  முயற்சியில் தற்போது ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். முக்கிய முடிவுகளைத் துணிச்சலுடன் எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைத்தாலும், சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மாணவ - மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 17, 18, 23, 24, 25, 26, 27, ஏப்: 1, 2, 3, 4, 5, 9, 10, 13 
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 28, 29

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடும், ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் வழிபாடும் நலம் சேர்க்கும்.

மிதுன ராசி அன்பர்களே...


10-ல் சூரியன்; 11, 12-ல் செவ்வாய்; 1-ல் ராகு; 7-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 8, 9 -ல் சுக்கிரன்; 9,10-ல் புதன்

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.  சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப் பாகத் தவிர்க்கவும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், மாதப் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். வதந்திகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.

மாணவ - மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 15, 16, 19, 20, 25, 26, 27, 28, 29, ஏப்: 3, 4, 5, 6, 7, 8, 11, 12
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 30, 31

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், மகான்களின் அதிஷ்டானங்களைத் தரிசிப்பதும் நன்மை தரும்.

கடக ராசி அன்பர்களே...

9 -ல் சூரியன்; 10,11-ல் செவ்வாய்; 12-ல் ராகு; 6-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 7, 8 -ல் சுக்கிரன்; 8, 9-ல் புதன்

பொருளாதார வசதி திருப்தி தருவதாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வசதி வாய்ப்புகளுக்குக் குறைவு இருக்காது. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாதப் பிற்பகுதியில் உங்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் விலகும். குடும்பத்தில் மனைவி மற்றும் மகளின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். சக ஊழியர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது. 

தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

மாணவ - மாணவியர்க்கு கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். நண்பர்களுடன் பழகுவதில் மிகவும் கவனம் தேவை. சந்தேகங்களை அவ்வப் போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 17, 18, 21, 22, 28, 29, 30, 31, ஏப்: 6, 7, 8, 9, 10, 13
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்: 1, 2

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட நன்மை ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே...

8 -ல் சூரியன்; 9, 10 -ல் செவ்வாய்; 11-ல் ராகு; 5-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 6,7 -ல் சுக்கிரன்; 7, 8-ல் புதன்

பொறுமையுடன் இருக்கவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாத முற்பகுதியில் தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும்.

ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு வெளி மாநிலங்களிலுள்ள கோயில்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். சிலர் கடன் வாங்கவும் நேரிடும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். இரவுநேரப் பயணங்களைத் தவிர்த்துவிடவும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை சற்று பொறுமையுடன் கையாளவேண்டியது அவசியம். சிலருக்கு ஷேர் மூலம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். 

தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும். 

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண் கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.  சக மாணவர் களிடம்  பழகுவதில் கவனம் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குக் குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.  அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 15, 16, 19, 20, 23, 24, 30, 31, ஏப்: 1, 2, 9, 10, 11, 12
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்: 3, 4, 5

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே... 

7 -ல் சூரியன்; 8, 9 -ல் செவ்வாய்; 10-ல் ராகு; 4-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 5, 6 -ல் சுக்கிரன்; 6, 7-ல் புதன்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்கும்  தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனாலும், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே  கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. ஆனால், மாதக் கடைசியில் அவர்களில் சிலரால் பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தை அனுகூலமாக முடியும். 
உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அவர் கோபத்தில் எதுவும் கூறினாலும், மௌனமாக இருப்பது பிற்காலத்துக்கு நல்லது.

தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். புதிய முயற்சிகளை இந்த மாதத்தில் மேற்கொள்ளவேண்டாம். அரசாங்கக் காரியங்கள் தாமதமாக முடியும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன் படுத்திக் கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

மாணவ - மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கஷ்டப் பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். 

அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச் 15, 16, 17, 18, 21, 22, 25, 26, 27, ஏப்: 1, 2, 3, 4, 5, 11, 12, 13
சந்திராஷ்டம நாள்கள்: 6, 7, 8

பரிகாரம்: விநாயகருக்குத் தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். 

துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான பலன்களைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.